Saturday, September 23, 2023

BENGAL FAMINE OF 1769 - 1770 முதல் வங்காளப் பெரும் பஞ்சம்



எனக்கு 75 வயது ஆகிறது, என் வயதுக்கு நானும் பஞ்சம் என்பதைக் கண்டதில்லை. அனேகமாக என் வயதில் இருப்பவர்களுக்கு அந்த அனுபவம் இருக்காது என்றுதான்  நினைக்கிறேன்.

எனக்கும் பெரியவர்கள் தாது வருஷப் பஞ்சம் என சொல்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வெள்ளைக்கார்ர்கள் நம்மை ஆட்சி செய்தக் காலத்தில் மொத்தம் 31 பஞ்சங்கள் ஏற்பட்டன என்கிறார்கள். ஆச்சரியமாக உள்ளது.

பஞ்சங்கள் என்றால் என்ன ?, மக்களின் வாழ்க்கைக்குஅடிப்படையான தேவைகள் கிடைக்காத சூழலை பஞ்சம் என்று விளக்கம் சொல்லுகிறார்கள். பருவ மழை பொய்த்துப்போவது (FAILURE OF MONSOON), வறட்சி(DROUGHT), பயிர் இழப்பு (CROP LOSS), போர்(WAR), அரசின் தவறான கொள்கைகள்(GOVT. WRONG POLICIES), தொற்று நோய்கள்(EPIDEMICS), சத்து பற்றக்குறை(NUTRIENT DEFICIENCY), ஏழ்மை (POVERTY), மக்கள் தொகைப்பெருக்கம்(POPULATION EXPLOSION) இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏற்படுவது அல்லது ஏதாவது ஒன்றினால் ஏற்படும் மனிதச்சாவுகளை பஞ்சம் என்கிறார்கள். 

1769 மற்றும் 1770 ஆகிய இரு ஆண்டுகளில் வங்காளப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பின்னர் 1783, 1866, 1873, 1892, 1897, மற்றும் 1943-44, இப்படி ஏழுமுறை வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.

இந்த பஞ்சங்களில் 3 முதல் 10 மில்லியன் மக்கள் இறந்து போனதன் மூலம். வங்காளம் பாதிக்கபட்டாலும் வெவ்வேறு பெயர்களில் இந்தப் பஞ்சங்கள் வந்த்து.

1769 மற்றும் 1770 பஞ்சம், வங்காளம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களை பாதித்தது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சம் இது. அதில் இறந்தோரின் எண்ணிக்கை 10  மில்லியன், அதாவது 100 லட்சம் பேர்.

இந்த பஞ்சம் வங்காளத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களை கொன்று குவித்தது. ஜான் ஃபிஸ்கி (JOHN FISKETE)என்ற எழுத்தாளர் பார்க்க முடியாத உலகம்(THE UNSEEN WORLD) என்ற தனது நூலில் இந்த பஞ்சத்தை ஐரோப்பாவில் ஏற்பட்ட பிளாக் பிளேக் (BLACK PLAGUE) என்ற நோயை விட கொடூரமானது என எழுதியுள்ளார்.

பஞ்சத்திற்கான காரணங்கள், இரண்டு ஆண்டுகள் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மழை இல்லை. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து குறிப்பாக நெல் சாகுபடி செய்ய முடியாமல் போனது. 

பஞ்சத்துக்கு முந்தைய ஆண்டு 1768 ல் விவசாயம் முழுமையாக  . பொய்த்துப்போனது.

பஞ்சத்திற்கு நிவாரணப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக வரி வசூல் செய்வதில் மும்முரமாய் இருந்தார்கள்  வெள்ளைக்காரர்கள்.. 10 பங்காக இருந்த வரியினை 60 பங்காக அதிகரித்தார்கள்.

இன்னொரு பக்கம் அம்மை நோய் வேகவேகமாய் பரவிக்கொண்டிருந்தது.

தானிய வியாபரிகள் விவசாயிகளுக்கும் இதர மக்களுக்கும் கடனில் தானியங்கள் கொடுப்பதை நிறுத்தினார்கள்.

அப்போது போதுமான உணவு உற்பத்தி இல்லை.

மிச்ச சொச்சமாக உற்பத்தி செய்த தானியங்களை கொள்முதல் செய்து வெற்றிகரமாக, வெளி நாடுகளில் போர்புரியும் தங்களின்  படை வீரர்களுக்கு ஏற்றுமதி செய்தார்கள் வெள்ளைகாரர்கள்.

விளைவுகள், 1770 ம் ஆண்டு கோடை காலத்தில் பஞ்சத்தின் காரணமாக மக்கள் சாகத் தொடங்கினார்கள் (FAMINE DEATHS).

அவர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தது ஒன்று உணவில்லாமல் போனது, இன்னொன்று தொற்று நோய்கள்(STARVATION & DISEASES).

பஞ்சம் பிழைக்க பட்டினம் போவது, அதாவது மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரித்தது.(MIGRATION).

ஆரோக்கியமான சுற்றுச்சூழல் இல்லாமல் போனது, பாதுகாப்பான குடி நீர் கிடைக்காமல் போனது (UNHEALTHY ATMOSHPHERE & UNPROTECTIVE WATER). 

தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது(SCOPE FOR INFECTIOUS DISEASES).

சமூகக்கட்டுப்பாடுகள் குறைந்துபோனது, சில இடங்களில் அது சுத்தமாக இல்லாமல் போனது (LACK OF SOCIAL CONTROLS).

குறிப்பாக தாழ்ந்த சாதி என்று சொல்லப்பட்ட மக்களிடையே பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது அதிகரித்தது(SEXUAL EXPLOITATION AMONG LOWR CASTES). 

தொழில் செய்பவர்களை முடக்கி அவர்களை எல்லாம் விவசாயம் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.(NATIVE ARTISANS ARE IGNORED).

இதனால் அவர்களுடைய வாழ்க்கையை பருவமழை தீர்மானித்தது (SEASONAL RAINFALL BECOMES THE MAJOR FACTOR).

வறட்சி, பயிர் இழப்பு, மகசூல் இழப்பு, வறுமை பஞ்சம் என்பது தொடர்கதை ஆனது(DROUGHT, CROP LOSS, POVERTY, FAMINE, DEATH).

பிளாசி   யுத்தத்தில் பெற்ற வெற்றிக்கு பின் வெள்ளைக்காரர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி இந்தியாவை ஆள ஆரம்பித்தது, 1757ஆம் ஆண்டு. இது 1858 வரை தொடர்ந்தது.  அதன் பின்னர் 1947 ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவை அரசாண்டது.  ஆக நாம் வெள்ளைக்காரர்களிடம் அடிமையாக இருந்த 190 ஆண்டுகளில் 31 பஞ்சங்கள்  நம்மை ஆட்டிப்படைத்தன. 

சுதந்திர இந்தியாவில் இப்படி எத்தனை  பஞ்சங்களை  நாம் எதிர்கொண்டோம் ? இதற்கு முக்கியமான காரணம், நமது விவசாயிகள்விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விவசாயத் துறையில் தன்னலம் கருதாது பணியாற்றிய விவசாயத் துறை அலுவலர்கள் என்று நான் நினைக்கிறேன். 

இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றி ஆய்வு செய்த பின் இந்த எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. இனி வரும் காலத்தில் அது பற்றியும் எழுதலாம் என்று நான் முடிவு செய்து முடிவு செய்துள்ளேன். இது பற்றிய உங்கள் கருத்துக்களையும்  எனக்கு சொல்லுங்கள்.

பூமி ஞானசூரியன்

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...