வெள்ள நீர் மரங்கள் இருள்பூ
|
இதன்
பொதுபெயர்கள் அல்லது ஆங்கிலப்பெயர்கள், பாலிபிட்டான், கட்டாங்க் லவுட், பெலங்கான், காங்காடுங்க் புக்கித்,
காங்கட்டாங் லாவுட் (BALIBITAN,
KATONG
LAUT, BELANGKAAN, KANKATUNG BUKIT, KANGATONG LAUT)
தாவரவியல்
பெயர்: சைனோமெட்ரா ராமிஃபுளோரா (CYNOMETRA RAMIFLORA)
இருள்பூ மரங்கள், மேங்ரோவ் எனும்
அலையாத்தி காடுகளிலும், வெள்ள நீர் தேங்கும் பகுதிகளில்
உள்ள காடுகளிலும் பரவி இருக்கும். ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு
பசிஃபிக்
பகுதிகளிளும் பரவி
இருக்கிறது. இதன்
மரங்கள் கட்டுமான வேலைகளில்
பயனாவதுடன், எரிபொருளாகவும் இதன் இலைகள் பூக்கள் காய்கள் போன்றவை,
பாரம்பரிய மருத்துவ முறைகளில் நோய்களை நீக்கும் மருந்துகள் செய்ய உபயோகமாகிறது.
சைனோமெட்ரா ரேமிஃபுளோரா என்பது
இதன் தாவரவியல் பெயர். இது ஃபேபேசி
என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் ரேமிஃபுளோரா என்றால் முந்தைய
பட்டத்தில் தோன்றிய கிளைகளில் பூக்கள்பூத்து, காய்கள் காய்ப்பது என்று அர்த்தம்.
இந்த
சமயத்தில் இன்னொரு செய்தியையும் நாம் தெரிந்து கொள்வோம்
கிளைகளில்
நேரடியாக பூத்து காயத்தால் அதன் பெயர் ரேமிஃபுளோரா
அடிமரத்தில் நேரடியாக பூத்து காய்த்தால் அதன் பெயர் காலிபிளோரா.
இருள்பூ
மரத்தின் கட்டைகள் மிகவும் கடினமானவை. உறுதியானவை கட்டுமான பணிகளில் பயன்படுத்தலாம். இதன்
மரக்கட்டைகளில் கத்தி சுத்தி போன்ற கருவிகளின் கைப்பிடிகள் செய்யலாம். வேலைப்பாடுகள்
மிக்க கலை பொருட்கள் செய்யலாம்.
இந்தியாவில்
இதன் மரங்கள் பெரும்பாலும் அடுப்பு எரிக்க அற்புதமான விறகாக பயன்படுகிறது. இருள்பூ
மரத்தின் இலைகளை வேகவைத்து அதனுடன் பசும்பால் மற்றும் தேன் சேர்த்து உடலில்
சருமத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள்.
இருள்பூ பரவி
இருக்கும் நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இதனை அழைக்கிறார்கள்.
கம்போடியா:
சாம்பிரின் (CHOMPRIN)
இந்தோனேசியா:
கேட்டான் (KETANG)
மலேசியா
காட்டான் லாவவுட் (KATONG
LAUT)
பிலிப்பைன்ஸ்:
பாலி பிட்டன் (BALI BITAN)
தாய்லாந்து:: பாங் கா (PHANG KHA)
வியட்னாம்: கே
மோஸ்ட் (KAY MOST)
இருள்பூ மரத்தின்
தாயகம் என்றால்
ஏகப்பட்ட இடங்களை கை நீட்டுகிறார்கள், அவை அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா,
பங்களாதேஷ், ஆர்கிபிளகோ,
போர்னியோ, கம்போடியா, ஜாவா, மலாயா, மரியானாஸ், நியூகலிடோனியா, நியூகினியா, பிலிப்பைன்ஸ்,
குயின்ஸ் லேண்ட், ஸ்ரீலங்கா, சுமத்ரா, தாய்லாந்து, மற்றும் வாநாட்டு..
இருள்பூ மரங்கள்
10 முதல் 20 மீட்டர் உயர வளரும், இதன்
அடிமரம் பருத்து
இருக்கும், அல்லது பல அடிமரங்களை உடையதாக இருக்கும்.
இலைகள்
கூட்டியலைகளாக இருக்கும், புதிய இலைகள், ஊதா நிறத்திலும் முதிர்ச்சி பெற்ற இலைகள் பசுமையாகவும் இருக்கும்.
பூவும் போத்துக்களாக
இருக்கும். ஒரு கொத்தில் 20 பூக்கள்
கூட இருக்கும். இதழ்கள் வெண்மையாக இருக்கும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான கால கட்டங்களில்
பூக்கள் பூக்கும்.
பழங்கள்
ஒழுங்கற்ற உருண்டை வடிவமாக இருக்கும், கொட்டைகள் துரு போல காவி நிறமாக
இருக்கும்.
இருள்பூ மரங்கள்
பாறைகள் மற்றும் மணற்பாங்கான கடலோரங்கள் அலையடிக்கும் ஆற்றங்கரைகள் (TIDAL RIVERS), மேங்குரோவ்
காடுகளின் வெளிப்பக்கங்களிலும் (MARGINS OF MANGROVE FORESTS), உட்புற
காடுகளிலும்(INLAND
FORESTS) 400 மீட்டர்
உயரம் வரை உள்ள இடங்களில் வளரும்.
வெள்ளநீர்
தேங்கி நிற்கும் இடங்களிலும் ஈரம் மிகுந்த இடங்களும் இந்த இருள்பூ மரங்கள்
வளர ஏற்ற இடங்கள்.
இருள்பூ மரங்களை
சாலை ஓரங்களிலும் தோட்டங்களிலும் நிழல் தரும் மரங்களாக நடலாம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment