Saturday, September 30, 2023

EMPTY BOAT GEN STORY காலி படகு ஜென் கதை

CHUANG TZU

காலி படகு

THE EMPTY BOAT

(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது.தாவொ வின் சிந்தனைகள் பற்றி சொல்லும் கதை. இதனை எழுதியவர் தாவொ சிந்தனையாளர் சுவாங்க் சு (CHUANG TZU) என்பவர், 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த கதை அவருடைய பிரபலமான கதைகளில் ஒன்று)

 ஜென் துறவிகள் என்றாலே வித்தியாசமான துறவிகள் என்று அர்த்தம். அவர்களின் நடை உடை பாவனைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஜென் துறவிகளில் வித்தியாசமாக ஒரு துறவி இருந்தார் அவரை கோபம் வராத துறவி என்று சொல்லுவார்கள்.

நிறைய பேர் அவரைப் பார்க்க வருவார்கள் வந்து அவரிடம் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை பெறுவார்கள். கோபம் வராமல் இருக்க என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

 கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் இருக்கலாமா ? அப்போது மட்டும் கோபப்படலாமா ? இப்படி எல்லாம் கூட அவரிடம் எக்கு முடக்காக கேள்விகளை கேட்பார்கள்.

 இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் எப்படி கேட்டாலும் என்ன கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்லுவார். இந்த கோபம் வராத சாது சாமியார்.

 இவர் ஒரு ஜென் துறவி என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஜென் துறவிகள் அனைவருமே வித்தியாசமாக இருப்பார்கள். ஜென் கதைகளும் அதுபோல வித்தியாசமாகவே இருக்கும்.

 சராசரியாக இருக்கும் கதைகளில் ஒரு தொடக்கம் இருக்கும். அதன் தொடர்ச்சி இருக்கும். அதற்குப் பிறகு ஒரு எதிர்பாராத அல்லது சுவையான ஒரு முடிவு இருக்கும். அது போன்ற ஃபார்முலா கதைகளை ஜென் கதைகளில் எதிர்பார்க்க முடியாது.

 சில சமயங்களில் இது ஒரு கதையா என்று கூட யோசிக்க தோன்றும். இந்த கதை முடிந்து விட்டதா இல்லையா என்று கூட சில கதைகளில் அதன் முடிவு சந்தேகமாக இருக்கும்.

 ஆனால் அந்த கதைகளில் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதை தான் இந்த கதையும். 

 ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புகளை கணக்கிட்டு சொல்ல முடியாது அதனால் தான் நமது தமிழ் பெரியவர்கள் கூட கோபமே குடிகெடுக்கும் என்று சொன்னார்கள்.

 சிலர் எப்போதுமே சிறுசிறுவென இருப்பார்கள். கோபம் அவர்கள் மூக்கு நுனியில் எப்போதும் தயாராக உட்கார்ந்திருக்கும். அது எப்போது வேண்டுமானாலும் குதிக்கும் என்று சொல்லுவார்கள்.

 இந்த மூக்கு நுனிக்கும் கோபத்திற்கும் என்ன சம்பந்தம் உண்மையிலேயே கோபம் அங்கு தான் குடியிருக்குமா என்று உங்களுக்கு சந்தேகம். ஏற்பட்டிருக்கிறதா என்று சொல்லுங்கள்.

 இப்போது நாம் கதைக்கு வருவோம் கோபப்படாத நம்முடைய சாமியாரிடம் ஒருத்தர் கேட்டார், நீங்கள் எப்படி கோபம் வராத சாமியாராக மாறினது ? ஆரம்ப காலத்திலேயே உங்களுக்கு கோபம் வராதா ? இயற்கையாக கோபம் வராத மனிதரா நீங்க ? நீங்கள் கோபம் வராத மனிதராக மாறினீர்கள் ? தை சொல்ல முடியுமா என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்கு அந்த துறவி என்ன பதில் சொன்னார் என்பதை நான் உங்களுக்கு  தொகுத்து சொல்கிறேன்.

