சிவப்பழகு தரும் கண்ணா மரம். |
கண்ணா மரம், தென்னிந்தியா உட்பட பல நாடுகளுக்கு சொந்தமான மரம், மேற்கு தொடர்ச்சி மலையில் அருகி வரும் மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ள மரம், எப்போதும் தழையும் தாம்புமாக இருக்கும், 15 மீட்டர் வரை உயரமாக வளரும், இதன் பழங்களை பறவைகள் வவ்வால்கள், மற்றும் சிறு சிறு பிராணிகள் விரும்பி சாப்பிடுகின்றன. தோட்டங்களில் அல்லது பூங்காக்களில் இந்த மரங்களை அழகு மரங்களாக வளர்க்கிறார்கள். இந்த மரங்களின் தாவர ரசாயனங்கள் சருமப் பாதுகாப்புக்காக ஈரப்படுத்தியாகவும், மிருதுவாக்கியாகவும், மேலும் தோலின் நிறத்தை வெண்மையாக்கியாகவும், பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.
1.தாவரவியல்
பெயர்: ஹெப்டாப்லீரம்
ரெசிமோசம் (HEPTAPLERUM RACEMOSUM)
பொதுப்
பெயர்கள்: ஆஸ்திரேலியன்
அம்பரெல்லா ட்ரி, குயின்ஸ்லாந்து
அம்பரெல்லா ட்ரி, ஆக்டோபஸ்
ட்ரி, அமெட்டி (ASTRALIAN UMBRELLA TREE, QUEENSLAND
UMBRELLA TREE, OCTOPUS UMBRELLA TREE, AMETE)
தாவரக்
குடும்பம்: அரேலியேசி (ARELIACEAE).
2. தாயகம், தென்னிந்தியா ஆஸ்திரேலியா ஜாவா மேற்கு தொடர்ச்சி மலையில் அருகி வரும்
மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு சொந்தமான மரம்.
3. கண்ணா மரங்கள்
பசுமை மாறாத மரங்கள், எப்போதும் தழையும்
தாம்புமாக இருக்கும், 15 மீட்டர்
வரை உயரமாக வளரும், இதன் இலைகள் ஏழு இலைகள்
விரல்களைப்போல அமைந்து
கூட்டிலைகளாக இருக்கும்.
4. பல
அடிமரங்களை உடைய மரமாக வளரும், பூக்கள் மரங்களின் உச்சிப் பகுதிகளில் உருவாகும், மார்ச்
மற்றும் ஏப்ரல் மாதங்களில் கண்ணா மரங்கள் பூக்கும்
காய்க்கும்.
5. சில
நேரங்களில் கண்ணா மரங்கள், மற்ற மரங்களின் மீது ஒட்டுண்ணியாக
வளரும். தேவைப்பட்டால்
ஒட்டுண்ணியாக இருக்கும். இல்லையென்றால் தன்னிச்சையாகவும் வளரும். அதனால் தான் இதனை
எப்பிபைட்ஸ் (EPIPHYTES)என்கிறார்கள்.
இதனை பகுதி நேர ஒட்டுண்ணி என்று கூட சொல்லலாம்.
6. இதன்
பூக்கள் பூங்கொத்துகளாக மலரும், பூங்கொத்து என்றால் சாதாரண பூங்கொத்து அல்ல, இரண்டு
மீட்டர் நீளம் அதாவது 6:30 அடி
நீளம் இருக்கும்.
7. இந்த
பூக்கள் சிறிய பூக்களாக இருக்கும், சிவப்பு பூக்களாக இருக்கும், ஒரு பூங்கோத்தில் அதிகபட்சமாக ஆயிரம்
பூக்கள் கூட இருக்கும்.
8. கோடை
பருவத்தில் இதன் பூக்கள் பூக்க தொடங்கும், இது பல மாதங்கள் தொடரும். இதன் பழங்களை பறவைகள் வவ்வால்கள், மற்றும்
சிறு சிறு பிராணிகள் விரும்பி சாப்பிடுகின்றன. இதன்
இலைகளை ஒரு வகையான கங்காருக்கள் கூட உணவாகக்
கொள்ளுகின்றன.
9. பெரிய
தோட்டங்களில் அல்லது பூங்காக்களில் இந்த மரங்களை அழகு மரங்களாக வளர்க்கிறார்கள். விதைகள்
மூலமாக அல்லது கிளைத்
தண்டுகள் மூலமாக புதிய மரங்களை உருவாக்கலாம்.
10. இந்த
மரங்கள், வடிகால் வசதி உள்ள பரவலான மண் வகைகளில் நன்கு வளர்கின்றன. களிமண் அதிகம் உள்ள
பகுதிகளில் வளர சிரமப்படும்.
11. கேரளா
மாநிலத்தில், சாருக்கா, எட்டிலமரம்,
கப்பமரம், கொட்ட துணிக்கன், இப்படி
பல பெயர்கள், இந்த மரத்திற்கு புழக்கத்தில்
உள்ளன. கேரள மாநிலத்தில், ஒல்லவாயில்,
மல்லப்புறா, உடும்பத்தெறி, கோட்டமாலா,
திருநெல்லி ஆகிய இடங்களில் கண்ணா மரங்கள் பரவியுள்ளன.
12. அரேலியேசி தாவரக் குடும்பத்தில் பெரும்பாலும் மரங்களாகவே இருக்கும், சில குற்றுச்செடிகளும் இருக்கின்றன.
13. இந்த மரங்களின் தாவர ரசாயனங்கள் வறண்ட சருமத்தினை பாதுகாப்புக்கிறது, ஈரப்படுத்துகின்றது, கெட்டிப்பட்ட சருமத்தை மிருதுவாக்குகிறது, மேலும்
தோலின் அடர்த்தியான அழுத்தமான நிறத்தை வெண்மையாக்குகிறது, (MOISTURIZATION, CUTICLE SOFTENING,
WHITENING THE SKIN), இதற்கென பல அழகு சாதனப்
பொருட்கள் தயாரிக்க உதவுகிறது. அதனால் இந்த மரங்கள் உலகெங்கும் உள்ள இளைஞர்கள் இதனை விரும்புகிறார்கள்.
13. பிரபலமான
ஜின்சங் என்னும்
மூலிகையும் இந்த தாவரக்
குடும்பத்தை சேர்ந்தது தான். அதுபற்றி இன்னொரு நாள் பார்க்கலாம். இதனை போகிறபோக்கில் சொல்ல முடியாது.
14. இதன்
வேர்களை பாரம்பரிய மருந்துகள் பல தயார் செய்ய உதவுகிறது. ஜலதோஷம், ஆஸ்துமா
அத்துடன் தொடர்புடைய பல நோய்களை கட்டுப்படுத்த மருந்தாகிறது.
15. ஆனால்
இதன் மருத்துவப்
பண்புகள் ஆராய்ச்சிகள் மூலம் இன்னும்
நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
16. இதன்
பழங்களை சாப்பிடலாம். அது மட்டுமல்ல பறவைகளுக்கு இது மிகப்பெரிய
விருந்து, அது
மட்டுமல்ல பாடும் பறவைகள் (SONG
BIRDS)கொண்டாடும் மரம் இது.
17. அன்பின்
இனிய நண்பர்களே, இந்த மரம் உங்கள் பகுதியில் இருக்கிறதா என்று பாருங்கள், அநேகமாக
இந்த மரத்திற்கு உங்கள் ஊரில் வேறு வேறு பெயர்கள் இருக்கக்கூடும். அப்படி இருந்தால் எனக்கு
சொல்லுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment