இந்திய மரம் காட்டுப்புன்னை |
KATTUPUNNAI TREE OF TIMBER AND MEDICINE |
காட்டுப்புன்னை , மேற்கு தொடர்ச்சி மலை
பகுதிக்கு சொந்தமான மரம், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் பரவி உள்ள மரம், இதன் கட்டைகள் கடினமானதாக இருக்கும், இது கட்டுமான பணிகளுக்காகும், காகிதம் செய்யவும், மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள் செய்யவும், பயன்படுகிறது. இந்த மரத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்கிறார்கள்.
1.தாவரவியல் பெயர் (CALOPHYLLUM POLYANTHUM)
தாவரக் குடும்பம் (CALOPHYLLACEAE)
தாயகம்; இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி இதன் தாயகம்
2.பொதுப்பெயர்கள்;
- பூனிஸ்பார் ட்ரீ (POONSPAR
TREE)
- சிர்பூன் ட்ரீ (SIRPOON
TREE)
- புன்ன பைன் (PUNNAPINE)
- பின்னாபை (PINNAPPAI)
- காட்டுப்புன்னா (KATTUPUNNA)
- மலம்புன்னா (MALAMPUNNA)
3. வளரும் இந்த இடங்கள், இந்த மரங்கள் அசாம் பள்ளத்தாக்கு
மற்றும் ன கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன.
4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் பங்களாதேஷ்
பூடான் லாவோஸ் மியான்மர் தாய்லாந்து வியட்நாம் ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் பரவி
உள்ளன.
5. காட்டுப் புன்னை மரங்கள் உயரமானவை நிறைய
கிளைகளுடன் இருக்கும் இதன் கட்டைகள் கடினமானதாக இருக்கும்.
6. இதன் பட்டைகள் சாம்பல் நிறம் முதல் காவி
நிறம் வரையான நிறங்களில் இருக்கும். வெளிப்புற பட்டைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.
7. இதன் பூக்கள் வெண்ணிறமாக இருக்கும்.
வாசமுடையதாக இருக்கும். அத்துடன் இது கொத்துக்களாகவும் இருக்கும். ஜூன் முதல்
செப்டம்பர் வரையான காலகட்டங்களில் இவை பூத்து காய்க்கும்.
8. இதன் நெற்றுக்கள் 3.7 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இவை
ஒற்றை விதையுடைய நெற்றுக்களாக இருக்கும். நெற்ற்றுக்கள் மஞ்சளாக இருக்கும். முதிரும்போது அவை ஊதா
நிறமாக மாறும்.
9. இந்த மரங்கள் முக்கியமாக
மரக்கட்டைகளாகவும், கட்டுமான
பணிகளுக்காகவும் காகிதம் செய்வதற்காக மரக்கூழ் தயாரிக்கவும், மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள்
செய்யவும்,, பந்தல்கால்கள், கணித கருவிகள் சாலைகள் கட்டுமான பணிகள்
ஆகியவற்றிற்கும் பயன்படுத்துகிறார்கள்..
10. கடலோரங்களில் அமைக்கப்படும் சாலைகள்
கட்டுமான பணிகளில் முக்கியமாக இந்த மரங்களப் பயன்படுத்துகிறார்கள்.
11. இதன் பட்டைகளில் வெடிப்புகள்
நீளவாக்கில் அல்லது நட்சத்திர வடிவில் இருக்கும். உட்புறப் பட்டைகள் சிவப்பு
நிறமாக இருக்கும். அதில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமான பிசின் ஆங்காங்கே வடிந்தபடி
இருக்கும்.
12. இலைகள் தடிமனாக பளபளப்பாக இருக்கும்
இருக்கும் இலைகளிலும் என்னை சுரப்பிகள் இருக்கும்.
13. பூக்கள் பெரும்பாலும் இருபால் பூக்களாக
இருக்கும் அரிதாக அன்புடன் கலந்த மாதிரி இருக்கும். பூக்கள் வாசம் உடையவைகளாக
இருக்கும். கொத்துகளாக இருக்கும்.
14.மரங்கள் அதிகபட்சம் 35 மீட்டர் உயரமாக வளரும் 15 முதல் 16 மில்லி மீட்டர் பருமனாக இருக்கும். மரங்களில் இருந்து வடியும்
மரமரப்பால் மஞ்சள் நிறமாக அழளவாக வடியும்.
15.இந்த மரங்கள் ஈரம் நிறைந்த பசுமை மாற
காடுகளில் 1600 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில்
வளர்ந்துள்ளன.
16. உலக அளவில் இந்தியா பங்களாதேஷ் பூட்டான்
சைனா லாவோஸ் மியான்மர் தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளின் பரவி உள்ளது.
17. இந்தியாவில், ஆந்திர பிரதேசம், அசாம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், தமிழ்நாடு, வெஸ்ட் பெங்கால் ஆகிய மாநிலங்களிலும்
பரவி உள்ளது.
18 . தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த
மரங்கள் பரவி உள்ளன.
19 . கேரளாவில் இடுக்கி, கொல்லம், மலப்புறம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களிலும் பரவி
உள்ளன.
20. இந்த மரத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் குடற்புண் மற்றும் கண் நோய்கள் ஆகியவற்றை
குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்கிறார்கள்.
21. அது மட்டும் இன்றி பாம்பு கடிக்கும் நஞ்சு முறிப்பானாக இதனை பயன்படுத்துகிறார்கள்
22.தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்
நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன என்று
சொல்லுகிறார்கள் இந்த மாவட்டத்தில் உள்ள நமது நண்பர்கள் இந்த மரங்களை விதைகளை
சேகரித்து பிறமாவட்டங்களுக்கும் இந்த மரங்களை கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுகொள்ளுகிறேன், நன்றி வணக்கம்.
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment