இருவேல் மரத்தில் வியட்நாம் வண்டிகள் |
நம்மஊர் இருவேல் வியட்நாமின் இரும்பு மரம் |
இரும்பு மரம் இருவேலின் பூக்கள் |
இருவேல் மரங்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி இருக்கும் மரம் இவை காகிதம் தயாரிக்கவும் உணவாகவும் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு மருந்து தயாரிக்கவும் உதவுகிறது. ஆனாலும் இதனை இந்தியாவின் மூலிகை மரம் என்றே சொல்லுகிறார்கள். இதன் தாயகம் வடகிழக்கு இந்தியா பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்.
பொதுப்பெயர்கள்:இருவேல்
(IRUVEL)
தாவரவியல்
பெயர்: சைலியா சைலோகார்ப்பா
(XYLIA XYLOCARPA)
தாவரக்குடும்பம்:
ஃபேபேசி (FABACEAE)
1.யானைகளின்
காயம் இதன் இலைகளில் காயங்களை ஆற்றி குணப்படுத்தும் சக்தி அபரீதமாக உள்ளது
தாய்லாந்து நாட்டில் இதன் இலைகளை பயன்படுத்தி யானைகளுக்கு ஏற்படும் காயங்களை
குணப்படுத்துகிறார்கள்.
2. இதன்
மரங்கள் வலுவானவை, அதனால் வியட்நாம் நாட்டில் இதனை இரும்பு மரம் என்கிறார்கள்.
பாரம்பரியமான வண்டிகளை இந்த மரத்தில் செய்கிறார்கள் இன்றும் கூட.
3. இதன் மரக்கூழிலிருந்து
ஒரு வகையான காகிதம் தயாரிக்கிறார்கள். அதனை அட்டை காகிதமாக பயன்படுத்துகிறார்கள்.
பொருட்களை ‘பேக்கிங்’ செய்ய கவர்ச்சிகரமான காகிதங்களை
இதில் தயார் செய்கிறார்கள்.
4. இதன்
விதைகளை சாப்பிடலாம். இதில் நச்சுக்கள் ஏதுமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு மூலிகை
மரம். இதன் இலைகள் விதைகள் பழங்கள், பட்டைகள் மற்றும் வேர்களை பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க
பயன்படுத்துகிறார்கள்.
5. தெற்கு
ஆசியா தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் இது பரவி உள்ளது. மியான்மர்
வியட்நாம் கம்போடியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பரவி
உள்ளது.
6. இந்தியாவில்
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருவேல் மரங்கள் பரவியுள்ளன.
7. தாய்லாந்து
நாட்டில் காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் காடுகளை உருவாக்கும் வனம்
மீட்பு பணிகளில் இந்த
இருவேல் மரங்கள் உதவியாக
உள்ளன.
8. தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம் கர்நாடகா ஒரிசா கேரளா மகாராஷ்டிரம் ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் இருவேல்
மரங்கள் பரவியுள்ளன. அங்கு இந்த மரம்
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
9. பலமொழிப் பெயர்கள்;
தமிழ்: இருவேல் (IRUVEL)
இந்தி: ஜம்பு (JAMBU)
கன்னடா: அரசு டேகா (ARASU TEGA)
மலையாளம்: இருள் (IRUL)
மராத்தி: ஜம்பா (JAMBA)
ஒரியா: கங்காடா (GANGADA)
தெலுங்கு: எர்ரா சென்னாங்கி (ERRA SENNANGI)
10. இருவேல் இலையுதிர்க்கும்
மரம், 20 மீட்டர்
வரை உயரமாக வளரும். மரங்களின் உட்புறம் பெரும்பாலும் உள்ளீடற்றதாக காலியாக இருக்கும்.
11. இதன் பூக்கள்
இருபாலின பூக்களாக இருக்கும். அழுக்கு மஞ்சள் நிறமாக இருக்கும்.
பிப்ரவரி முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இது பூத்து காய்க்கின்றன.
12. இதன்
பூக்கள் ஒரு சிறிய பந்து போல இருக்கும். இந்த
பூப்பந்தில் ஏகப்பட்ட பூக்கள் இருக்கும், இந்தப் பூ
பந்துகளின் விட்டம் இரண்டு சென்டிமீட்டர் வரை
இருக்கும்.
13. இதன்
பூக்களுக்கு காம்புகள் இருக்காது, ஆனால்
பூப்பந்துகளுக்கு 7 சென்டிமீட்டர்
நீளமான காம்புகள் இருக்கும். இவை மார்ச் ஏப்ரல் மாதங்களில்
பூக்கும்.
14. இதன்
பழங்கள் அல்லது நெற்றுக்கள் 10 முதல் 16 சென்டிமீட்டர் நீளமாகவும் 6 சென்டிமீட்டர் குறுக்களவு உள்ளதாகவும்
இருக்கும்.
15. பரவி
இருக்கும் இடங்கள், சர்வதேச அளவில் இந்திய
மலேசியப் பகுதியில் பரவியுள்ளன. கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் பரவி உள்ளது.
16. மகாராஷ்டிராவில்
கோலாப்பூர் ரத்தனகிரி சத்தாரா
பகுதியிலும் கர்நாடகாவில் சிக்மகளூர் கூர்க் ஹாசன் மதுரை மைசூர் வடக்கு கனரா
ஷிமோகா தெற்கு கனரா ஆகிய இடங்களிலும் பரவி உள்ளது.
17. இயற்கை
மருத்துவ முறைகள் ஆயுர்வேதம் மற்றும் பழங்குடி மக்களின் மருத்துவ முறைகளில்
பல்வேறு விதமான நோய்களை கட்டுப்படுத்த இருவேல் மரங்களை பயன்படுத்துகிறார்கள்.
18. இந்த
மரத்தின் இலை தழை பட்டைகள்
மற்றும் வேர்களை பாரம்பரிய இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். இதன்
மூலம் தொழுநோய், காயங்கள், புண்கள்,
வெள்ளைப்படுதல், முடக்குவாதம், ரத்தசோகை, குடற்புண்,
வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களை குணப்படுத்துகிறார்கள்.
அன்பின்
இனிய நண்பர்களே
இருவேல்
மரங்கள் பல நாடுகளில்
பரவி இருக்கும் நம்மஊர் மரம், இதில் காகிதம்
தயாரிக்கலாம், வலுவான கட்டைகள் தருகின்றன. உணவாகவும்
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் உதவுகிறது என்றும் பார்த்தோம்.
உங்கள்
பகுதியில் இருவேல் மரங்கள் ஏதும் இருந்தால் ஒரு
புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வையுங்கள் நன்றி, வணக்கம்.
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
1 comment:
விழுப்புரம் அருகில் இரு வேல்பட்டு என்றசிற்றூர் உள்ளது.
Post a Comment