Wednesday, August 2, 2023

SINGAPORE PROTECT MANGROVE TREES 291.இராப்பாலை சிங்கப்பூர் அரசு பாதுகாக்கும் மரம்.

சிங்கப்பூர் அரசு பாதுகாக்கும்
இராப்பாலை  மரம்.

SINGAPORE PROTECT
MANGROVE TRUMPET TREES


இராப்பாலை அலையாத்தி தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம், ஸ்ரீலங்கா மற்றும் நியூ கலிடோனியா என்னும் பகுதிக்கும் உரியது, இதனை ஆங்கிலத்தில் மேங்ரோவ் ட்ரம்பட் ட்ரீ என்கிறார்கள், இதற்கு கடலோர பகுதிகளைப் பாதுகாக்கும் மரம் என்று அர்த்தம், இதன் பூக்கள் உணவாகிறது, இலைகளும் பட்டைகளும், பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாகின்றன. உணவுக்காக மருந்துக்காக மற்றும் மரக்கட்டைகளுக்காக, ராப்பாலை மரங்களை வளர்க்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதுகாக்கிறார்கள். தற்போது சிங்கப்பூர் அரசு இந்த மரங்களை ருகி வரும் அல்லது அழிந்து வரும் மரம் என்று அறிவித்து அதனை பாதுகாக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பொதுப்பெயர்கள், மேங்ரோவ் ட்ரம்ப்பெட் ட்ரி, டுய் மற்றும் டுவாய் (MANGROVE TRUMPET TREE, TUI, TUVAI)

இதன் தாவரவியல் பெயர், டாலிச்சந்திரன் ஸ்பாத்தாசியா (DOLICHANDRON SPATHOCEA),  இதன் தாயகம் இந்தியா மற்றும் நியூ கலிடோனியா. பிலிப்பைன்ஸ் மற்றும் பசுபிக் கடல் தீவுகள் வரை இந்த இராப்பாலை மரங்கள் பரவி உள்ளன.

இளம் பூக்கள் மற்றும் இதன் காய்களை காய்கறியாக சமைத்து சாப்பிடலாம் இதன் விதைகளை பொடி செய்து இஞ்சி மற்றும் பவேரா மூலிகைவேருடன் சேர்த்து கொடுத்து குணமாக்குகிறார்கள்.

இதன்பட்டையில் இருந்து கருப்பு நிறமான சிறிது பருமனான நாரினை எடுத்து உறுதியான கயிறுகளை தயாரிக்கிறார்கள். ராப்பாலை மரக்கட்டை வெளிறிய வெள்ளை நிறமாக இருக்கும் கட்டைகள், கனமில்லாமல் லேசாக எளிதாக, இதில் வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

ராப்பாலை மரத்திலிருந்து வீட்டுக்கு தேவைப்படும் தட்டுமுட்டு சாமான்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மரக்கட்டைகாலணிகள் ஆகியவற்றை செய்கிறார்கள். இவை தவிர இதனை விறகாகவும் கறி தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

ராப்பாலை மரத்தை ட்ரம்பெட் மேங்ரோவ் என்று சொல்வதற்கு காரணம் அதன் பூக்களின் வடிவம் தான். பூக்கள் 15 முதல் 20 சென்டிமீட்டர் நீளமான ஊதுகுழல் மாதிரி ஏன் நாதஸ்வரம் மாதிரி இருக்கின்றன.

ஒரு பூங்கொத்தில் இரண்டு முதல் 10 பூக்கள் வரை இருக்கும். இதன் பூக்கள் காலையில் மலரும், அந்தியில் உதிரும்.

6 குல் போல நீண்டிருக்கும் பூவின் அடிப்பகுதியில் மிகுதியான அளவு தேன் சுரக்கும் நீளமான உறிஞ்சிகுழல் கொண்ட எந்த ஒரு பூச்சியும் இதனை தேடிச்சென்று அந்த தேனை எடுத்துச் செல்லலாம்.

இதன் காய்கள் நீளமானவை காராமணி மாதிரி மிக நீளமாக இருக்கின்றன 25 முதல் 60 சென்டிமீட்டர் வரை கிட்டத்தட்ட இரண்டரை அடி நீளம் இருக்கும்.

இந்த காய்கள் பச்சையாக இருக்கும் முதிரும்போது காவி நிறமாக மாறிவிடும் இதன் நீண்ட காய்களில் நிறைய விதைகள், செவ்வகமான வெண்மையான சிறு பிஸ்கட் மாதிரி, 1.5 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும் இறக்கையுடன்கூடிய விதைகள், தண்ணீரில் மிதந்து சென்று பரவும். இதன் மரங்கள் லேசாக இருப்பதால் ஜாவா தீவுகளில் வசிப்பவர்கள் இதில் குதிரைச் சேங்களை செய்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இதில் மரச்செருப்புகளை செய்கிறார்கள், ஆனால் அதில் நடக்க பயிற்சி வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தோனேசியாவில் இந்த மரங்களில் பொம்மலாட்டத்திற்கான பொம்மைகளை செய்கிறார்கள். கர்நாடகாவின் பொம்மலாட்ட பொம்மைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை இந்தோனேசிய பொம்மைகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. கர்நாடகாவின் பொம்மலாட்டத்தின் பெயர் ஹாளக்கி சுக்கி குனிதா (HALAKKI SUGGI GUNITHA)என்பது.

