CAESARIA TOMENTOSA |
அடி முதல் முடிவரை மருந்து மரம் கடிச்சை |
கடிச்சை
மரங்கள் நம்மிடையே பிரபலம் இல்லாதவை தான் ஆனால் அது பல நாடுகளிலும் பரவி உள்ளது
என்ற செய்தி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. காலம்
காலமாக கடிச்சை மரத்தின் வேர் இலை மற்றும்
பூக்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்பட்டு வருகிறது. இந்த மரங்கள்
தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பழங்குடி மருத்துவத்திற்கு உதவி வருகிறது, இந்த கடிச்சை மரங்கள்
மலைப்பகுதிகளில்
பிரச்சனையில்லாமல் வளருகின்றன. எது எப்படியோ கடிச்சை மரம் ஒரு மருத்துவமரம் எனத்
தெரிகிறது.
1. தாவரவியல்
பெயர்: கசாரியா
டொமென்டோசா (CAESARIA
TOMENTOSA)
பொதுப் பெயர்: டூத்திடு
லீப் சில்லா (TOOTHED LEAF CHILLA)
தாவரக்
குடும்பம்: சாலிகேசி (SALICACEAE)
தாயகம்: இந்தியா
மற்றும் மியான்மர்.
2. மருத்துவ
பயன்கள்
காலம்
காலமாக இந்த மரத்தின் வேர் இலை மற்றும்
பூக்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் உலர்த்தி இடித்து மாவாக்கி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.
3. மாவாக்கி
சேகரித்த இந்தத் தூளை தேன்
மஞ்சள் மோர், நீர்,
எலுமிச்சை சாறு போன்றவற்றுடன் சேர்த்து பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
4. உதாரணமாக
குடற்புண் கைகால் வீக்கம் கால் வெடிப்புகள் வயிற்று வலி மலேரியா காய்ச்சல்
தொண்டையில் தசை வளர்ச்சியினால் ஏற்படும் வலி அதிக வெப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரோக்,
மற்றும் உடலில் ஏற்படும்
காயங்கள், புண்கள், எலும்பு முறிவு ஆகியவற்றை இந்த கடிச்சை மரத்தின் மூலம்
குணப்படுத்துகிறார்கள்.
5. பழங்குடி
மக்களின் அனுபவ அடிப்படையில் கடிச்சை
மரங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் நமக்கு பயனுள்ள தகவல்கள் பல
கிடைக்கும்.நமக்கு நோய்களிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.
6. கடிச்சை
மரங்கள் நம்மிடையே பிரபலம் இல்லாதவை தான் ஆனால் அது பல நாடுகளிலும் பரவி உள்ளது
என்ற செய்தி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. இந்த கடிச்சை மரங்கள் இந்தியா
உட்பட ஆசியா முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. அவை நேபாளம் பாகிஸ்தான்
ஸ்ரீலங்கா மலேசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா என பரவி உள்ளது.
7.பொதுவாக
இந்த கடிச்சை மரங்கள்
மலைப்பகுதிகளில்
பிரச்சனையில்லாமல் வளருகின்றன. அதிகபட்சமாக 900 மீட்டர் உயரம் உள்ள வறண்ட பகுதிகளில், பெரும்பாலும்
ஓடைக்
கரைகளில், இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.
8.பழங்கள்
ஆரஞ்சு மற்றும் சிவப்பு பழத்தை தசையுடன்
விதைகள் இருக்கும். இந்த
பழங்களை மீன் நஞ்சாக பயன்படுத்துகிறார்கள். காற்று பறவைகள் மற்றும் பிராணிகள்
மனிதர்கள் மூலமாக இந்த விதைகள் பரவுகின்றன.
9. இந்த
கடிச்சை மரங்கள் பிப்ரவரி
மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஏழு மாதங்கள் பூக்களை பூக்கின்றன. இந்த
பூக்கள் வெள்ளை மற்றும் வெளிர் பச்சை நிறமாக
இருக்கும், பூக்கள் அனைத்தும் இரு பாலின பூக்கள்.
10. கடிச்சைமர
இலைகள் அடர்த்தியான பசுமை நிறமாகவும் இருக்கும், பெரிய
இலைகள், அவை ஐந்து முதல் 12 சென்டிமீட்டர் நீளம் உள்ளவைகளாக இருக்கும்.
11. இந்த மரங்கள் அனைத்தும் உயரம் குறைவானவை, அதிகபட்சமாக 8 மீட்டர்
உயரம் வரை வளரும். இதன் இலை தலை பூ அனைத்தும் கசப்பாக இருக்குமாம். எது
எப்படியோ கடிச்சை மரம் ஒரு மருத்துவமரம் எனத்
தெரிகிறது.
12. பலமொழிப்
பெயர்கள்:
குஜராத்தி: மஞ்சாட் (MUNJHAAD)
ஹிந்தி: சில்லா (CHILLA)
மராத்தி:மோத்கி (MODH GI)
நேபாளிஸ்: சனோ பெத்தி (SANO
BETHI)
சமஸ்கிருதம்:
சில்காக்கா (CHILAKA)
தெலுங்கு
சிலாக்கா (CHILAKA)
தமிழ்: கடிச்சை (KADICHAI)
13. கர்நாடகாவில்
இந்த கடிச்சை மரம் பரவி இருக்கும் இடங்கள், பெல்காம், சிக்மகளூர், கூர்க், ஹாசன், மைசூர் மற்றும் வடக்கு கானரா.
14. பொதுவாக
இந்த கடிச்சை மரங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பழங்குடி
மருத்துவத்திற்கு காலங்காலமாக உதவி வருகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
15. இதுவரை
நான் 2000 மரங்களுக்கு மேல் ஆய்வு செய்துள்ளேன். இந்த
ஆய்வில் நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் ஏறத்தாழ எல்லாம் மரங்களுமே
மருத்துவ பயன் உள்ளவைகளாக உள்ளன.
16. இதை
ஆய்வு செய்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நல்ல
புதிய இயற்கை மருந்துகள் நமக்கு கிடைக்கும். நாம்
நோயின்றி வாழ்வதற்கு அவை உறுதுணையாக இருக்கும். இந்த மரம் குறித்த புதிய தகவல்
ஏதும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment