Friday, August 4, 2023

MEDHSINGI MEDICINAL TREE OF SOUTH INDIA 295.ஆட்டுக்கொம்பு கடலாத்தி மூலிகை மரம்

 


ஆட்டுக்கொம்பு கடலாத்தி மூலிகை மரம் இந்தியாவின் மத்திய பகுதியிலும் தென்பகுதியிலும் பரவி உள்ளன, தமிழில் உதி,  காட்டுவிருட்சம்லிஆச்சா என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள், சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம்பழங்குடி மருத்துவம் மற்றும் சோவா ரிக்ஃபா ஆகிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தும் மரம் இது, மிகவும் கடுமையான வறண்ட பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரங்கள் இவை.

பொதுப்பெயர்: மெட்சிங்கி (MEDHSINGI)

தாவரவியல் பெயர்: டாலிசந்திரோன் ஃபால்கேட்டா 

(DOLICHANDRON FALCATA)

தாவர குடும்பத்தின் பெயர்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)

2. மொழிப் பெயர்கள்:

தமிழ்: உதி, கடலாத்தி, காட்டுவிருட்சம், லிஆச்சா (UTHI, KADALATHI, KATTUVIRUTCHAM, KALIACHA)

ஹிந்தி: வார் (HAVAR)

கன்னடா: காட் முர்க்கி (GODMURKI)

மலையாளம்: ஆட்டுலோட்டா பலா (ATTULOTTA PALA)

மராத்தி: பெர்சிங் (BHERSINGH)

ஒரியா: மிரிகோசிங்கோ (MRICOSINGO)

சமஸ்கிருதம்: விசனிக்கா (VISANIKKA)

தெலுங்கு: சிட்டி நிருவோட்டி (SITTY NIRUVOTTY)

3.பரவி இருக்கும் இடங்கள்

இந்த மரம் இந்தியாவின் மத்திய பகுதியிலும் தென்பகுதியிலும் பரவி உள்ளன.

4. கர்நாடகாவில் பெல்காம் சிக்மகளூர் மைசூர் வடகெனராவிலும், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி காஞ்சிபுரம் மதுரை நாமக்கல் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் திருவாரூர் திருச்சிராப்பள்ளி திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதியில் பரவியுள்ளன.

5. சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம், பழங்குடி மருத்துவம் மற்றும் சோவா ரிக்ஃபா ஆகிய மருத்துவ முறைகளில் இந்த உதி மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

6. மகாராஷ்டிரா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்த மரத்தினை பயன்படுத்துகிறார்கள்.

7. அபார்ஷன் செய்யவும் மீன்பிடி நஞ்சாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த பழங்குடி மக்கள் இதன் பட்டையடை அறைத்து கூழாக்கி எலும்புகள் முறிந்த இடங்களில் கட்டு போட்டு இதனை சரி செய்கிறார்கள்

8. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்த இதன் பட்டை சாற்றை பயன்படுத்துகிறார்கள்.

11.இந்த மரம் பாரம்பரிய மருத்துவ முறைகளினால் நோய்களை குணப்படுத்தும் மூலிகை என்று நிருபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளும் இதனை சரி என்கின்றன.

12. இது  செம்மறி ஆடுகளின் கொம்புகள் போல இருப்பதால் இதனை மெத்சிங்கி என அழைக்கிறார்கள். மரத்தின் பட்டைகள் நீளமும் சாம்பல் நிறமும் கலந்து நிறத்தில் இருக்கும்.

13. பூக்கள் மே ஜூன் மாதங்களில் போக்கும் வெண்மை நிறமாக இருக்கும். ஒன்று முதல் மூன்று பூக்களைக் கொண்ட பூங்கொத்தாக இருக்கும். பூக்களின் காம்புகள் அரை அங்குல நீளம் இருக்கும். அதன் பூ இதழ்களின் ஓரங்கள் மடிப்புகளுடன் இருக்கும்.

14. இதன் நெற்றுக்கள் நீளமான ஆட்டு கொம்புகள் போல உட்பக்கம் வளைந்து இருக்கும். அதனால் இதனை மெத்சிங்கி என்று அழைக்கிறார்கள். நாம் இதனை ஆட்டு கொம்பு மரம் என்று அழைக்கலாம்.

15. இந்த மரங்கள் மிகவும் வறட்சியான மண்கண்டங்களில் வளரும். நல்ல மண்ணில் கூட இந்த மரங்கள் மெல்ல தான் வளரும். மிகவும் கடுமையான வறண்ட பகுதிகள் வளர்க்க ஏற்ற மரங்கள் இவை.

16. இந்த கடலாத்தி எனும் மெத்சிங்கி மரம் பழங்குடி மருத்துவம் சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஆகிய இயற்கையின் மருத்துவ முறைகள் கொண்டாடும் மூலிகை மரம்.

அன்பின் இனிய நண்பர்களே ! ஆட்டுக்கொம்பு கடலாத்தி போல அதிகம் அறிமுகம் இல்லாத மரங்களை எல்லாம் தேடிப் பிடித்து எழுதுகிறேன். இதற்குக் காரணம், காலப்போக்கில் இவையெல்லாம் நமது கவனத்தில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்குத்தான். இந்த மரங்கள் இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள், இந்த மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...