Monday, August 21, 2023

SOUTH INDIAN SUREGADA TRADITIONAL HERB TREE 313. காக்காய்பாலை மரம் ஒரு பழங்குடி மூலிகை

 

பழங்குடி மூலிகை
காக்காய்பாலை மரம்

காக்காய்பாலைமரம்  ஈப்பர்பியேசி (EUPHORBIACEAE) என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது, வறட்சியான இலையுதிர் காடுகளுக்கு உரிய மரம், பல்வலி, சரும நோய்கள், வயிற்றுப்போக்கு,  நுண்ணுயிர்களின் தாக்குதல் போன்றவற்றை சரி செய்வதற்கான மருந்துகளை தயாரிக்க முடியும்,

1. தாவரவியல் பெயர்: சூரிகடா லேன்சியோலேட்டம் (SUREGADA LANCEOLATA)

தாவரக் குடும்பம்: ஈப்பர்பியேசி (EUPHORBIACEAE), நெல்லிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.

பொதுப்பெயர்: சவுத் இந்தியன் சூரிகடா (SOUTH INDIAN SUREGADA)

தாயகம்: இந்திய துணை கண்டம், இந்த மரங்கள் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் பரவியுள்ளன. 

2. காக்காய்பாலைமரம் வறட்சியான இலையுதிர் காடுகளுக்கு உரிய மரம்.

3.இந்த காக்காய் பாலை மரம் மலைப்பகுதிகளில் 600 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

4.தமிழ்நாட்டில் பரவி இருக்கும் இடங்கள், சேலம், தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.

5.ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம், கர்னூல் ஆகிய மாவட்டங்கள்.

6. கேரளாவில் கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள்.  

6.ஒரிசாவில் கஞ்சம், கட்டக், கோராபுட், குர்தா,கேந்திரபரா ஆகிய மாவட்டங்கள்.

7.சத்தீஸ்கர் மாநிலத்தில் ரெய்ப்பூர்  மாவட்டம்.

8.பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: காக்கா பாலை (KAKAPALAI)

தெலுங்கு:சர்கடா(SARGADA)

கன்னடா:குருடு நந்தி (KURUDU NANDI)

ஒரிசா: கக்கரா (KAKRA)

9.பசுமையான இலைகள் தலைகீழான ஈட்டி முனை போல இருக்கும்

10. ஆண் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும், ஆண் பூக்கள் காம்புடன் கூடிய பூங்கொத்தாக இருக்கும், பெண் பூக்கள் தனித்தனி பூக்களாக இருக்கும், இலை கணுக்களில் தோன்றும்.

11.பிப்ரவரி முதல் ஏப்ரல் பூத்து காய்க்கும், நெற்றுக்களாக இருக்கும் ஒவ்வொரு பழத்திலும் மூன்று விதைகள் இருக்கும்.

12.பல்வலி, சரும நோய்கள், வயிற்றுப்போக்கு,  நுண்ணுயிர்களின் தாக்குதல் போன்றவற்றை சரி செய்வதற்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

13.இந்த மரம் ஈப்பர்பியேசி (EUPHORBIACEAE)என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை ஆமணக்கு குடும்பம் என்று சொல்லுவார்கள்.

14. இந்த ஆமணக்கு  தாவரக் குடும்பத்தில் 350 பேரினங்களும் 7500 சிற்றினங்களும் உள்ளன.

இந்த மரத்திற்கு ஏன் காக்காய்பாலை மரம் என்று பெயர் வைத்தார்கள் என்று எவ்வளவு தேடியும் அதற்கான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி  வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

2 comments:

மரம் இராஜா...புதுக்கோட்டை. said...

ஐயா தங்களது ஆய்வுக்கட்டுரைகளின் மூலமாக நான் பெற்றுள்ள பயன் சொல்லில் அடங்காது.
தாங்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே வரமாகக்கருதுகிறேன்.
தொடரட்டும் தங்களது தொண்டு.
நன்றியுடன் ...*மரம் இராஜா*
புதுக்கோட்டை.

Gnanasuriabahavan Devaraj said...

ஊர் பேர் தெரியாத மரம் பற்றியெல்லாம் எழுதுகிறோமே இதனால் ஏதாச்சும் பிரயோஜனம் உண்டா ? என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கிறது. தொடர்ந்து படியுங்கள், பயன்பற்றி பதிவிடுங்கள். புதுக்கோட்டை மரம்ராஜா மனசில் எனக்கு கட்டியிருக்கும் புதுக்கோட்டைக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் ?
பூமி ஞானசூரியன்

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...