Wednesday, August 9, 2023

PINEAPPLE GUAVA LATIN AMERICAN FRUIT TREE 301.பைன்ஆப்பிள்கொய்யா லத்தீன் அமெரிக்க பழமரம்

பைன்ஆப்பிள்கொய்யா 
லத்தீன் அமெரிக்க பழமரம்

நமக்கு பைனாப்பிள்பழம் தெரியும் கொய்யாப்பழம் தெரியும், ஆனால் பைன்ஆப்பிள்கொய்யா  தெரியாது, இதன் பழங்களில் பைன்ஆப்பிள் வாசனையும் வீசும், கொய்யாப்பழ வாசனையும் வீசும் அத்துடன் போனஸ்’ சாக ஸ்ட்றாபெரியின் வாசனையும் சேர்ந்து வீசும் அதிசய பழம். பிரேசில், பேராகுவே மற்றும் உருகுவே நாடுகளுக்கு சொந்தமான பழம், ஊட்டி கொடைக்கானல் என்று உஷ்ணம் குறைந்த உயர்ந்த மலைப்பகுதிக்கு ஏற்ற பழப்பயிர். இது ஒரு லத்தீன் அமெரிக்க பழம், ஆன்டியாக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் என கணிசமான அளவில் கொட்டிக் கிடக்கும் பழம் இது.   

1. தாவரவியல் பெயர்: ஃபிஜோவா செலோவியானா (FEIJOA SELLOWIANA)

தாவரக் குடும்பம்: மிர்டேசி (MYRTACEAE) 

பொதுப் பெயர்கள் பைனாப்பிள் கோவா (PINE APPLE GUAVA)பிரேசிலியன் கோவா (BRAZILIAN GUAVA)ஃபிக் கோவா (FIG GUAVA) கோவாஸ்டீன் (GUAVASTEEN)

2. பைன்ஆப்பிள்கொய்யா  பழங்களை தோல் உட்பட கொய்யா போலவே சாப்பிடலாம். பழங்களை இரண்டாக வெட்டி ஸ்பூன் மூலம் பழத்தின் தசையை வழித்து எடுக்கலாம். பழங்களின் தசை சாற்றுடன் கூடியதாக இருக்கும்.

3. பைன்ஆப்பிள்கொய்யா  பழங்களின் தோல் பகுதியில் அதன் தசை கொஞ்சம் கடினமாக அழுத்தமானதாக இருக்கும். இதன் பழங்களை பார்க்கப் பார்க்க கொய்யாவின் பழங்களை பார்ப்பது மாதிரியே இருக்கின்றன.

4. இதன் பூக்களின் இதழ்களையும் சாப்பிடலாம். இந்த பூக்களை பறவைகள் விரும்பி சாப்பிடுகின்றன. பூக்களின் இதழ்கள் ஊதா நிறமாக இருக்கின்றன.

5. பைன்ஆப்பிள்கொய்யா  மரங்கள் வறட்சியை தாங்க கூடியவை. இதன் மரங்களின் பட்டைகள் தாமிர நிறமாக இருக்கும். மரங்கள் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும்.

6. ஏற்கனவே தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளில் 3500 அடி உயரம் உள்ள பகுதிகளில், வீட்டு தோட்டங்களில் பைன்ஆப்பிள்கொய்யா  குடியேறி விட்டது என்கிறார்கள்.  ஆக இது ஒரு குளிர்ச்சியை விரும்பும் பழப் பெயர்.

7. இதன் பழங்கள் சுவையாக இருக்கின்றன. அதிக தண்ணீர் வேண்டாம். பழங்களில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துக்கள் அடங்கியுள்ளன

8.  நாவினை சுண்டி இழுக்கும் இனிப்பு சுவையும் உள்ளது. அதனால் இதனை விரும்பி வளர்க்கிறார்கள். பைன்ஆப்பிள்கொய்யா ங்கள் முட்டை போன்ற வடிவில் ஏறத்தாழ அதே அளவில் இருக்கும்.

