Sunday, August 20, 2023

TENSION FREEING TREE WEEPING PAPER BARK 312. காகிதப்பட்டை மனஅமைதி மரமூலிகை

 மனஅமைதி மரமூலிகை
காகிதப்பட்டை 

WEEPING PAPER BARK TREE


காகிதப்பட்டை மரம் உயரமாக வளரும் சிறு மரங்கள், இதன் பட்டைகள் காகிதம் போல மெல்லியதாக இருக்கும், காகிதம் போல மெல்லியதாக இருக்கும், உரித்தால் சுலபமாக வந்து விடும், பாரம்பரிய மருந்துகளை தயாரிக்க இந்த மரம் உதவுகிறது, அமைதி இல்லாத மனநிலை உடையவர்களை சாந்தப்படுத்துவதற்காகவும், குழந்தைகளுக்கு ஏற்படும்  நோய்களை குணப்படுத்தவும், இந்த மரத்தின் பட்டை மற்றும் இலைகளை ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

1.தாவரவியல் பெயர்: மெலலீயூக்கா லியூகாடியூட்ரா (MELALEUCA LEUCADENDRA)

பொதுப் பெயர்: சதுப்பு தேயிலை மரம், வீப்பிங் பேப்பர் பார்க், லாங் லீவ்டு பேப்பர் பார்க், ஒயிட் பேப்பர் பார்க் (SWAMP TEA TREE, WEEPING PAPER BARK, LONG LEAVED BPAPER BARK, WHITE PAPER BARK)

இந்த காகித பட்டை மரம் மிர்ட்டேசி  (MYRTACEAE)என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

2. காகிதப்பட்டை மரங்கள் உயரமாக வளரும் சிறு மரங்கள், அதிகபட்சமாக 7 மீட்டர் உயரம் வரை வளரும்.

3.மரத்தின்  தலைப்பகுதி பறந்து விரிந்து இருக்கும். மரத்தின் பட்டைகள் காகிதம் போல மெல்லியதாக இருக்கும்,உரித்தால் சுலபமாக வந்து விடும்.

4.இந்த மரப் பட்டையின் பண்பை வைத்துத்தான்  இதனை காகித மரம் என்று சொல்லுகிறார்கள்.

5.இதன் இலைகளில் எண்ணற்ற எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன. அவை முழுக்க ஒருவிதமான வாசனை எண்ணெயால்(AROMATIC OIL) நிறைந்திருக்கும்.

6. இந்த காகிதப்பட்டை மரத்தை வெகுகாலகமாக சர்வதேச அளவில் இதன் மருத்துவ பயனை கருத்தில் கொண்டு  பல நாடுகளில் வளர்த்து வருகின்றன. 

7. உதாரணமாக அமைதி இல்லாத மனநிலை உடையவர்களை சாந்தப்படுத்துவதற்காக இந்த மரத்தின் பட்டை மற்றும் இலைகளை ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

8.சிலர் எப்போதுமே பிரச்சனைகளின் மத்தியிலே உழல்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் மன அமைதி இருக்காது. சிலர் எப்போதும் பேய் பிசாசு அல்லது துஷ்ட அலகைகளின் பிடியில் இருப்பதாக நினைப்பார்கள்.

9. அவர்களின் மனதை சாந்தப்படுத்த, மன அமைதி பெற, மன வலிகளில் இருந்து நிவாரணம் பெற,  தூக்க மருந்துகளை அல்லது மயக்க மருந்துகளைத் தருவது உண்டு. அப்படிப்பட்ட காரியங்களுக்கு பாரம்பரிய மருந்துகளை தயாரிக்க இந்த மரம் உதவுகிறது.

 10. மேலும் பல்வேறு விதமான பாக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய கட்டுப்படுத்தக்கூடிய பாரம்பரிய மருந்துகளையும் இதில் இருந்து தயார் செய்கிறார்கள். 

