இந்தப்பதிவில் எந்த ஒரு மாநிலத்திற்கும் எவ்வித சார்பு நிலையும் இல்லாமல் காவிரி நீர்ப்பிரச்சினை குறித்த விழிப்புணரர்வு தருவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.
“தானம் தவம்
இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காதெனின்”
தண்ணீர் இல்லையென்றால் தானமும் செய்ய முடியாது, தவமும் செய்ய முடியாது, உரிய
பங்கீடு என்று கேட்டடாலும் சட்டியில்
இருந்தால்தானே அகப்பையில் வரும் என்கிறது கர்நாடகா.
“ சிறப்போடு
பூசனை செல்லாது வானம்
வறக்கும் மேல் வானோர்க்கும் ஈண்டு”
சாமிக்கு நடத்தும் பூஜையும் புனஸ்காரமும் நடக்காதுன்னு
சொல்லும்போது,
ஆசாமிக்கு அதுவும் அளந்து
குடுக்கணும்னா எப்படி குடுக்கறது என்கிறது கர்னாடகா.
அதனாலத்தான் நமது மமறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள்
இந்தியாவிற்கான நீர்த் திட்டம் ஒன்றினை அவர் பரிந்துரை செய்தார்.அதனை பிறகு ஒரு
நாள் விரிவாக எழுதுகிறேன்.
இப்போது
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்து இந்த காவிரி நதியின் நீரை பிரித்துக்
கொள்வதில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை பிரச்சனைகள் எல்லாம் வந்தது என்பது பற்றி
கொஞ்சம் சரித்திர பூர்வமாக பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி பார்க்கும்
போது அறிவியல் ரீதியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பிரச்சனை
இன்றி இந்த காவிரி ஆற்றின் நீரை பிரித்துக் கொள்ள முடியுமா என்று நாம்
பார்க்கலாம்.
காவிரி நதிநீரை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் எப்படிப்
பிரித்துக் கொள்வது என்பது பற்றிய ஒரு ஒப்பந்தம் 1892 ஆம் ஆண்டு போடப்பட்டது.
அதன் பிறகு 1924 ஆண்டில்
ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது, இந்த
ஒப்பந்தம்
50 ஆண்டுகளுக்கான ஒன்றாக
போடப்பட்டது.
என்னதான் ஒப்பந்தங்கள் போட்டாலும், 200 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையில் எவ்விதமான
முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
எப்போதெல்லாம் காவிரியின் நீர்வடிப் பகுதிகளில் மழை குறைவாக
இருக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் போராட்டங்கள்
வெடிக்கின்றன.
மழை அதிகமாக பெய்யும் ஆண்டுகளில் எல்லாம் கர்நாடகா மாநிலம்
மகிழ்ச்கியாக
தமிழ்நாட்டிற்கு தண்ணீரை
திறந்துவிடுகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை.
2023 ம் ஆண்டும்
இந்தப் பிரச்சினை மீண்டும் இரண்டு மாநிலங்களிலும் பூதாகராமாக வெடித்துள்ளது.
மாநிலம் தழுவிய ஒரு இருநாள்போராட்டத்தை அறிவித்து கொதித்துக்
கொண்டிருக்கிறது
கர்நாடகா.தமிழ்நாட்டிற்கு தண்ணீர்
அனுப்பக்கூடாது என்பதற்கு ஆதரவாக கர்நாடகாவின் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயம் அல்லாத சங்கங்கள் எல்லாம்
ஒருங்கிணந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
நேற்று (செப் 29/23) நடந்த
இந்தப் போராட்டத்தில் கர் நாடக மானிலத்தின்
சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரும் குருவராஜா கல்யாண மண்டபத்தின் அருகில் நடந்த போராட்டத்தில் கலந்து
கொண்டார்கள்.
கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் (KARNATAKA FILM CHAMBER OF
COMMERCE) தங்களுடைய
ஆதரவை அறிவித்துள்ளது. இது தவிர கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சினிமா திரை
அரங்குகளும் திரைப்பட காட்சிகளை ரத்து செய்துள்ளன. இதற்கான ஆதரவை கர்நாடகா ஃபிலிம்
எக்சிபியூட்டர்ஸ் அசோசியேஷன் (ARNATAKA FILM EXHIBITOR’S ASSOCIATION) தெரிவித்துள்ளது.
