Friday, August 25, 2023

KAATTUKUMIZH TREE HERB OF WESTERN GHATS 317. காட்டுக்குமிழ் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மூலிகை

விளக்காக  எரியும் காட்டுகுமிழ்


காட்டுக்குமிழ்
, இந்தியாவின் வெப்ப மண்டல காடுகளுக்கு சொந்தமான ஒரு சிறிய மரம், இதன் இலைகளும் பழங்களும் காடுகளில் உள்ள பிராணிகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகின்றன, இதன் இலைகளை பழங்களை பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மிகுதியான ரத்தப்போக்கு, கைகால் வீக்கம், இதய நோய்கள் ஆகிவற்றை குணப்படுத்த  இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

1. தாவரவியல் பெயர்: கல்லிகார்ப்பா டொமெண்டோசா (CALLICARPA TOMENTOSA) 

தாவரக் குடும்பம்: லேமியேசி (LAMIACEAE) 

2.மொழிப் பெயர்கள் 

தமிழ்: காட்டுக்குமிழ் (KATTUKUMIZH)

சமஸ்கிருதம்: பிரியாங்கு (PRIYANGU)

மராத்தி: ஜிஹாக் (JIHAK)

தெலுங்கு: போடையா சேட்டு (BADHAI SETTU)

கன்னடா: பாண்டவரா பட்டி (PNDAVARA BATTI)

3.சிறப்பு தகவல்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாதத்தின் போது இந்த மரத்தின் கட்டைகளை எரித்து அதனை எரிப்பந்தமாகப் பயன்படுத்தி அடர்ந்த வனத்திற்குள் பயணம் செய்ததாகச் சொல்லுகிறார்கள்.

4. ஒரு காலத்தில் எண்ணெய் விளக்குகளில் இந்த இலைகளைச் சுருட்டி அந்த விளக்கின் திரியாக பயன்படுத்தியதாக சொல்லுகிறார்கள். அதுபோல பேய்த்துளசி எனும் செடிகளின் இலைகளைக்கூட அகல் விளக்குகளில் திரியாகப் பயன்படுத்தியதை  நான் பார்த்திருக்கிறேன்.

5.தாயகம்: இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா.

6. இது ஒரு சிறிய மரம், ஐந்து மீட்டர் உயரத்திற்கு வளரும், இதன் பூக்கள் ஊதா நிறமாக இருக்கும், இலைக்ணுக்களில் இதன் பூங்கொத்துக்கள் தோன்றும்.

7. இதன் பழங்களில் மூன்று முதல் நான்கு விதைகள் இருக்கும். இதன் இலைகளும் பழங்களும் காடுகளில் உள்ள பிராணிகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகின்றன, இதன் இலைகளை பழங்களை பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

8.இதன் இலைகளில் இருந்து இறக்கும் கஷாயத்தை காய்ச்சலுக்கு மருந்தாக தருகிறார்கள்.

8.இந்த இலைக் கசாயத்தை சரும நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள்.

9. இதன் இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதனை வாயில் ஏற்படும் புண்களை கழுவ அவை குணமாகிறது.

10.இதன் பழங்கள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் மருந்துகளை தந்து வலிப்பு நோயை குணப்படுத்துகிறார்கள்.

11.அது மட்டுமல்லாமல் நரம்பு சம்பந்தமான, ரத்தப்போக்கு, வீக்கம் இதய நோய்கள் ஆகிவற்றை குணப்படுத்த  இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

12.உடலில் ஏற்படும் மிகுதியான ரத்தப்போக்குகைகால்களில் ஏற்படும் நீர் வீக்கங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் ஆகியவற்றையும் குணப்படுத்த இதன் பழங்களும் இலைகளும் பயனாகின்றன.

13.இந்த மரங்கள் குறிப்பாக மேற்கு மலை தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மற்றும் ஸ்ரீலங்காவில் பரவியுள்ளன.

14.தமிழ்நாட்டில் குறிப்பாக அய்யனார் கோயில்களிலும் பைரவர் கோயில்களிலும் இந்த மரங்களை பார்க்கலாம்.

15.பொதுப் பெயர்கள், வெல்வெட் பியூட்டி பெர்ரி, பிரெஞ்சு மல்பெரி ஆப் தி வெஸ்டர்ன் கேட்ஸ், கிரேட் உல்லி மலேயன் லிலாக் (VELVET BEAUTY BERRY, FRENCH MULBERRY OF THE WESTERN GHATS, GREAT MALAYAN LILAC )

16.வளரிடங்கள்: தட்சிண இந்தியாவின் வெப்ப மண்டல காடுகள் மற்றும் மிக வெப்ப மண்டல காடுகள், ,இவை தவிர மேற்கு மலை தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1500 மீட்டர் உயரம் வரையிலும் இந்த மரங்கள் பரவி உள்ளன, அத்துடன் ஸ்ரீலங்காவிலும் இந்த மரங்களைப் பார்க்கலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

1 comment:

சுப்ரமணிய பாலா said...

நல்ல தகவல் இவைகள் தனை காட்சிப்படுத்தி விவசாயகல்லூரியில் ஓரு கண்காட்சி நடத்தலாமே..கோயமுத்தூர்காரன் ஆசை நடக்கும் நடக்கும் நான் கூட நம்பறேன் ...நன்றி

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...