இதன் இலைகளில் தேனீர் தயாரித்து குடிக்கலாம் இதன் மூலம் வாயில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்களை குணப்படுத்திக் கொள்ளலாம்

மரங்கள், 16 முதல் 30 மீட்டர் உயரம் வரை உயரமாக வளரும், பல்லாண்டு வளரும் மரம், வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் வளரும்.

கடலோரக் காடுகள் மற்றும் அலையாத்தி மரக் காடுகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன. இதன் பட்டைகள் சாம்பல் நிறம் மற்றும் அடர்த்தியான காவி நிறமாக வழுவழுப்பாக இருக்கும், இதன் இளம் இலைகள் சிவப்பு நிறமாக இருக்கும். முதிர்ந்த இலைகள் அடர்த்தியான பசுமை நிறமாக இருக்கும்.இலைகள் 20 முதல் 30 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும், இதன் காம்புகள் சிவப்பு நிறமாக இருக்கும்.

ராப்பாலையின் வேர்கள், மண்ணுக்கு வெளியே வராத ஆணிவேர் அமைப்பை உடையவை, ஆனால் அலையாத்தி மரங்களுக்குரிய மூச்சு வேர்கள் பற்றி மூச் விடக்கூடாது. அப்படி இதில் ஏதும் இல்லை.

பூக்கள் மற்றும் பழங்களும் அழகானவை. மனதை வருடும் வாசம் உடையவை. பூக்கள் வெண்ணிறமானவை, இரு பாலின பூக்கள். 

ராப்பாலை மரங்களை சாலை ஓரங்களில் நடலாம். கடற்கரை பகுதிகளில் நடலாம். மிகவும் அதிகமான வெப்பம் மற்றும் மிக வேகமாக காற்று வீசும் பகுதிகளிலும் இதனை நடலாம்.

உப்பு நீர் தேங்கி நிற்கும் இடங்களிலும், ஈரம் அதிகமான இடங்களிலும் பிரச்சனை இல்லாமல் இது வளரும். ராப்பாலை  மரங்கள் பரவி இருக்கும் இடங்கள், ஆசியாவில் இந்தியாவில் தொடங்கி இந்தோனேசியா ராப்பாலை மரங்களின் பூக்கள் கவர்ச்சிகரமா இருப்பதால் இதனை அழகு மரமாகவும் வளர்கிறார்கள்.

அலை வீசும் ஓடைக் கரைகள், ஆற்றங்கரைகள், மற்றும் சேரும்சகதியுமான உப்புத்தன்மை கொண்ட மண் கண்டத்திலும் ராப்பாலை மரங்கள் பிரச்சனைகள் இன்றி வளரும்.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரம் வரை உள்ள மணற்பாங்கான மண்கண்டத்தில் கூட இந்த ராப்பாலை மரங்கள் வளரும் என்பது ஆச்சரியமான செய்தி. இதன் விதைகள் கடல் நீரில் மிதந்து சென்று பல இடங்களுக்கும் பரவும் தன்மை உடையவை.

சிங்கப்பூர் ஸ்பெஷல்.

ராப்பாலை என்றும் ட்ரம்பெட் மேங்குரோவ் என்னும் அழகிய மரங்கள் சிங்கப்பூரின் சுங்கை ஃப்ளோரா வெட்லேண்ட் ரிசர்வ் (SUNGAI BULOH WETLAND RESERVE ) என்ற இடத்திலும் புலாவ் உபின் (PULAU UBIN)என்னும் கடலோர பூங்காவிலும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன, இந்த ராப்பாலை அலையாத்தி மரங்கள்.

ராப்பாலை மரங்களை சிங்கப்பூரில் எங்கெங்கு நட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். பேக்மேங்ரோவ் சோன் (BACK MANGROVE ZONE)அலை ஆறுகள் (TIDAL RIVERS) மற்றும் முகத்துவாரங்களில் (ESTUARIES) நட முடிவு செய்துள்ளார்கள்.

சுங்கை ஜெராக், சாங்கி பாயிண்ட், புலாவ்செக்காங் மற்றும் சுங்கை ஜுராங்கின் சுலூயிஸ் கேட்டுக்களில் (SLUIS GATES)இருந்த இந்த மரங்களின் வளர்ச்சிப் பணிகளின் நிமித்தமாக அழிக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக சிங்கப்பூர் கடலோரப் பகுதிகளில் சேறும்சகதியுமான பகுதிகள், கடலோர மணற் பிரதேசங்களிலும் இந்த ராப்பாலை மரங்கள் வளர்கின்றன.

இந்த ராப்பாலை மரம் சிங்கப்பூர் நாட்டில் அருகி வரும் அல்லது அழிந்து வரும் மரம் என்று அந்த  அரசு அறிவித்துள்ளது. அதற்கு அர்த்தம் இந்த மரம் சிங்கப்பூர் நாட்டுக்கு தேவைப்படும் மரம், அதனை பாதுகாக்க பரமரிக்க மேம்படுத்த அரசு விழிப்பாக உள்ளது என்று அர்த்தம், இந்த மரங்களின் காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்படுவார்கள், தண்டிக்கப் படுவார்கள் என்று அர்த்தம்.

அன்பின் இனிய நண்பர்களே உங்கள் பகுதியில் இந்த மரம் இருந்தால் ஒரேஒரு புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள், நன்றி வணக்கம்.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...