குழிநாவல் பிரபல கூந்தல் தைல மரம் |
01. குழி நாவல் ஒரு முக்கியமான மூலிகை
மற்றும் பழமரம், இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு
சொந்தமான மரம், இது நாவல் பழத்தின் தாவர குடும்பம் மிர்ட்டேசி’ யைச் சேர்ந்தது, பழங்குடி மருத்துவத்தில் பல ஆயிரம்
ஆண்டுகளாக பயன்படுத்துவரும் ஒரு சிறிய மரம், ஆல்கஹாலுடன் சேர்த்து மது வகைகளையும் தயார் செய்ய உதவும் பழமரம்,
அதன் சிறப்பு சொல்வது என்றால் குழி நாவல், ஒரு கூந்தல் தைலமரம், இளம் வயது வழுக்கை
தடுக்கும் மரம்.
02.தாவரவியல் பெயர்:மிர்ட்டஸ் கம்யூனிஸ் (MYRTUS COMMUNIS)
பொதுப் பெயர்கள்: ட்ரூ மிர்ட்டில், காமன் மிர்ட்டில் (TRUE
MYRTLE, COMMON MYRTLE)
03.பலமொழிப் பெயர்கள்
தமிழ்:சட்டீவம், குழி நாவல், சதேவம், தேவம், தேவமரம்.(SATIVAM, KUZHINAVAL, SADEVAM,DEVAM,DEVAMARAM)
பெங்காலி: சுட் சோவா(SUT SOVA)
இந்தி: பரகாஷா (BARAGASHA)
கன்னடா: முறுகிலு கிடா (MURUGILU KIDA)
மராத்தி: ஃபிரங்கி மேத்தி (FRANGI METHY)
சமஸ்கிருதம்: காந்தமாலதி (GANTHA MALATI)
தெலுங்கு: சிட்டி ஜாமா (CHITTI JAMA)
உருது: ஆஸ்
(AAS)
04. தாயகம்: தெற்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிற்கு சொந்தமான
மரம், மத்திய தரைக்கடல் நாடுகளில் பிரபலமான மூலிகை,
பிரபலமான கூந்தல் தைல மரம்
என்பது இதன் சிறப்பு.
05.குழி நாவல் ஒரு சிறு மரம் அல்லது குற்றுச்செடி, மாறா பசுமை கொண்ட மரம். 6 மீட்டர் உயரம் வரை வளரும்,
06.இதன் இலைகள் மூன்று முதல் ஐந்து
சென்டிமீட்டர் நீளமானவை, இவை மணம் தருகின்ற அத்தியாவசிய எண்ணையைத் (ESSENTIAL OIL)தருகின்றது.
07. இதன் பூக்கள் நட்சத்திர வடிவில் இருக்கும், பூ இதழ்கள் பெரும்பாலும் வெண்ணிறமாக இருக்கும்.
08. இதன் பழங்கள், உருண்டையாக வட்ட வடிவமாக இருக்கும், பழம் நிறைய விதைகள் இருக்கும், பழங்கள் நீலம் கலந்த கருமை நிறமாக இருக்கும்.
09. ஹிப்போக்ரிடஸ், பிளைனி, டயோஸ்கொரிடஸ், காலன் ஆகிய பிரபலமான எழுத்தாளர்கள்
இதன் பயன்கள் குறித்து, தங்கள் எழுத்துக்களில் குறிப்பிட்டு உள்ளார்கள்.
10. அரேபிய எழுத்தாளர்களும் இதன் மரங்களின் பெருமைகள் பற்றி நிறைய
எழுதியுள்ளார்கள்.
11. இதனை மிர்டில் ஹெர்ப் (MIRTLE HERB)என்று சொல்லுகிறார்கள், இதிலிருந்து தயாரிக்கப்படும் கூந்தல்
தைலம் நீளமான கூந்தலுக்கு விரைவாக வழி செய்கிறது.
11.குழி நாவல் மரத்தைப் பயன்படுத்தி பலவிதமான, மருந்துகளை பழங்குடிகள் தயாரித்து, பயன்படுத்தி வருகிறார்கள்.
12.குடற்புண், சரும நோய்கள், நுரையீரல் தொடர்பான நோய்கள், மிகுதியான
ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, ஆகிய நோய்களை கட்டுப்படுத்த இந்த மரத்தை பயன்படுத்தி இயற்கையான
மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.