11.புற்றுநோய், லீஷ்மேனியாசிஸ் (LEISHMANIASIS)போன்ற பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் எல்லாம் கியூபா நாட்டில் நடந்தேறி வருகிறது தற்போது.

12.சேண்ட்ஃபிளீஸ் (SAND FLEAS) என்று சொல்லக்கூடிய மணல் ஈக்கள் கடிப்பதனால் ஏற்படுகின்ற, ஒரு தோலின் மீது ஏற்படுகின்ற ஒரு விதமான நோய். இதனை லீஷ்மேனியாசிஸ் என்று சொல்லுகிறார்கள். இந்த ரிஷ்மேனியாசிஸ்சின் முற்றிய நிலையைத்தான் காலாஆசார் (KALA AZAR) என்று குறிப்பிடுகிறார்கள். 

13.கல்கத்தா அல்சர் (CALCUTTA ULCER)என்பதும்  டெல்லி பாயில் (DELHI BOIL) என்பதும் லீஷ்மேனியாசிஸ் என்ற நோயின் வேறு பெயர்கள்தான்.

14. இந்த மரத்தின் சிறப்பே இதன் பட்டை தான். இதன் பட்டையை காகிதம் மாதிரி, பேப்பர் மாதிரி உரித்து எடுக்கலாம்.

15.இந்த மரத்தின் பட்டைகள் பல அடுக்குகளாக இருக்கும். இதனை உரித்து எடுத்து வீடுகளுக்கு கூரையாக போடலாம்.

16.இதன் பட்டையை உரித்து எடுத்து அதனை பேப்பர் போல காகிதம் போல எழுதுவதற்கு பயன்படுத்தலாம். ஆச்சரியமான மரப்பட்டைகள்.

17.இந்த காகித பட்டை மரங்கள் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா நாடுகளில் நிறைய வளர்ந்திருக்கின்றன.

18.பழங்கள் மற்றும் இதர பொருட்களை பேக்கிங் செய்வதற்கு இந்த பட்டைகளை பயன்படுத்தலாம் என்றும் சொல்லுகிறார்கள். 

19.இந்த மரத்திலிருந்து வடியும் பிசினை உணவாக பயன்படுத்தலாம், இதிலிருந்து இங்க் தயார் செய்யலாம், ஒட்டும் பசையாகவும் பயன்படுத்தலாம். 

20.இந்த காகிதப்பட்டையையும் மரத்தின் நெற்றுக்களையும் உணவாகப் பயன்படுத்தலாம்.

21.இந்த மரத்தின் கட்டைகளை பயன்படுத்தி மேஜை நாற்காலி போன்ற மரச் சாமான்களை செய்யலாம்.

22. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் சளி ஜுரம்  ஜலதோஷம்  ஆகியவற்றை குணப்படுத்த இந்த மரத்தின் பட்டைகள் இலைகள் கட்டைகள் வேர்கள்  ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

24. இந்த காகித பட்டை மரத்தின் சொந்த ஊர் ஆஸ்திரேலியா. இங்கிருந்து தான் பல நாடுகளுக்கும் பரவியது என்று சொல்லுகிறார்கள்.

25.இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இந்த மரத்தின் பட்டைகளை படுக்கையாகவும் பயன்படுத்துகிறார்கள். பேண்டேஜ் போடுவதற்கு கூட மருத்துவமனைகளில் இதை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.

நம்ம ஊரில்கூட வீட்டிற்கு ஒருமரம் வளர்த்தால் போதும் நோட்டு வாங்க  புஸ்தகங்களுக்கு அட்டைபோட சிர்மமப்பட வேண்டாம் போல இருக்கிறது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

1 comment:

சுப்ரமணிய பாலா said...

இதை வளர்க்கலாம் காதலர்கள் காதலிக்கு பரிசா தரலாம்...என்றும் சொல்லிடலாமா...நன்றூ புது புது தகவல்கள் ...பாலா

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...