“இன்று
கர்நாடகாவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம் இந்த
கூட்டத்தில்
காவிரி நீர் பிரச்சனை அதனை
பங்கீடு செய்வது மற்றும் கோர்ட் உத்தரவு ஆகியவை பற்றி எல்லாம் பேச உள்ளோம். அந்த
கூட்டத்தின் தீர்மானத்தின்படி நாங்கள் செயல்பட உள்ளோம்” என்று கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சீதாராமையா
தெரிவித்துள்ளார்.
அத்தோடு நில்லாமல்
மாண்டியா, மைசூரு, சாமராஜநகரா, ராமநகரா
மற்றும் ஹாசன் மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக
அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
காவேரி நீர் பங்கீடு போராட்டத்தின் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தின் கெம்பே கவுடா
இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 44 விமானங்களை
ரத்து செய்தது.
அதுபோக காவேரி நதியின் நீர்வடிப் பகுதியில் உள்ள மைசூர், மாண்டியா, சாமராஜ
நகர் ஆகிய இடங்களில் பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின்
தென்பகுதி மாவட்டங்களில் 59.88% பஸ்கள்
மட்டுமே ஓடின எங்கின்றன பத்திரிக்கைச் செய்திகள்.
போராட்டதில் கலந்துகொண்ட நடிகர்களில் முக்கியமானவர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், துனியா
விஜய், துருவ சர்ஜா, ஆகியோர், .
காவிரி நதி ஏன் வறண்டு வருகிறது ? இதற்கு அறிவியல் ரீதியாக, காவிரி
நீர்வடி ப்பகுதியில் உள்ள நிலப்பகுதி
அல்லது மண்கண்டத்தால் நீரை பிடித்து
வைத்துக்கொள்ளும் சக்தி குறைந்து விட்டது, இரண்டாவதாக
அப்படிப்பட்ட மண் கண்டத்தை நாம் படிபடியாக மண்
அரிப்பால்
இழந்து விட்டோம். இதனால் காவிரி சீக்கிரமாக அதன் ஈரத்தன்மையை
இழந்து விடுகறது என்று சொல்லுகிறார்கள்.
1892 ஆம் ஆண்டு
வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீரை பிரித்துக் கொள்வது தொடர்பாக
ஒரு ஒப்பந்தம் கர்நாடகா(STATE OF MYSORE) மற்றும்
தமிழ்நாட்டில் (STATE
OF MADRAS)இடையே
செய்யப்பட்டது அந்த காலத்தில் கர்நாடகாவிற்கு மைசூர் என்றும் தமிழ்நாட்டிற்கு
மெட்ராஸ் என்றும் பெயர் இருந்தது.
1924 ஆம் ஆண்டு
இதேபோல் ஒரு ஒப்பந்தம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே செய்யப்பட்டது இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது 50 ஆண்டுகள் என்றால் 1974 ஆம் ஆண்டு
வரை என்று பொருள்.
1924 ஆம்
ஆண்டின் ஒப்பந்தப்படி காவேரி நதியின் நீரில் 75% தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும்.
மீதமுள்ளவற்றை 23
சதம் மைசூருக்கு ஒதுக்கப்படுகிறது
மைசூர் என்றால் கர்நாடகா என்று கொள்ள வேண்டும். மீதமுள்ள இரண்டு சதவிகித நீரை கேரள
மாநிலத்திற்கு அளிக்க வேண்டும். அந்த சமயம் கேரள மாநிலம் இல்லை அதனை திருவாங்கூர்
சமஸ்தானம் என்று சொல்லுவார்கள்.
1947 ஆம் ஆண்டு
இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலத்தின் நீர்
வளத்தை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன அவற்றின் விவசாயம் மற்றும்
தொழிற்சாலை மேம்பாட்டிற்கு என கூடுதலான தண்ணீர் தேவைப்பட்டது.
இந்த கூடுதலான நீர் தேவையின் அடிப்படையில் மீண்டும் காவிரியின்
நதிநீரை புதிய தேவைகளின் அடிப்படையில் பிரித்துகொள்ள திட்டமிட வேண்டும் என்ற
எண்ணம் மேலோங்கியது.
