Thursday, August 24, 2023

KILUVAI TREE A LIVE FENCE HERB 316. உயிர்வேலி மூலிகை மரம் பச்சைக்கிளுவை

உயிர்வேலி மூலிகை மரம்
பச்சைக்கிளுவை


கிளுவை என்று சொன்னாலே பச்சைக் குழந்தைகூட சொல்லும் உயிர்வேலி மரம் என்று. வேலி என்றாலே விவசாயிகள் எங்கே கிளுவை என்பார்கள், ஒரு சமயம் ஒட்டன்சத்திரம் பகுதியில் ரகசியமாய் ஒரு பயிரை சாகுபடி செய்தார்கள், அது ஒரு கொடிப்பயிர், அது பற்றி வளர கிளுவையை நட்டிருந்தார்கள். அப்போதுதான் நான் ரொம்ப பக்கமாய் கிளுவையைப் பார்த்தது. அது என்ன ரகசிய சாகுபடி என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள், இந்த கட்டுரை முடிவில் அந்த ரகசிய சாகுபடி என்ன என்று சொல்லுகிறேன். இப்போது நாம் பச்சை கிளுவை பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.

1. பச்சைக்கிளுவையின் தாவரவியல் பெயர், கம்மிபொரா கார் டேட்டா (COMMIPHORA CAUDATA)

2.இதன் தாவரவியல் குடும்பம்,  பர்சரேசி(BURSERACEAE), இந்த தாவர குடும்பத்தில் 17 முதல் 19 பேர் இனங்களும் 540 தாவர வகைகளும் உள்ளன. இதனை டார்ச்வுட் (TORCH WOOD) அல்லது இன்சென்ஸ் (INCENSE) தாவரக் குடும்பம் என்று சொல்லுவார்கள். 

3. பச்சைக்கிளுவையின் பொதுப் பெயர்கள்:சவுத் இந்தியன் கம்மிபொரா, கிரீன் கம்மிபொரா (SOUTH INDIAN COMMIPHORA, GREEN COMMIPHORA)

4. பச்சைக்கிளுவையின் பலமொழிப் பெயர்கள்:

கன்னடா:அசுராடா (ASSURADA)

மலையாளம்: இடிஞ்சில் (IDINJIL)

சமஸ்கிருதம்: இக்கட்டா (IKKATA)

தமிழ்: பச்சைக்கிளுவை, கிளுவை (PACHAI KILUVAI, KILUVAI  

தெலுங்கு:கொண்ட மாமிடி (KONDA MAMIDI)

5. பழங்குடி மருத்துவத்தில் பச்சைக்கிளுவையின் இலைகள் பட்டைகள் வேர்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றது.

6. மூட்டுவாதம், உடல் வலி, புண் மற்றும் காயங்களை குணப்படுத்துதல், ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்தல், பெண்களின் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான நோய்களை குணப்படுத்துதல், இப்படி பலவிதமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளே தயாரிக்க பச்சைக்கிளுவை மரம் உபயோகமாக உள்ளது.

8. உலக அளவில் பச்சைக்கிளுவை பரவி இருக்கும் நாடுகள், ஆப்பிரிக்கா ஆசியா ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டங்கள்.  இந்த பச்சை கிளுவை மரங்கள் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் அதிகம் பரவியுள்ளது.

9. பச்சைக்கிளுவை மரங்கள் சிறியது முதல் நடுத்தரமான மரங்கள் என்று சொல்லலாம். இலையுதிர்க்கும்படியான இந்த மரங்கள் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனால் வழக்கமாக சிறிய மரங்களாகவே வளரும்.

10. பச்சைக்கிளுவை மரங்களின் பட்டைகள் வழுவழுப்பாகவும் பச்சை நிறமாகவும் இருக்கும். மரங்கள் முதிர்ச்சி அடையும் போது இதன் பட்டைகள் உறிந்து விடும். அந்த சமயங்களில் இந்த மரத்தை பார்த்தால் செங்காவி மற்றும் பசுமை நிறமாக தெரியும். இந்த மரத்தின் சாற்றில் ஒரு விதமான பிசின் வாடை வீசும்.

11.வளர்இடங்கள்: முழுசாக சூரியஒளி கிடைக்கும் இடங்களில் ,மலைப்பகுதிகளில் பாறைகள் நிறைந்த இடங்களில், வறண்ட பகுதிகளில் பச்சைக்கிளுவை மரங்களை பார்க்கலாம்.

12. மரத்தின் கிளைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்கள் பந்திருக்கும். இதன் பூக்கள் சிவப்பு மற்றும் ஊதா நிறமாக இருக்கும்.

14.பயிர் பரவல் முறை: பச்சைக்கிளுவையின் பழங்கள் தசையுடன் கூடியதாக இருக்கும்.ஒரு பழத்தில் ஒரு விதை தான் இருக்கும். அந்த விதை கருப்பு நிறமாக இருக்கும், ஒவ்வொரு விதையுடனும், பறந்து சென்ற சென்று பரவ வாகாக நான்கு இறக்கைகள் இணைந்திருக்கும். 

15. பச்சைக்கிளுவை இந்தியாவில் பரவி இருக்கும் இடங்கள்

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு அண்ட் காஷ்மீர், வெஸ்ட்பெங்கால் மற்றும் ராஜஸ்தான்.

16.கீழையூரில் உள்ள திருக்கடைமுடிநாதர் கோவிலின் தல விருட்சமாக விளங்குகிறது இந்த கிளுவை மரம். இந்த கோவில் சம்பந்தரின்  தேவாரப் பாடல் பெற்ற தலம். இது காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 18 வது சிவத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

17. கிளுவை மரங்கள் வேலிக்காக வளர்க்கப்படும் சிறு மர வகை. இது முக்கூட்டு இலைகளையும் மென்மையான கட்டைகளையும் உடையது இலையுதிர்க்கும் மரம். இதில் வெண்கிளுவை செங்கிளுவை என்று இரண்டு வகை சொல்லுகிறார்கள். 

18. நான் ரகசிய சாகுபடி என்று சொன்னது கலப்பை கிழங்கு சாகுபடி, தமிழ் இலக்கியத்தில் செங்காந்தள் என்று சொல்லுவதும் இதுதான், தமிழ் நாட்டின் அரசு மலரும் இதுதான், சரிதானே நண்பர்களே !

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

2 comments:

சுப்ரமணிய பாலா said...

காங்கயம் பகுதிகளில் இன்னமும் இவைகள் உணடூ ..காங்கயம் வாங்க உயிர் வேலி காண்க அன்புடன் பாலா

Malarmesai Bagavan said...

Good information

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...