Tuesday, August 15, 2023

SUNDARI TREE OF SUNDARBAN MANGROVES 307. சுந்தரி அலையாத்தி முகம்பார்க்கும் கண்ணாடிஇலை மரம்

சுந்தரி முகம்பார்க்கும்
கண்ணாடிஇலை மரம்

1.சுந்தரி மரம் என்றும் தமிழில் முகம்பார்க்கும் கண்ணாடிஇலை மரம் என்றும் சொல்லப்படும் அலையாத்தி மரம். இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளின் பரவி இருக்கும் உலகின் பெரிய அலையாத்தி காடுகளில் இருக்கும் முதன்மையான மாங்குரோவ் மரவகை.

2. தாவரவியல் பெயர்: ஹிர்ட்டீரா ஃபார்மஸ்(HERETIERA FOMES)

தாவரக் குடும்பம்: மால்வேசி (MALVACEAE) 

3. பொதுப் பெயர்கள்:

சுந்தர், சுந்தரி, ஜெக்கனசோ, பினிலெக்கனசோ (SUNDER, SUNDARI, JEKANAZO, PINELEKANAZO) என்பதை இதன் பொதுப் பெயர்கள், அல்லது ஆங்கில பெயர்கள்.

4. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் என்னும் பெருமைக்குரியது சுந்தர்பன் காடுகள். சுந்தர்பன் காடுகளின் மிக முக்கியமான அலையாத்தி மரம் என்பது இந்த கண்ணாடி இலை மரம்தான். சுந்தரபன் அலையாத்தி காடுகளில் சுமார் 70% மரங்கள் இந்த சுந்தரி என்னும் கண்ணாடி இலை மரம்தான்.

5. ஐயூசிஎன் அமைப்பு இந்த சுந்தரி அலையாத்தி மரத்தை அழிந்து வரும் மம் என அறிவித்துள்ளது.

6. பயன்கள்

மரங்கள் உறுதியானவை, கடின தன்மை கொண்டவை, வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டவை. இந்த மரங்களின் வயிரப்பகுதி அடர்த்தியான சிவப்பு அல்லது செங்காவி நிறமாக இருக்கும். இதன் மரங்கள் பல வகைகளில் பயனாகிறது.

7. பெரும் பாலங்கள் கட்ட, கட்டிடங்கள் கட்ட, படகுகள் செய்ய, இணைப்பு வேலைகள் (JOINERY WORKS)செய்ய, கம்பங்களாக பயன்படுத்த, கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்ய, கடினமான அட்டைகள் செய்ய, அத்துடன் நல்ல விறகாகவும் பயன்படுகிறது.

8. இப்படி பல வகைகளிலும் உபயோகமாக இருப்பதால், இதனை வியாபார ரீதியாக இந்த மரங்களை தோப்புகளாக வளர்க்கிறார்கள். இதன் பட்டைகளில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால், நோய்களை குணப்படுத்தும் பண்புகள் கொண்டவை என ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளார்கள்.

9. இந்திய பசிபிக் கடலோரங்கள் இந்த சுந்தரி அலையாத்தி மரங்களின் தாயகம். இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முதல் பங்களாதேஷ் மலேசியா மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்..

10. மற்ற அலையாத்தி மரங்களை ஒப்பிடும்போது, சுந்தரி அலையாத்தி மரங்கள் அதிக உப்பு நீர் கேட்காது. அடிக்கடி அலை அடிக்காத உலர்ந்த பகுதிகளிலும் வளரும். அலைகள் அடிக்கடி வந்து அடிமரத்தை நனைத்துக் கொண்டு போக வேண்டும், என்று கேட்காது. சேரும் சகதியமான சதுப்பு நிலத்தில் நன்கு வளரும்.

11. சுந்தரி மரங்கள் நடுத்தரமாக வளரும், 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரும். வேர்கள் அதிக ஆழம் செல்லாது. ஆனால் மூச்சு வேர்களை தரைக்கு மேல் அனுப்பியபடி வளரும்.

12. அடிமரம் பருத்து வளரும். பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும். பட்டைகளில் நீளவாக்கில் வெடிப்புகள் தோன்றும்.

13. வளர்ந்த முதிர்ந்த மரங்கள், மரக்கட்டைகளுக்காக வெட்டப்படுகின்றன. பூக்கள், ஊதா அல்லது ஆரஞ்சு நிறத்தில் கோவில் மணி வடிவத்தில் 5 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்டவைகளாக மலரும். பூக்கள் ஆண் அல்லது பெண் பூவாக இருக்கும்.

