Monday, August 14, 2023

WORLD RENOWNED MAJESTIC ROYAL PALM 306.ராயல்பாம் அழகுப் பனை உலகம் கொண்டாடும் மரம்

உலகம் கொண்டாடும்
ராயல்பாம் அழகு பனைமரம்


1. இந்த ராயல்பாம்பனை மரங்கள் கியூபாவுக்கு சொந்தமான மரம், அழகு மரமாக உணவாக மருந்தாக பயன்படும். இதன் பழங்கள் கால்நடைகளுக்கு தீவனமாகும்.. கொட்டைகள் எண்ணை தரும், மரத்தின் மத்திய பகுதி மிருதுவாக இருக்கும், இதை சமைத்து சாப்பிடலாம். இதன் மட்டைகளை மரங்களை சிறு வீடுகள் கட்டப் பயன்படுத்தலாம், இதன் மரங்களில் கைவினை பொருட்களை செய்யலாம்.

2. தாவரவியல் பெயர்: ராய் ஸ்டோனியா ரீஜியா(ROYSTONEA REGIA)

பொது பெயர்கள்: கியூபன் ராயல் பாம்,  ப்ளோரிடா ராயல் பாம்,  ராயல் பாம் (CUBAN ROYAL PALM, FLORIDA ROYAL PALM, ROYAL PALM)

தாவரக் குடும்பம்: அரிகேசி (ARECACEAE)

3. இந்த ராயல் பாம் மரங்களை வெப்பமண்டலம் மற்றும் மிக வெப்பமண்டல பகுதிகளில் உலகம் முழுவதிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன.

4. இதன் விதைகளிலிருந்து என்னை எடுக்கிறார்கள், அதிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்கினை கால்நடைகளுக்கு தீவனமாகப் போடுகிறார்கள்.

5. இதன் இலைகளை வீடுகளில் கூரைகள் போட பயன்படுத்துகிறார்கள். மரங்களை கட்டுமான வேலைகளில் பயன்படுத்துகிறார்கள்.

6. இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தினை சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுத்துகிறார்கள்.

7. இதன் இலை உறைகளிலிருந்து நார் எடுத்து, கயிறுகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இந்த நார் கற்றாழை மற்றும் வாழைநார்களுக்கு இணையாக தரத்தில் உள்ளது.

8. இதன் பழங்களிலிருந்து எடுக்கும் சாற்றினை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நோயினை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

9. சூழல் ரீதியான பயன்கள்

இந்த ராயல் பனை பல்வேறு உயிரினங்களுக்கு உற்ற நண்பனாக விளங்குகிறது. பலவிதமான வவ்வால்களுக்கு உணவும் மற்றும் உறையுளும் ந்து உதவுகிறது. கியூபன் ட்ரீ ஃபிராக் (CUBAN TREE FROG)எனும் ஒரு வகையான தவளைகளுக்கு வசிப்பிடமாக இடம் தந்து உதவுகிறது.

10. ராயல்பாம் பனைகளில் தனக்கு வேண்டுமான அளவில் பொந்துகளை உருவாக்கிக் கொண்டு வசிக்கின்றன.எல்லோ கிரவுன்டு பேரட்ஸ் (YELLOW CROWNED PARROTS)என்னும் கிளிகள்.

11. மகரந்த துகள்களை தின்னும் வவ்வால், தேன் குடிக்கும் வவ்வால், இப்படி பலவகை வவ்வால்களும் இந்த ராயல் பனையின் வாடிக்கையாளர்கள். பறவைகள், பிராணிகள், போக தேனீக்கள் பட்டாம்பூச்சிகள் இன்னும் பல வகை பூச்சிகளும் ராயல் பனையின் வாடிக்கையாளர்கள்தான்.

12. பனாமாவில் உள்ள சில வகை காடுகளில் இந்த ராயல் பனைகள் களை மரங்களாக (INVASIVE TREES) விளங்குகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதில் பனாமாக்காரர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

13. பூங்கொத்துகள் மூன்று முதல் நான்கு அடி நீளத்திற்கு இருக்கும், பூங்கொத்தில் பூக்கள், இருபால் பூக்களாக இருக்கும். பூக்கள் பசுமையா அதன் பூக்காம்பின் அடிப்பகுதியில் இருக்கும்.

14. இந்த ராயல் பணியின் நுனிப்பகுதி இரண்டு மீட்டர் அளவுக்கு பசுமையாக இருக்கும். அதற்கு கீழே இருக்கும் பகுதி கான்கிரீட்டில் செயற்கையாக தயார் செய்தது போல இருக்கும்.

15. மரத்தின் நுனிப்பகுதி இதன் இலைகளை தாங்கி இருக்கும். மட்டைகள் 15 முதல் 20 அடி இருக்கும்.

16. ராயல்பாம்பனை மரங்கள் மற்ற எல்லா பனை மரங்களிலும் உயர்தரமான அல்லது உயர் அந்தஸ்த்து உள்ள பனைமரம் என்று சொல்லுகிறார்கள்.

17. ராயல்பாம்பனை மரங்கள் அதிகபட்சமாக 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரும் அதன் தலைப்பரப்பு 5 மீட்டர் வரை படர்ந்து இருக்கும்.

18. பரவி இருக்கும் இடங்கள்

சென்னை உட்பட இந்தியா முழுக்க பரவி இருக்க வாய்ப்பு உண்டு.

19. சர்வதேச அளவில் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கரிபியன் பகுதிகளில் அதிகம் இந்த ராயல்பாம்பனை மரங்கள் பரவி உள்ளன.

20. ஆனால் வெப்பமண்டல பகுதிகளை உள்ளடக்கிய நாடுகளில் எல்லாம் அழகு மரமாக மட்டுமே இதனை கருதி வளர்த்து வருகிறார்கள்.

21. ஊட்டச்சத்து நிறைந்த இருமன் பாடான மண் வகை வடிகால் வசதி உள்ள மண் உப்பு மண் வறண்ட மண் வறட்சியான பகுதிகள் ஆகியவற்றில் ராயல் பம்ப் பனை மரங்கள் வளரும் அழகு தோட்டங்களில் சாலை ஓரங்களில் கடற்கரை ஓரங்களில் இந்த ராயல் பாம் பனை மரங்கள் பிரச்சனை இன்றி வளரும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

1 comment:

Dr. P G Prabakaran said...

இது நாள் வரை ராயல் பாம் இந்த பனை வகை அழகு மரம் என்று தான் நினைத்து இருந்தேன், இவ்வளவு பயன் இருக்கிறது என்று உங்கள் கட்டுரை யில் இருந்து அறிந்து கொண்டேன். மிக்க பயனுள்ள தகவல். பணி தொடரட்டும், வாழ்த்துக்கள்.
Dr. P G Prabakaran

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...