13. புற்றுநோய்கள், சக்கரை நோய், பாக்டீரியா வைரஸ் மற்றும் பூசணங்களால் ஏற்படும் நோய்கள், ஆகியவற்றை
கட்டுப்படுத்தும் மருத்துவ பண்புகள், இந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள், பட்டைகள், கொட்டைகள், வேர்கள் ஆகியவற்றில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
14.இப்படிப்பட்ட மருத்துவ பண்புகளை எல்லாம் தரக்கூடிய தாவர ரசாயனங்கள்
இந்த மரங்களின் பல்வேறு பாகங்களில் நிறைந்துள்ளன.
15. இந்த மரங்களின் இருக்கும் பல்வேறு தாவர ரசாயனங்கள், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் குறித்த ஆய்வுகளை ஆழமாக ஆராயும்
போது பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் அற்புதமான இயற்கையான மருந்துகள் நமக்கு கிடைக்கும்.
16.மிர்ட்டில் எண்ணெய் நமது சருமத்தில் உள்ள
சுருக்கங்களை போக்க, தோல் தளர்வினை நீக்க, அதனை பளிச்சிடச் செய்ய, உபயோகமாகிறது.
17.மிர்டில் எண்ணெயை (MYRTLE
OIL) தலையில் தடவி, மசாஜ் செய்தால் முடி கொட்டுவது நிற்கும், பொடுகுகள் போகும், தலையில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.
17. மயிர்கள் மெல்லியதாக இளைத்துப் போகாது. ஆரோக்கியமான கூந்தலுக்கும்
தலை முடிக்கும், அனுசரணையாக இருக்கும். தலையில் இளம் வயது வழுக்கை தலை காட்டாது.
18.சைனு சைட்டிஸ் (SINU SITIS) தலைக்கனமாக உணர்தல் தலைவலி கண் வலி மூக்கடைப்பு, மூச்குக்குழாய் அழற்சி, ஆகியவை அத்தனையும் குணமாகும்.
19.மூச்சுக்குழாய் அழற்சி என்பது, கடுமையான இருமல், நுரையீரல் மற்றும் நுரையீரலுக்கு
காற்றைக் கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் வீக்கம், இதனால்
கெட்டிப்பட்ட சளி வெளியேறுதல் ஆகியவற்றைக்குறிக்கும்,
20.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூசணங்களால் ஏற்படும் நோய்களை இதன் மூலம் தாயாரிக்கும் மருந்துகள் குணமாக்குகின்றன.
21. குழி நாவல் இலைகளில் செய்யும் மருந்துகளை கொண்டு ப்ராஸ்டேட்
சுரப்பியின் வீக்கம், கக்குவான் இருமல், எலும்புருக்கி நோய், வயிற்றுப்போக்கு, ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.
22.குழி நாவல் பழங்களை சாப்பிடலாம், பழங்கள் சிறிய சைஸ் ஜம்பு நாவல் பழங்களை போல நீள்வட்ட உருண்டையாக, கருநீல நிறமாக இருக்கும்.
23. பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும், உலர்த்திய இலைகள் பூக்கள் மற்றும் பழங்களை உணவுப் பண்டங்களில்
மணமூட்டியாக பயன்படுத்துகிறார்கள்.
24. சில சமயங்களில் பிரியாணி இலைக்குப் பதிலாக இந்த குழி நாவல் இலைகளை
பயன்படுத்துகிறார்கள். பறித்த புதிய பூக்களை
சாலடுகளில் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
25. சட்டென்று பார்க்க ப்ளூபெர்ரி போல இருக்கும், இந்த குழி நாவல் பழங்களின் பழத்தசை சிவப்பு அல்லது ஊதா நிறமாக
இருக்கும் ப்ளூபெர்ரியின் பழத்தசை பசுமையாக இருக்கும்.
26.குழி நாவல் பழங்களை அறுவடை செய்ததும் சாப்பிட முடியாது, ஆனால் அவற்றை சமைத்து சாப்பிடலாம்.
27. குழிநாவல் பழங்களிலிருந்து மிர்ட்டோ மற்றும் கார்சிகா என்னும் பானங்களை தயார் செய்கிறார்கள்.
28. இந்த பழங்களும் பானங்களும் கர்சீனா மற்றும் சாரிடினியா ஆகிய
தீவுகளில் பிரபலமானவை.
குழி நாவல் பழ மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று சொல்லுங்கள்,அது பற்றிய உபயோகமான தகவல் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு
சொல்லுங்கள் நன்றி வணக்கம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment