ALBERT EINSTEIN AND MAHABARATHA THURIYOTHANA |
அணுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு அடித்தளம் போட்ட அறிவியல் மேதை ஐன்ஸ்டின் ஒருநாள், தனது மூக்குக் கண்ணாடியை மறந்து வைத்துவிட்டு ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச் போனார். அங்கு வைத்திருந்த ‘மெனு போர்டை’ அவரால் படிக்க முடியவில்லை.
“என்னால் இந்த போர்ட்டை படிக்க முடியவில்லை,
எனக்கு கொஞ்சம் படித்துக் காட்ட முடியுமா ?” என்று கேட்டார் அந்த சிற்றுண்டிச்சாலை சர்வரிடம்.
"நானும்
உங்களைப் போலத்தான். பள்ளிக்கூட நிழலில்கூட ஒதுங்கவில்லை. எனக்கும் படிக்கத்
தெரியாது உங்களை மாதிரியே" என்று சொல்லி சிரித்தான் அந்த சர்வர்.
“உலகமே வியந்து பார்க்கும் விஞ்ஞானி நான். என்னைப் பார்த்தா பள்ளிக்கூட நிழலில் ஒதுங்காதவன் என்றாய் ? “ என்று, நாமாக இருந்தால் அவனை புரட்டி எடுத்திருப்போம்.
ஆனால் ஐன்ஸ்டின் அப்படியா ? என்று ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தார் பணிவின் சிகரமான ஐன்ஸ்டின்.
ஒரு
துரும்பு நம்மை மிதிச்சாலும், அதனை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பணிவு கொண்ட
ஒரு மனிதனால் மட்டுமே உண்மையை தரிசிக்க முடியும். இதைச்
சொன்னது மகாத்மா காந்தியடிகள்.
முற்றிய
நெற்கதிரோட தலை சாய்ந்து இருக்கும். தரையைப் பார்த்து பணிவாக நிற்கும். நிறைய
கனிகள் இருந்தால் அந்த விருட்சத்தின்
கிளைகள் பணிவாக வளைந்து நிற்கும்.
“தன்னை உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார்; தன்னை தாழ்த்திக் கொள்பவர்
உயர்த்தப் படுவார் ” என்கிறது
பைபிள்.
“ பணியுமாம்
என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. ”
என்கிறார்
திருவள்ளுவர். பெருமை எப்போதும், பணிவுடன் இருக்கும். சிறுமை எப்போதும், ‘ என்னைப்பார்
என் அழகைப்பார் ’ என்று சுயபுராணம் பாடும்.
சில
மனிதர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள்.
சிலபேர் அறிவாளிகளாக இருப்பர். சிலர் ஞானமுள்ளவர்களாக இருப்பர். எத்தனை
நல்ல குணங்கள் இருந்தாலும், பணிவு இல்லையென்றால்
அவர்களை அழிவிலிருந்து யாரும்
காப்பாற்ற முடியாது.
இதைத்தான்
திருவள்ளுவர்
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்” என்கிறார்
"பணிவு கிலோ எத்தனை ரூபாய்க்குக் கிடைக்கும்", என்று கேட்கும் மனிதர்களை நிறைய பேரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.
பணிவின்மையின்
மொத்த உருவமாக, தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவன் துரியோதனன். அதனாலேயே அவன் அழிவை
சந்தித்தான்.
அவன்
தன்னை மட்டும் இழக்கவில்லை. தனது சகோதரர்கள் 99 பேரை
இழந்தான். அவனுக்காக போரிட்ட பீஷ்மரை இழந்தான். துரோணரை இழந்தான். பதினேழு அக்கிரோணி சேனைகளையும் இழந்தான். நாடு நகரம்
ராஜ்ஜிய பரிபாலனம் அத்தனையும் இழந்தான்.
தாத்தா
பீஷ்மரும், குரு துரோணரும் சொன்ன அறிவுரைகளுக்கு செவி சாய்க்காமல் அழிந்து
வீழ்ந்தான் துரியோதனன்.
துரியோதனனின்
பணிவின்மைக்கு ஒரு சிறிய சம்பவத்தை உதாரணமாகப்
பார்க்கலாம்.
குருஷேத்திரப்
போர். மூளுவது உறுதியாகிவிட்டது. படைதிரட்டுவதில், பாண்டவர்களும்
கௌரவர்களும் மும்முரமாக இருந்த சமயம் அது. அப்போது வாசுதேவ கிருஷ்ணணின் உதவியை
கேட்கும்படி மாமன் சகுனி, துரியோதனனை அனுப்பினான்.
“அன்பு துரியோதனா நீ இன்றே செல். வாசு தேவ கிருஷ்ணனை சந்தித்து,
போரில் நமக்கு உதவும்படி கேள்”
“ நமக்கு அவர் உதவுவாரா ?"
“யார் முதலில் சென்று கேட்டாலும், இல்லை
என்று சொல்லாமல் வாக்கு தருவார்.