 இந்த துறவிக்கு  எப்போதும் தனியாக படகில் பயணம் செய்ய பிடிக்கும். அதுபோல படகில் செல்லும் போது  எங்காவது ஒரு கரையோரம் அதனை நிறுத்திவிட்டு, மணி கணக்கில் தியானம் செய்வது வழக்கம்.

 அதுபோல, ஒரு நாள் படகில் உட்கார்ந்தபடி  கண்களை மூடியபடி தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் திடீரென்று அவருடைய படகின் மீது ஏதோ ஒன்று  மோதியது.  என் படகின் மீது யார் மோதியது ? என்று கோபத்துடன் கேட்டபடி கண்களை திறந்து பார்த்தார்.

 அங்கு அவர் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அங்கு யாரும் இல்லை. ஒரு காலி படகு தான் அங்கே நின்று கொண்டிருந்தது. அந்த படகிலும் யாரும் இல்லை. அந்த படகு தான் தானாக வந்து, அவருடைய படகின் மீது வந்து மோதியது, என்பதை புரிந்து கொண்டார்.

 படகுத் துறைகளில் படகுகளை கட்டி வைத்திருப்பர்கள். கட்டி வைத்திருக்கும் அந்த கயிறுகள் அறுந்து போகும்.. அல்லது அவிழ்ந்து போகும். அந்த படகுகள் காற்று வீசும் திசையில் அசைந்து அசைந்து போகும். அப்படி அசைந்து வந்த காலி படகு தான் இது என்பது அவருக்கு புரிந்தது.

 அது காலி படகு என்பதால் யார் மீது கோபப்படுவது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் அவர் தனது கோபத்தை விட்டுவிட்டு மௌனம் சாதித்தார்.

 அதன் பிறகு அவர் பல சமயங்களில் கோபப்பட வேண்டிய மனிதர்களை சந்தித்தார். அப்படிப்பட்ட பல சூழல்கள் அவருக்கு ஏற்பட்டது. அது போன்ற சமயங்களில் எல்லாம் அவர்களை காலி படகாகக் கருத ஆரம்பித்தார்.

 அதனால் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி கோபம் உண்டாக்குபவர்களை காளி படகுகளாக நினைத்துக் கொள்ளுங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் உங்களுக்கு கோபப்படுவதற்கு வாய்ப்பு வராது. 

இதுதான் அந்த கோபப்படாத சாமியார் கோபப்படாமல் இருப்பதற்கு சொன்ன வழி. 

கோபப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. உலகத்திலேயே அதிக கோபமான மனிதர் அடால்ஃப் ஹிட்லர்.

அவர் சிறு வயதிலிருந்து யூதர்கள் மேல் பெரும் கோபம் கொண்டிருந்தார். அந்த கோபத்தின் விளைவாக 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக கோபப்படுவது என்றால் என்ன என்று பார்க்கலாம். நாம் கோபப்படும் சமயம் நமது உடல் முழுக்க, அட்ரினல் சுரப்பிகள் ஒரு விதமான ஹார்மோன்களை சுரக்கும் அவற்றின் பெயர் ஒன்று அட்ரினலின் இன்னொன்று  கார்ட்டிசால்.

கோபத்தின் போது சுரக்கும் இந்த இரண்டு திரவங்களும் மூளைக்குள் பாயும். அட்ரினலின் மற்றும் கார்ட்டிசால் கலந்த ரத்தத்தை மூளை தசைகளுக்குள் பாய்ச்சும். இதன் மூலம் தசைகள் தாக்குதலுக்கு தயாராகும். இதயத்துடிப்பு அதிகமாகும். சுவாசம் அதிகரிக்கும். உடல் வெப்பம் அதிகரிக்கும்.  தோல் வியர்க்கத் தொடங்கும்.

 கோபத்தை பற்றி அதிகமாக எழுதி உள்ள எழுத்தாளரின் பெயர் ரேமண்ட் நோவாகோ என்பவர். அவர் கோபத்தை மூன்று வகையாக பிரிக்கிறார் ஒரு கோபம் அறிவை பாதிக்கும், இரண்டாம் கோபம் உடலை பாதிக்கும், மூன்றாவது கோபம் நமது நடத்தையை பாதிக்கும்.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி வணக்கம். 





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...