14. இதன் பழங்கள் 5 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகவும், 3.8 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டதாகவும் இருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் பழங்கள் முதிரும். இதன் விதைகள் பிரச்சனை இல்லாமல் முளைக்கும்.

15. சுந்தர்பன் அலையாத்தி மரக்காடு என்பது ஒரு லட்சத்து 70 ஆயிரம் எக்டர் பரப்பினையுடையது. இதனை வெப்ப மண்டல பகுதியில் உள்ள கடலோர சதுப்பு நிலம் என்று சொல்லுகிறார்கள்.

16. வங்காளப்புலி சிற்றாடல்மான் காட்டுப்பன்றிகள், மக்காக்கு குரங்குகள், ஆகியவை இந்த மாங்குரோவ் சுற்றுச்சூழலில் வசிக்கும் முக்கிய விலங்குகள். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் புகலிடமும் வசிப்பிடமும் தருவது சுந்தரி மரங்கள் தான்.

17. சுந்தர்ன் சதுப்பு நிலப்பகுதியில் புதைந்து வளரும் இந்த மரங்கள் தான் இந்த பகுதிக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. பருவக்கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சீற்றங்களை ஆற்றுப்படுத்தி அமைதிப்படுத்தும் மரங்களாக இருக்கின்றன, இந்த சுந்தரி மரங்கள்.

18. கடலோர சதுப்பு நிலங்களில் வளரும் இந்த அலையாத்தி மரங்கள், மழைக்காடுகளில் இருக்கும் மரங்களை விட நான்கு மடங்கு அதிகப்படியான காரியமலவாயுவை சுற்றுச்சூழலில் இருந்து சேமிக்கின்றன.

19. சுந்தரி மரங்கள் முக்கியமாக மேற்குவங்க மாநிலத்திற்கு உரிய மரம் இங்கு தான் சுந்தரி மரங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிகமான அளவில் இருக்கும் அலையாத்தி மரங்கள் என்பதை சுந்தரி மரங்கள் தான்.

20. இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவி இருக்கும் சுந்தரபன் அலையாத்தி மரக்காட்டிற்கு அந்த பெயர் வந்ததற்கு முக்கியக் காரணம் சுந்தரி அலையாத்தி மரங்கள் தான்.

21. முகம் பார்க்கும் கண்ணாடி மரம் (LOOKING GLASS TREE)என்ற பெயரும் சுந்தரி மரத்திற்கு உண்டு. காரணம் என்ன தெரியுமா ? அதன் இலைகளின் மீது வெள்ளியை உருக்கி பூசியது மாதிரி இருக்கும். அதனால் இதனை முகம் பார்க்கும் கண்ணாடி மரம் என்றும் இதனை அழைக்கலாம்.

22. சுந்தரி மரங்கள் ஒரிசா மாநிலத்தில் பிட்டார்கனிகா என்ற இடத்தில் மகாநதியின் முகத்துவாரத்திலும் இருக்கின்றன. ஆனால் மேற்கு வங்காளத்தில் இருக்கும் அளவுக்கு அங்கு இல்லை.

23. இந்தியாவில் இருக்கும் முக்கியமான அலையாத்தி காடுகள் ஐந்து, மேற்கு வங்காளத்தில் இருக்கும் சுந்தரபன்மேங்ரோவ்ஸ், தமிழ்நாட்டில் உள்ள பிச்சாவரம் மேங்ரோவ்ஸ், ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரி கிருஷ்ணா மேங்ரோவ்ஸ், ஒரிசா மாநிலத்தின் பிட்டர்கனிகா மேங்கோஸ் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பார்த்தன் ஐலேண்ட் மேங்ரோவ்ஸ். ஆகியவைதான் இந்த ஐந்து மேங்ரோவ்ஸ் காடுகள்.

24. சர்வதேச அளவில் ஐந்து பகுதிகளில் அலையாத்தி காடுகள் அதிக அளவில் உள்ளன ஆசியாவில் 38.7 சதவீதமும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கருபியனில் 20.3% மும், ஆப்ரிக்காவில் 20% மும், ஓசியானிக்கில்  11.9% மும், வட அமெரிக்காவில் 8.4% உள்ளன

25. நாடுகள் என்று பார்த்தால் உலக அளவில், இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில், மலேசியா, பப்புநியூகினியா ஆகிய ஐந்து நாடுகளில் அதிகமான பரப்பளில் அலையாத்தி மரங்கள் உள்ளன.

26. முகம்பார்க்கும் கண்ணாடிஇலைமரம் என்னும் சுந்தரி மரம்

நமது பிச்சாவரம் அலையாத்தி மரக்காடுகளில் இருக்கிறதா ? இருந்தால் அன்பு கூர்ந்து எனக்கு சொல்லுங்கள். நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...