Sunday, August 27, 2023

TAKOLI INDIAN TREE HERB 319. எரிகை என்னும் காட்டுப்பச்சிலை மரமூலிகை

 

எரிகை என்னும்
காட்டுப்பச்சிலை
 

TAKOLI INDIAN TREE HERB  

எரிகை ஒரு அழகான இந்திய மருத்துவ மரம், எப்படிப்பட்ட மண்ணிலும், வளரும் மரம், காடுகள் அழிவுற்ற பகுதியில், அவற்றை மீண்டும் காடுகளாக உருவாக்கும்  முயற்சியில் இந்த மரத்தை பயன்படுத்தலாம், எரிகை ஒரு மூலிகையாக வலியின் நிவாரணியாக வயிற்றுப் போக்கினை குணப்படுத்துவது போன்ற பல மருந்துகளை தயாரிக்க உதவுகிறது, தமிழில் பச்சிலை என்றாலே மூலிகை என்று ஒரு அர்த்தம் உண்டு.

1. தாவரவியல் பெயர்: டால்பெர்ஜியா லேன்சியோலேரியா (DALBERGIA LANCEOLARIA)

2.பொதுப்பெயர்: டக்கோலி (TAKOLI)

தாயகம்: இந்தியா, ஸ்ரீலங்கா, நேப்பால், பர்மா மற்றும் இந்தோசைனா

3. பழமொழி பெயர்கள்:

அசாமிஸ்:மேடா லுவா (MEDA LUWA)

கன்னடா: ஹசிரு கனி (HASIRU GANI)

மலையாளம்: மன்னாவிட்டி (MANNAVITI)

மராத்தி: டேண்டஸ் (DANDUS)

ஒரியா: டோடிலோ (DODILO) 

ராஜஸ்தான்: பர்பாட்டி (PARBATI)

தெலுங்கு: நாகுலபச்சாரி (NAGULAPACHARI)

உருது:  டேண்டஸ் (DANDUS)

ஹிந்தி: டக்கோலி (TAKOLI)

4.எரிகை ஒரு அழகான பூ மரம்,மே ஜூன் மாதங்களில் கூடுதலான அழகாக இருக்கும், பெரிய மரம் ரோமங்கள் இல்லாமல்  மொழு மொழுவென இருக்கும் பட்டைகள். 7 முதல் 15 சென்டிமீட்டர் நீளமான கூட்டிலைகள்.

5.இதன் விதைக்கனியை இடித்து மாவாக்கி அத்துடன் நீர் சேர்த்தால் அது கருப்பு நிற கூழ்போல மாறும், அதனை பேதி மருந்தாகத் தரலாம். 

6. இது ஃபேபேசி குடும்பத்தை சேர்ந்தது, டால்பேர்ஜியா பிரிவில் ஏற்கனவே நாம் இரண்டு முக்கியமான மரங்களை பார்த்திருக்கிறோம் ஞாபகம் இருக்கிறதா

7.ஒன்று ரோஸ்வுட்  என்று சொல்லப்படும் ஈட்டி மரம், டால்பர்ஜியா லேட்டி போலியா?  இன்னொன்று சிசு மரம், டால்பர்ஜியா சிசு. 

8.எப்படிப்பட்ட மோசமான  சூழ்நிலைகளிலும், எப்படிப்பட்ட மண்ணிலும், வளரும் மரம் என்பதால் காடுகள் அழிவுற்ற பகுதியை மீண்டும் காடுகளாக உருவாக்கும்  முயற்சியில் இந்த எரிகை மரத்தை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். 

9. ரிகை மரங்களை  பூக்கும் பருவத்தில் பூக்களோடும் இலைகளோடும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

10. எரிகை மரத்தை  ஒரு மூலிகையாக வலி நிவாரணியாக மற்றும் வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் உதவுகிறது.

11.எரிகைமரம் ஒரு இலை உதிர்க்கும் மரம், இலைகள் 15 சென்டிமீட்டர் நீளமாக கொத்துக்களாக இருக்கும்.

12. எரிகையின் பூக்கள் அழகிய வெளிறிய ஊதா நிறத்தில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் இந்த பூக்கள் தோன்றும்.

13. எரிகை பெரிய மரங்கள், 100 அடி உயரம் வரை வளரும், மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களுக்கு  நல்ல மருந்தாக பயன்பட்டு வருகிறது.

14.இதன் இலைகள் 17 ஜோடி இலை அடுக்குகளைக் கொண்ட கூட்டிலைகளாக இருக்கும். இதன் பழங்கள் அல்லது நெற்றுக்கள்  தட்டையாக இரண்டு நுனிப்பகுதிகளும் கூர்மையாக இருக்கும்.

15. ஜனவரி முதல் மார்ச்சு ரையான காலங்களில் இலைகள் உதிர்ந்து ஏப்ரல் மே மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நெற்றுக்கள் முதிர்ந்து அவற்றில் விதைகள் உருவாகும்.

16. புதிய எரிகை மரக் ன்றுகளை உருவாக்க, இதன் விதைகளைப் பயன்படுத்தலாம். இந்த மரங்களை வயல் வரப்புகளிலும் சாலை ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம்.

17. சுமாரான வடிகால் வசதி உள்ள நிலங்களில் குறைவான தண்ணீர் தேவையில் இந்த மரங்கள் நன்றாக வளரும்.

19.இலைகள் 17 ஜோடி இலை அடுக்குகளை கொண்ட கூட்டிலைகளாக இருக்கும். இதன் பழங்கள் நெற்றுக்கள் தட்டையாக இரண்டு நுனிப்பதிகளும் கூர்மையாக இருக்கும்.

எரிகை மரங்களை வயல் வரப்புகளிலும், சாலை ஓரங்களிலும், நட்டு வளர்க்கலாம். சுமாரான வடிகால் வசதி உள்ள நிலங்களில் குறைவான அளவு தண்ணீர் தேவையில் இந்த மரங்கள் நன்றாக வளரும்.

எரிகை என்றும் காட்டு பச்சிலை என்றும் சொல்லக்கூடிய மரங்கள் உங்கள் பகுதியில் இருக்கிறதாமருத்துவ ரீதியாக அதனை மூலிகையாக நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்பது பற்றிய விவரங்களை சொல்லுங்கள் நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...