9. பைன்ஆப்பிள்கொய்யா வின் மேல்தோல் மெல்லியதாக இருக்கும். தோலின் மீது மென்மையான ரோமங்கள் இருக்கும். பழங்கள் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்கும்.

10. பைன்ஆப்பிள்கொய்யா  பழங்கள் அதன் பெயருக்கேற்ப அதன் வாசனை பைனாப்பிள் கொய்யா மற்றும் ஸ்ட்ராபெரி ஆகியவற்றின் வாசனையை சமமாக கலந்தது மாதிரி இருக்கும். ஆச்சரியமூட்டும் பழ வாசம்.

11. இந்த பைனாப்பிள்கொய்யா தென்அமெரிக்காவிற்கு சொந்தமானது. என்றாலும் கூட இதனை அதிகம் உற்பத்தி செய்வது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகள் தான்.

12. இதன் சுவையை அற்புதமான புளிப்பு சுவை என்கிறார்கள். பழங்கள் கனிந்தால் அத்துடன் ர்பண்டைன் வாசமும் சேர்ந்து கொள்ளும்.

13. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள். அதுபோலவே ரஷ்யா ஈரான் ஸ்பெயின் இத்தாலி ஆகிய நாடுகளும் இதனை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

14. இதன் பூக்கள் அவ்வளவு அழகாக இருக்கும். வெள்ளையும் ஊதா நிறமும் ஆன இதழ்கள் விரிந்திருக்க, இதன் மகரந்த கேசரங்கள் அடர்த்தியான செங்காவி  நிறத்தில் கோழிக்கொண்டைபோல போல எழுந்து நிற்கும்.

15. பைனாப்பிள்கொய்யா செடிகள் மெல்ல வளரும். விதைகளிலிருந்து வளரும் இதன் மரங்கள் மூன்றாம் ஆண்டு முதல் பூத்து காய்க்க தொடங்கும்.

16. மருத்துவ பயன்கள் இதன் தோல்களிலிருந்து எடுக்கும் சாற்றினை புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தவும், பாக்டீரியா எதிர்ப்பியாகவும் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த பழங்களில் ஆன்டிஆக்சைடுகள் நிரம்ப உள்ளன.

17. விதைகள் மற்றும் கிளைத் துண்டுகளை பயன்படுத்தியும், புதிய கன்றுகளை, செடிகளை உற்பத்தி செய்யலாம். கிளைத்துண்டுகளை எடுக்கும் போது இளம் தண்டுகளில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும்.

18. பைன்ஆப்பிள்கொய்யா  பழங்கள் குறைவான கலோரி சக்தி உடையது.   நூறு கிராம் பழத்தில்,  லோரிச்சத்து 55 மட்டுமே உள்ளது. 6.4 கிராம் நார்ச்சத்தும், 32.9 மில்லிகிராம் விட்டமின் சி யும், இவை தவிர பி  காம்ப்ளக்சும் விட்டமின் இ மற்றும் கே வும் அடங்கியுள்ளன

19. அத்துடன் கால்சியம் மெக்னீசியம் காப்பர் மற்றும் மேங்கனீசும் கணிசமான அளவில் உள்ளன. சாதாரணமாக பழங்களில் மதிப்பு கூட்டுதலில், என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்த பைன்ஆப்பிள்கொய்யா வில்  செய்யலாம்.

20. அன்பின் இனிய நண்பர்களே இன்று ஒரு புதிய பத்தைப்பற்றித் தெரிந்து கொண்டோம். உங்கள் நண்பர்கள் யாராவது ஊட்டி, கொடைக்கானலில் இருந்தால் அங்கு இந்த பைனாப்பிள்கொய்யா நுழைந்துவிட்ட்தா என்று விசாரியுங்கள், நன்றி வணக்கம், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...