Tuesday, August 22, 2023

RED SPINE THORN GREAT IN STATURE 314.காட்டாஞ்சி மூர்த்தி சிறுசு கீர்த்தி பெரிசு !

 

காட்டாஞ்சி  மூர்த்தி சிறுசு
கீர்த்தி பெரிசு !

காட்டாஞ்சி சிவப்பு முட்களை உடைய குற்றுச்செடி அல்லது சிறு மரம், மிகுந்த அறிமுகமும் பிரபலமும் இல்லாதது, இதன் சாற்றினை பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தென்மெரிக்கா மற்றும் சீனாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்துகிறார்கள்,  பல நாடுகளில் பல நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகையாகவும் இதனை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், முக்கியமாக மூட்டுவலி, மூட்டுகள் வீக்கம், எலும்பு தேய்மானம், வயிற்று உபாதைகள், காய்ச்சல்  மற்றும் புற்றுநோய் கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது, மொத்த்தில் காட்டாஞ்சியின் மூர்த்தி சிறுசு கீர்த்தி பெரிசு !

1. தாவரவியல் பெயர்: ஜிம்னஸ்போறியா எமர்ஜினேட்டா (GYMNOSPORIYA EMERGINATA)

2.பொதுப் பெயர்கள்:ரெட் ஸ்பைக் தார்ன்,மேட்டினஸ்  (RED SPIKE THORN, MATENUS)

3.சிவப்பு முட்களை உடைய குற்றுச்செடி, இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும், நிறைய முட்களை உடையதாக இருக்கும். சிக்கலான ஒன்றுக்கொன்று பின்னியது போன்ற  கிளைகளை உடையதாக இருக்கும்.

 4.இலைகள் அழுத்தமான பசுமை நிறத்தில் இருக்கும்.

5.பழங்கள் உருண்டையாக வெடிக்கும் கனிகளாக காவி நிற விதைகளுடன் இருக்கும்.

6.இவை செலஸ்ட்ரேசி (CELESTARACEAE) என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை.

7.செலஸ்டிரேசியே தவிர குடும்பத்தில் 97 பேரினங்களும் 1350 சிற்றினங்களும் அடங்கியுள்ளன.

8.மரங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வு செய்பவன் என்ற முறையில் பார்க்கும்போது மருத்துவ பயன் இல்லாத மரங்கள் எதுவும் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

9.அப்படித்தான் இந்த காட்டாஞ்சி மரமும் மிகுந்த அறிமுகமும் பிரபலமும் இல்லாத ஒரு சிறு மரம் இது. ஆனால் இதன் சரித்திரத்தை பார்க்கும் பொழுது பல நூறு ஆண்டுகளாக பல நாடுகளில் பல நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

10.இந்த செலஸ்டிரேசியே என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்த பல தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தென்னமெரிக்கா மற்றும் சீனாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்திருப்பது தெரிகிறது.

 11.அதுமட்டுமல்ல மனிதர்களை தாக்கம் பலவிதமான நோய்களையும் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உடையது என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

12. முக்கியமாக மூட்டுவலி, மூட்டுகள் வீக்கம், எலும்பு தேய்மானம், வயிற்று உபாதைகள், காய்ச்சல்  மற்றும் புற்றுநோய் கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தவும், இதனை பல நூறு ஆண்டுகள் காலமாக பயன்படுத்தி வந்துள்ளது தெரிய வருகிறது. 

13.இதன் இலைகளை எரித்து நெய்யுடன் சேர்த்து பசையாக்கி புண்கள் அல்லது காயங்களின் மீது தடவுவதால் அதனை குணப்படுத்த முடியும்.

14.இதன் தளிர் இலைகளை பறித்து குறித்த நாட்களுக்கு அவற்றை மென்று வருவதன் மூலம், மஞ்சள் காமாலையை குணப்படுத்த முடியும்.

15.வயிற்று உபாதைகளை (GASTRO INTESTINAL PROBLEMS) சரி செய்வதற்காக இதன் வேர்களில் இருந்து பாரம்பரிய மருந்துகளை தயாரிக்கிறார்கள்.

16.வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்காக இந்த செடிகளின் தளிர் இலைகளை பயன்படுத்துகிறார்கள்.

17.இதன் பட்டைகளை அரைத்து கூழாக்கி அத்துடன் கடுகு எண்ணெயை சேர்த்து தடவுவதன் மூலம்,  தலையில் இருக்கும் பேன்களின் தொல்லையை சமாளிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும்.

18.இந்த முட்செடியின் இலைகளை அரைத்து கூழாக்கி பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு தருவது மூலம் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.

19.இதன் இலைகளுடன் கூடிய சிம்புகளையும் சேர்த்து, அதிலிருந்து கஷாயம் வைத்து பயன்படுத்துவதன் மூலமாக பல் வலியை சமாளிக்க முடியும்.

20. இலைகளை எரித்து சாம்பலாக்கி அவற்றை காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவுவதன் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.

21.பல மொழிப் பெயர்கள்

இந்தி: விங்கர் (VINGER)

இங்கிலீஷ்: தார்னி ஸ்டாஃப் ட்ரீ  (THORNY STAFF TREE)

சமஸ்கிருதம்: விக்கன் கட்டா (VIKAN KATA)

தமிழ்:காட்டாஞ்சி, நண்டு நரனை, வல் உளுவை  (KATTANJI, NANDUNARANI, VAL ULVAI)

கன்னடா: தண்ட்ராசி (THANDRASI)

தெலுங்கு:சின்னி சேட்டு (CHINNI SETTU)

மலையாளம்: கங்குனி (KANGUNI)

மராத்தி: பேஃபால் (BAEFAL)

குஜராத்தி: விக்காடோ (VICKADO) 

22. அன்பின் இனிய நண்பர்களே இந்த முள் செடி பற்றியும் இது எப்படி மூலிகையாக  நல்(ல) செடியாக இருக்கிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்கள் ஊரில் இந்த செடிகள் இருக்கின்றனவா ? இதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்று சொல்லுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...