Friday, August 18, 2023

MULTI NATIONAL HERB KAMALA TREE 310.பன்னாட்டு மூலிகை கபிலப் பொடி மரம்

பன்னாட்டு மூலிகை
கபிலப் பொடி மரம்


கபிலப்பொடிமரம் 
என்னும் குரங்கு மஞ்சணத்தி மரங்கள், 
நடுத்தரமான மரம்,  இந்தியா ஸ்ரீலங்கா மலேசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பரவியுள்ளன, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, பாரம்பரிய மருத்துவம், யுனானி ம ரு த் து வ ம், ஆகியவற்றில் எல்லாம் இது உபயோகமாகிறது,  எண்ணற்ற  நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த மூலிகை, புற்றுநோய், சக்கரைநோய், சிறுநீரகம், மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உபயோகமாக உள்ளது.

தாவரவியல் பெயர்: மல்லோட்டஸ் பிலிப்பன்சிஸ் (MALLOTUS PHILLIPENSIS) 

தாவரக் குடும்பம்:ஈப்பர்பியேசி (EUPHORBIACEAE)

பொதுப்பெயர்கள்: கமலா ட்ரி, மங்கி ஃபேஸ் ட்ரி (KAMALA TREE, MONKEY FACE TREE)

2.பிறமொழி பெயர்கள்

அசாமிஸ்: ஜோரத் (JORATH)

பெங்காலி: கமலா (KAMALA)

ஹிந்தி: ரைனி (RAINI)

இருளா: சென்னூரி (CHENOORI)

கன்னடா: கும்குமடா (KUM KUMADA)

மராத்தி: கபிலா (KAPILA)

மலையாளம்: கபிலா (KAPILA)

சமஸ்கிருதம்: கம்பில்யாகா (KAMPILYAKA)

தமிழ்:  கபிலப்பொடி மரம் (KAPILAPODI MARAM)

தெலுங்கு: குன்குமா சேட்டு  (KUNKUMA SETTU)

3. கபிலப்பொடிமரம், நடுத்தரமான மரம், எட்டு மீட்டர் உயரம் வரை வளரும். சில சமயம் 14 மீட்டர் கூட வளரும். பசுமை மாறா, வறண்ட இலையுதிர் காடுகளில் மற்றும் சமவெளிகளில் வளரும் மரம்.

4. அக்டோபர் முதல் மார்ச் வரையான 6 மாதங்களில் கபிலப்பொடி மரங்கள் பூத்துக் குலுங்கும். பழங்கள் அழுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும்.

5. சர்வதேச அளவில்,  இந்தியா ஸ்ரீலங்கா மலேசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.

6. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், இமயமலையின் மேற்குப் பகுதியிலும், இந்த மரங்கள் பரவியுள்ளன.

7. இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேசம், அசாம், கேரளா, மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த கபிலப்பொடிமரம் பரவியுள்ளன.

8. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, பாரம்பரிய மருத்துவம், யுனானி மருத்துவம், ஆகிய மருத்துவ முறைகளில் எல்லாம் இந்த கபிலப்பொடி மரம் உபயோகமாகிறது.

9. இந்த கபிலப்பொடி மரத்தின் தாயகம் இந்தியா சைனா ஸ்ரீலங்கா மியான்மர் வியட்நாம் மலேசியா பிலிப்பைன்ஸ் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்.

10. கபிலப்பொடியுடன், பால் தயிர் மற்றும் தேனுடன் சேர்த்து, குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக கொடுக்கிறார்கள்.

11. உடம்பின் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், சொறி சிரங்கு, காயங்கள்,  புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

12. முக்கியமாக கபிலைப்பொடி  மரத்தின் இலைகள், வேர்கள், ஆகியவை இரண்டும் தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த, பயன்படுகிறார்கள்.

13. குழந்தைகளின் செரிமானம் தொடர்பான, மற்றும் ஈரல் தொடர்பான, உடல் உபாதைகளை சரி செய்ய, கபிலப்பொடிமரம் மிகவும் உபயோகமாக உள்ளது.

14. இந்த மரத்தின் பிசின்களை தூளாக்கி சாம்பிராணியாக பயன்படுத்துகிறார்கள், சுவாசம் தொடர்பான பிரச்சனைகள், மூட்டுவலி முடக்குவாதம், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல், வலிப்புநோய், சரும நோய்கள், சிபிலிஸ் எனும் மேகநோய், ஹெரினியா ஆகியவற்றை குணப்படுத்த, இந்த கபிலப்பொடிமரம் உதவியாக உள்ளது.

15. எண்ணற்ற  நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட மூலிகை, இந்த கபிலப்பொடிமரம்.

16. சரும நோய்கள், சுவாச மண்டல நோய்கள், வயிறு சம்பந்தமான நோய்கள், மஞ்சள் காமாலை, மலேரியா காய்ச்சல், பூசநோய்கள், கண் நோய்கள், புற்றுநோய், சக்கரைநோய், சிறுநீரகம், மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த இந்த மரம் உபயோகமாக உள்ளது.

17. இந்த மரத்தின் இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள் மற்றும் வேர்கள் இதற்கு பயனாக உள்ளன.

18. உலகம் முழுக்க மூலிகையாக பயன்படுத்தும் இந்த கபிலப்பொடிமரம் உங்கள் ஊரில் இருக்கிறதா ? அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ? என்பதுபற்றி, எனக்கு சொல்லுங்கள் நன்றி வணக்கம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...