Thursday, August 3, 2023

JUNGLE GUAVA ENDANGERED MEDICINAL PLANT SINGAMPATTI 294. இலும்பிலி மூலிகை சிங்கம்பட்டி காட்டு கொய்யா

முடக்கு வாதத்தை அம்சமாய் அடக்கும் மூலிகை. சக்கரை நோயைக்கூட சட்டென கட்டுப்படுத்தும்.   மேற்குத்தொடர்ச்சிமலைக்கு சொந்தமானது, இந்த பாபனாசம் சிங்கம்பட்டி காட்டு கொய்யா, மூலிகைகளில் சிங்கக்குட்டி.

தாவரவியல்: ஜினியா சிங்கம்பட்டியானா (EUGINEA SINGAMPATTIANA)

தாவர குடும்பம்: மிர்டேசி (MYRTACEAE), நாவல் பழ குடும்பம்.

1.இலும்புலி என்னும் காட்டு கொய்யா தமிழ்நாட்டில் பாபநாசம் மற்றும் சிங்கம்பட்டி பகுதிகளில் அழிந்து வரும் அல்லது அருகி வரும் மூலிகை என அறிவிக்கப்பட்டுள்ள மரம்.

2. தாழ்வான தலை அமைப்பை உடைய பசுமை மாறா காடுகளில் 300 முதல் 700 மீட்டர், உயரம் உள்ள பகுதிகளில், இந்த மரங்கள் வளரும்.

லும்புலி மரங்கள், சிறிய அல்லது நடுத்தரமான மரங்கள் அதிகபட்சம் 5 மீட்டர் உயரமாக வளரும். இரண்டு மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்கள் காய்க்கத் தொடங்கும்.

3. அடிமரம் மற்றும் பட்டைகள் வழுவழுப்பாக காவி நிறமாக இருக்கும்.

பூக்களின் இதழ்கள் வெண்மை நிறமாக இருக்கும். பூக்கள் கொத்துக்களாயிருக்கும். ஆண்டு முழுவதும் பூக்கத் தொடங்கி டிசம்பர் வாக்கில் பழங்கள் தயாராகிவிடும்.

4.இலும்புலி, மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை மாறா காடுகளில் பரவி உள்ளன. இதன் தென்பகுதியில் அழிந்து வரும் மரஇனம் என்று அறிவித்துள்ளார்கள்.

5.அகத்திய மலையின் தென்பகுதியிலும் இந்த இலும்புலி மரத்தை மறைந்து வரும் மரஇனம் என்று அறிவித்துள்ளார்கள். இலும்புலி மரங்கள் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பகுதியிலும் பரவி உள்ளன.

6. இலும்புலி மரங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக முக்கியமான மூலிகையாக கருதப்படுகிறது. இதனை காட்டு கொய்யா என்றும் காட்டுகுறண்டி என்றும் சொல்லுகிறார்கள். ஆஸ்துமா தலைசுற்றல் உடல்வலி மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்த இந்த அகத்தியமலை இலும்புலி உபயோகமாகிறது.

7. இலும்புலி காட்டு கொய்யா காட்டு குறண்டி என்னும் இந்த மூலிகை பற்றிய தகவல்களை இப்பகுதியில் வசித்த கன்னிகார் என்ற பழங்குடி மக்களிடமிருந்து தான் சேகரித்திருக்கிறார்கள்.

8.யூஜினியா பிரிவு மரங்களில் எல்லாம் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சர்க்கரைநோய் முடக்குவாதம் பூசங்களின் பாதிப்பு நுண்ணுயிர்களின் பாதிப்பு உடல் உறுப்புகள் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும், மருத்துவ பண்புகள் இதில் அடங்கியுள்ளன.

9.இதன் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர ரசாயனங்கள், வயிறு மற்றும் குடலில் ஏற்படும் பாதிப்புகள், காய்ச்சல் பொதுவான உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம் ஆகிவற்றை குணப்படுத்தும்.

10.காட்டுக்கொய்யாவின் பழங்கள் இனிப்பாகவும் இருக்கும். புளிப்பாகவும் இருக்கும். நன்கு கனிந்த பழங்கள் சிவப்பாக இருக்கும். சில கருப்பாகவும் இருக்கும். சில பழங்கள் பசுமை மற்றும் ஆரஞ்சு நிறமாக இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் கசப்பாக இருக்கும்.

11.இந்த காட்டு கொய்யா பழங்கள் பெரும்பாலும் மணமூட்டியாக அல்லது ஜாம் ஜெல்லி மாதிரி மதிப்பு கூட்டிய பொருட்கள் தயார் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

12. இலும்புலி என்றும் காட்டு கொய்யா என்றும் சொல்லப்படும். இந்த மூலிகை தமிழ் நாட்டின் மிக முக்கியமான மூலிகை.

13. அகஸ்திய மலையின் அருகி வரும் மரம், அல்லது அழிந்து வரும் மரம் அல்லது மறைந்து வரும் மரம் என்று அறிவித்திருக்கிறார்கள். இது பற்றிய மறையாத  தகவல்கள், மற்றும் யாரும் அறியாத தகவல் ஏதும் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.  நன்றி  வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...