Saturday, August 5, 2023

WESTERN GHAT'S TREE NEW-GUINEA'S ROSEWOOD 297. நம்ம ஊர் எண்ணெய் மரம் நியூகினியாவின் ரோஸ்வுட்



WESTERN GHAT'S  TREE 
NEWGUINEA'S  ROSEWOOD

 
 நம்ம ஊர்எண்ணெய் மரம்
நியூகினியாவின் ரோஸ்வுட் 

நம்ம ஊர்எண்ணெய் மரம் நியூகினியாவின் ரோஸ்வுட், எண்ணெய் மரம், பசுமை மாறாத மரம், 40 மீட்டர் உயரம் வரை வளரும் பெரிய மரம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் மரம், அங்கு தாழ்வான மற்றும் நடுத்தரமான உயரம் உள்ள பகுதிகளில் காணப்படும் மரம், ஆனால் அழிந்து வரும் மரஇனம் என்று அறிவிக்கப்பட்டுள்ள  மரம், கட்டுமான பணிகளில் அதிகம் பயன்படுகிறது, ரயில் பெட்டிகள் செய்ய, ரயில் பாதை அமைப்பதில் சிலிப்பர் கட்டைகள் தயாரிக்க,  ஸ்பிரிட் மற்றும் வார்னிஷ் எண்ணெய் தயாரிக்கவும், பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியமாக எய்ட்ஸ் நோய் எதிர்ப்பியாக, கேன்சர் எதிர்ப்பியா மற்றும் பாக்டீரியா எதிர்ப்பியாகவும், பயனாகிறது. 

1. தாவரவியல் பெயர்:: டிப்ட்டிரஸ் இன்டிகஸ் (DIPTEROUS INDICUS) 

பொதுப் பெயர்:  நியூகினியா ரோஸ்வுட், (NEWGUINEA), எண்ணெய் மரம் (ENNAI MARAM)

தாவர குடும்பம்: டிப்டீரோ கார்ப்பேசி (DIPTEROCARPACEAE)

2. பழமொழி பெயர்கள்:

கன்னடம்: பானசம்பா (BANA SAMPA)

மலையாளம்: கல்பெயின் (KALPAYIN)

தெலுங்கு: கல்பயன் (KALPAYAN)

இந்தி: கர்ஜன் (GURJAN)

3. பசுமை மாறாம மரம், 40 மீட்டர் உயரம் வரை வளரும், இலைகள் முட்டை வடிவமாக இருக்கும், 18 சென்டிமீட்டர் நீளமும் 18 சென்டிமீட்டர் அகலமும் இருக்கும் பெரிய இலைகள்.

4. மூன்று முதல் 8 பூக்களை கொண்ட பூங்கொத்துக்களாக பூக்கும்.  இதன் பூக்கள், வெள்ளை நிறப் பூக்கள். வாசமுடையவை. டிசம்பர் முதல் மார்ச் வரை பூக்கும்.

5. பழங்கள் வெடித்து சிதறாதவை. சிவப்பு நிறமாக இருக்கும். மொழுமொழு வென இருக்கும். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை காய்த்து  கனியாக மாறும்.

6. பரவி இருக்கும் இடங்கள்

கர்நாடகா தமிழ்நாடு மற்றும் கேரளா

7. தென்மேற்கு இந்தியாவில் இது மறைந்து வரும் மரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8. மரத்தின் கட்டைகள் செங்காவி நிறமாக இருக்கும். கட்டுமான பணிகளில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக கட்டிட உட்புற வேலைகளுக்காக உபயோகமாகிறது.

9. இதன் மரங்கள் ரயில் பெட்டிகள் செய்ய பயன்படுகிறது. ரயில் பாதை அமைப்பதில் சிலிப்பர் கட்டைகள் தயாரிக்உதவுகிறது. மரத்திலிருந்து எடுக்கும் பிசினில் இருந்து ஸ்பிரிட் மற்றும் வார்னிஷ் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்

10. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அழிந்து வரும் மரஇனம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாழ்வான மற்றும் நடுத்தரமான உயரம் உள்ள பகுதிகளில் அரிதாக மட்டுமே இந்த மரங்களை பார்க்கலாம்.

12. இந்த மரம் மரக்கட்டைகளுக்கானது. அதற்கு அடுத்தபடியாக பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உதவியாக உள்ளது.

13.டிப்டிரியோ கார்பஸ் தாவரங்களில் முக்கியமான மூன்று பயன் தரும் மரங்கள் இருக்கின்றன அவை பிசின் கௌமாரின் மற்றும் ஆகியவை இதில் உள்ளன.

14.முக்கியமாக எய்ட்ஸ் நோய் எதிர்ப்பியாக, கேன்சர் எதிர்ப்பியா மற்றும் பாக்டீரியா எதிர்ப்பியாகவும், அதே சமயத்தில் பல முக்கியமான நோய்களையும் கட்டுப்படுத்தக்கூடியவை.

15.இதனை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மரங்களில் அதற்கு ஏற்ற தாவர ரசாயனங்கள் அடங்கியுள்ளன.

16. பரவி இருக்கும் இடங்கள்

கர்நாடகாவில் தட்சிண கன்னடம், தேவநகரி, ஹாசன். குடகு, மற்று, உத்தர கானரா, மாவட்டங்கள், ஆகியவற்றில் இந்த மரங்கள் பரவி உள்ளன.

17. கேரள மாநிலத்தில் வேநாடு கோழிக்கோடு பாலக்காடு திருச்சூர் இடுக்கி பத்தனம்திட்டா கொல்லம் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த எண்ணெய் மரம் பரவி உள்ளது.

18. தமிழ்நாட்டை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சாயாத்ரி மலையின் தென் பகுதிகளிலும் இந்த மரம்.

அன்பின் இனிய நண்பர்களே ! எண்ணெய் மரம் பற்றிய புதிய செய்திகள் ஏதும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள், நண்றி வணக்கம் !

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...