1956 ஆம் ஆண்டு
மாநிலங்கள் மறு சீரமைப்புக்கு உள்ளாகின அதன்
அடிப்படையில் காவிரி நதியின் நீர் வரத்து பகுதி அல்லது நீர்வடிப் பகுதி இரு
பகுதிகளாக பிரிக்கப்பட்டன. ஒன்று கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் வருவது
இன்னொன்று தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைக்குள் வருவது..
காவிரி ஆற்றின் மொத்த நீர்வடி பகுதி 81155 சதுர கிலோமீட்டர், இதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள
நீர்வடிபப்பகுதி என்பது 34273 சதுர
கிலோமீட்டர்,
தமிழ்நாட்டு எல்லையில் உள்ள
நீர்வடி பகுதியின் மொத்த
பரப்பு 43856 சதுர கிலோமீட்டர், கேரளா மாநிலத்தில் உள்ள நீர்வடிப்
பகுதியின் பரப்பு 286 சதுர
கிலோமீட்டர், பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ளது 160 சதுர கிலோமீட்டர்
தற்போது கர்நாடகா, தமிழ்நாடு
ஆகிய இரண்டு மாநிலங்களுமே ஏற்கனவே தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர் போதாது எங்கள் தேவை அதிகரித்துள்ளது அதனால்
இந்த பங்கீட்டினை மீண்டும் சரிவர செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
1990 ஆம் ஆண்டு, இந்தியாவின் மத்திய அரசு இந்த காவேரியின் நீர் பங்கிட்டினை சரி
செய்வதற்காக ஒரு அமைப்பினை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் பெயர் காவேரி வாட்டர்
டிஸ்ப்யூட்ஸ் ட்ரிபூனல் (CAUVERY WATER DISTRIBUTES TRIBUNAL- CWDT) என்பதாகும்.
1990 ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்ட இந்த காவிரி ட்ரிபுனல் புதியதாக ஒரு பங்கீட்டு அளவை நிர்ணயம்
செய்தது.
அதன் பிரகாரம் 419 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு தரவேண்டும். 270 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் ((TMC) தண்ணீர் கர்நாடகாவிற்கு அளிக்க வேண்டும் 30 ஆயிரம் மில்லியன் கி. மீ. (TMC) தண்ணீர் கேரளாவிற்கும் 7 ஆயிரம்
மில்லியன் கியூபிக் மீட்டர் (TMC) தண்ணீர்
புதுவை மாநிலத்திற்கும் அளிக்க வேண்டும்
இன்னொரு வழிகாட்டுதலையும் அளித்தது இந்த காவேரி வாட்டர்
டிஸ்ட்ரிபூட்ஸ் ட்ரிப்யூனல்(CWDT). அது
என்னவென்றால் கர்நாடக அரசு ஒவ்வொரு மாதமும் இந்த தண்ணீரை அங்கு இருக்கும் தண்ணீரின் அளவை
பொறுத்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும்.
கடந்த செப்டெம்பர் 26 ம் தேதி
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவினை
எடுத்தார்கள். அந்த முடிவு படி தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி என்ற அளவில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி
வரைக்கும் 18 தினங்களுக்கு தண்ணீரை கர்நாடகம்
விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைப்படி தண்ணீர் வழங்க இயலாது பருவ மழை காலம்
முடியப்போகிறது என்று கர்நாடகா சார்பில் வாதிடப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு
தண்ணீர் திறந்து விடுவதில் 10 தினங்கள்
இடைவெளி அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்தது.
அதன் பிறகு காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 25 வது கூட்டம் (செப்டம்பர் 29ஆம் தேதி) நடைபெற்றது
இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் படி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதி
செய்தது.
தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிப்பதில் சற்று இடைவெளி தேவை என்ற
கர்நாடகத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.
தற்போது அணைகளில் நீர் இருப்பு இல்லாததால் எங்கள் மாநிலத்தில்
போராட்டம் நடைபெறுகிறது எனவே தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்க ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி
உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிப்போம் என்று
தெரிவித்துள்ளார் கர்நாடக அரசின்
செயலர் ராகேஷ்சிங் அவர்கள்.
காவேரி நதி நீரினை பிரச்சினை இல்லாமல் பங்கிட்டுக்கொள்வது
எப்படி என்று உங்கள் கருத்தினை பதிவிடுங்கள், அடுத்தப்
பதிவில் மீண்டும் சந்திப்போம், நன்றி
வணக்கம்.
இன்னும் காவிரி நீர் வரும் !
பூமி ஞானசூரியன்