பாண்டவர் செல்வதற்கு முன் நீ போ …”
என்று சகுனி துரியோதனனை
கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தான்.
மாமா
சகுனி சொன்னதைக்கேட்டு கிருஷ்ணணின் இல்லத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் துரியோதனன்.
அதேசமயம் கிருஷ்ணனின் உதவிகேட்க, அர்ஜுனனும்
வந்துக் கொண்டிருந்தான்.
அர்ஜுனனை
துரியோதனன் முந்திக் கொண்டான். துரியோதனன் கிருஷ்ணனின் வீட்டை அடைந்து விட்டான். அது விடிந்தும் விடியாத
காலைப் பொழுது.
கிருஷ்ணன் தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை. ஆனால் எழுந்ததும், பார்த்துவிட
வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் துரியோதனன். கிருஷ்ணன் எழுந்திருக்கும்வரை காத்திருக்கலாம்
என முடிவு செய்தான்.
அதுவரை
அங்கு உட்காரலாம். ஏங்கே உட்காருவது ?
தலைப்பக்கம் கொஞ்சம் இடமும், கால்பக்கம் கொஞ்சம் இடமும் இருந்தது.
எந்தப் பக்கம் உட்காரலாம் ? கால்பக்கமா தலைப்பக்கமா ?
இங்குதான்
துரியோதனனின் பணிவின்மை வேலை செய்தது. கால்பக்கம் உட்கார அவன் சுயமரியாதை இடம்
தரவில்லை. தலைப்பக்கம் போய் உட்கார முடிவு செய்து உட்காரவும், அர்ஜுனன்
அங்கு வரவும் சரியாக இருந்தது.
அர்ச்சுனன்
உள்ளே நுழைந்ததும் ‘அண்ணா வணக்கம்’ என்று துரியோதனனை பணிவாக வணங்கினான். துரியோதனன் அவன் வணக்கத்தை
அலட்சியப்படுத்தினான். இன்னும்கூட கிருஷ்ணன் தூக்கத்திலிருந்து
எழுந்திருக்கவில்லை. அர்ஜுனன்
கிருஷ்ணனின் பாதங்களுக்கு கீழே உட்கார்ந்தான்.
ஒருசில
மணித்துளிகள்தான், கிருஷ்ணனின் தூக்கம் கலைந்தது. கண்விழித்தார். அர்ச்சுனன் வணக்கம்
சொன்னான்.
'என்ன விஷயம் பார்த்தா ?
விடிந்தும் விடியாததுமாய் என்னைப்பார்க்க வந்துவிட்டாய் ?"
“உங்களிடம் ஒரு உதவி கோரி வந்தேன்” என்றான் அர்ச்சுனன்.
“உனக்கில்லாததா ? உனக்கு உதவ நான் வாக்களிக்கிறேன் என்றார் கிருஷ்ணன்.”
'நான்தான் முதலில் வந்தேன் கிருஷ்ணா நீர் எப்படி அர்ஜுனனுக்கு
வாக்குத் தரலாம் ?" என்று
தலைப்பக்கத்திலிருந்து குரல் கொடுத்தான் துரியோதனன்.
'துரியோதனா உன் குரல்
கேட்டுந்தான், நீ வந்திருக்கிறாய் என்று தெரியும். ஒருவேளை உன்னை முதலில்
பார்த்திருந்தால், உனக்கு நான் வாக்கு தந்திருக்க முடியும்" என்றார்
கிருஷ்ணன்.
அப்போதுங்கூட
அவனது பணிவின்மை அவனை சும்மா இருக்க விடவில்லை.
'கிருஷ்ணா நீ தவறு செய்து விட்டாய். முன்னால் வந்த என்னை நிராகரித்து
விட்டாய். வேண்டுமென்றே நீ அவனுக்கு சாதகமாக
வாக்கு தந்து விட்டாய்" என்று ஆணவமாய் பேசினான். "இனாமாய் தரும்
மாட்டிற்கு எத்தனைப்பல்" என்று கேட்பது இதுதான்.
“என்னைக் குறை சொல்லுவதை விட்டு விட்டு உனக்கு என்ன வேண்டும் என்று
கேள் துரியோதனா” என்று அமைதியாகக் கேட்டார் வாசுதேவன், சற்று
நேர வாக்குவாதத்திற்குப்பின், கௌரவர்களுக்கு யாதவர்களின் படையை அனுப்புவதாக வாக்களித்தார்.
“அன்பு துரியோதனா ! யாரிடம் உதவி கேட்டு சென்றாலும், உதவி கேட்பவரின் குரலில் பணிவு இருக்க வேண்டும்” என்று துரியோதனனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பினார் வாசு தேவ கிருஷ்ணன்.
துரியோதனனின்
இந்த பணிவின்மைதான் பாரதப் போரின்
தலைவிதியை நிர்ணயம் செய்தது.
நமது வாழ்க்கைப் போரின் தலைவிதியையும் பணிவுதான் நிர்ணயிக்கும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment