Sunday, August 13, 2023

STRAWBERRY GUAVA ANTI AGEING FRUIT 305. ஸ்ட்ராபெரி கொய்யா இளமையைப் பாதுகாக்கும்

 

இளமையைப் பாதுகாக்கும்
ஸ்ட்ராபெரி கொய்யா


ஸ்ட்ராபெரி கொய்யா பழங்களை ஒரு கடி கடித்தால் கொய்யா மாதிரி வாசம் வீசும், கூடவே ஸ்ட்ராபெரி வாசமும் வீசும், பழங்கள் பார்க்க சிவப்பு மற்றும் அழுத்தமான அழகான பிங்க் நிறத்தில் இருக்கும், அது மட்டுமல்ல பேஷன்ஃபுரூட் மாதிரி ஒரு சுவையும் கூடுதலாக இருக்கும், அதுதான் ஸ்ட்ராபெரி கொய்யா எலுமிச்சம் பழத்தின் புளிப்பும் கொஞ்சம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, இளமையைப் பாதுகாக்கவும்  மருந்தாக இருப்பது இந்த ஸ்ட்ராபெரி கொய்யா.

1. தாவரவியல் பெயர் சிடியம் கெட்டிலியானம் (PSIDIUM CATTLEYANUM) 

ஸ்ட்ராபெரி கொய்யா பார்க்க மினிசைஸ் மாதுளை மாதிரி இருக்கும் பேட்மிட்டன் பந்து அளவுக்கும் இருக்கும்.

3. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த கொய்யா என்பதுதான் ஸ்ட்ராபெரி கொய்யாவின் சிறப்பு, அதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருக்கும், வைட்டமின் சி அதிகம். பாலிபீனால்ஸ் அதிகம்.

4. ஒரு பழம் ஒரு காய்கறி அல்லது ஒரு உணவுப் பொருளில் பாலிபீனால் (POLYPHENOL)இருக்கிறதா ? எவ்வளவு இருக்கிறது, என்று பாருங்கள். பாலிபீனால்கள் இதய நோயை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். அது மட்டுமா புற்றுநோயை கூட நம் உடலில் புக விடாது.

5. அது மட்டுமல்ல இந்த ஸ்ட்ராபெரி கொய்யா பழங்களில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ப்ரீ ரேடிக்கல்ஸ் (FREE RADICALS) என்பவற்றால் ஏற்படும் உடல் உபாதைகளை கட்டுப்படுத்தும்..

6. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது மன ஆரோக்கியத்திற்கும் மருந்தாக இருப்பது இந்த ஸ்ட்ராபெரி கொய்யாவில் சேரடோனின் (SERATONIN)என்னும் தாவர ரசாயனம்..

7. இதில் உள்ள செரடோனின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இவற்றையெல்லாம் செய்வது இந்த ஸ்ட்ராபெரி கொய்யா பழங்களில் இருக்கும் பிளேவனாய்டுகள் (FLAVANOIDS).

8. சிலருக்கு வயதாது தெரியாது, 60, 70 என்றால் கூட பார்க்க 20, 30 மாதிரி இளமையாக இருப்பார்கள். சிலருக்கு 20, 30 என்றால் கூட அறுபது எழுது மாதிரி தோற்றம் தருவார்கள். வயது தெரியாமல் இளமையாக தோற்றம் தருவதற்கு காரணமாக இருப்பது பாலிபீனால் என்னும் தாவர ரசாயனங்கள் தான், அந்த பாலிபீனால், ஸ்ட்ராபெரி கொய்யாவில் கணிசமான அளவு உள்ளது.

9. இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி கணிசமான அளவில் உள்ளன, வைட்டமின் சி நமது உடலில் பாதுகாப்பு சக்தியினை அதிகரிக்கிறது.

10. ஸ்ட்ராபெரி கொய்யாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று சுருக்கமாய்ப் பார்க்கலாம். 100 கிராம் பழத்தில் இருக்கும் சத்துக்களின் விவரங்களை இங்கு தந்துள்ளேன்.

11. கலோரிச் சத்து: 69

புரதம்: 0.6 கிராம்

கொழுப்பு: 0.6 கிராம்

கார்போஹைட்ரேட்:  17.4 கிராம்

நார்ச்சத்து: 5.4 கிராம்

சர்க்கரை:  12 கிராம்

12. தாயகம்

ஸ்ட்ராபெரி கொய்யா ரகங்கள் தெற்குபிரேசில் பகுதிக்கு சொந்தமானது. அங்கிருந்துதான் இந்த ரகம் பல நாடுகளுக்கும் பரவியது.

12.அறுவடை

பீட்ரூட் கலரான இந்த பழங்களின் அறுவடை ஜூலை மாதத்தில் நடக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. இதன் விதைகள் பார்க்க திராட்சை விதைகள் மாதிரி சிறுசாக உள்ளன.

13. பிரேசில் நாட்டுக்கு சொந்தமான இந்த ஸ்ட்ராபெரி கொய்யா தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவியுள்ளது. இதனை ஆன்லைனில், விற்பனை செய்கிறார்கள். அங்கிருந்து கூட வாங்கிக் கொள்ளலாம். இந்தியாமார்ட்டில் ஒரு செடியின் விலை 800 ரூபாய் என்கிறார்கள்.

14. ஸ்ட்ராபெரி கொய்யா சாகுபடிக்கு, நல்ல வடிகால் வசதி உள்ள காரஅமில நிலை 6 முதல் 7.5 வரை உள்ள மண் தேவை. அதில் அங்ககச் சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். செடிகளுக்கு நேரடியா சூரிய ஒளி வேண்டும். பகல் முழுவதுமாக நேரடியாக சூரிய ஒளி கிடைக்கும் படியான இடத்தில் இதனை நட்டு வளர்க்க வேண்டும்.

15. ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களை டுவதன் மூலம் நல்ல தரமான சுவையான பழங்கள் கிடைக்கும்.

16. இதுபோல நமக்கு அறிமுகம் இல்லாத பழச் செடிகளை எழுதுவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள், நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...