தவிட்டுக் கொய்யா மூலிகை மற்றும் பழமரம் |
தவிட்டுக் கொய்யாவை
1. தாவரவியல்
பெயர்:ரோடோமிர்டஸ் டொமண்டோசா (RHODOMYRTUS
TOMENTOSA)
தாவரக்
குடும்பம்: மிர்ட்டேசி (MYRTACEAE)
பொதுப்பெயர்:
ரோஸ்மிர்டில் (ROSEMYRTLE)
2. தாயகம்: இந்தியா
உட்பட தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்.
3. பரவி
இருக்கும் இடங்கள்:
இந்தியா, சைனா, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்..
4. வளரும்
இடங்கள்: கடற்கரை ஓரங்கள், இயற்கையாக பரவி உள்ள காடுகள், ஆற்றுப் படுகைகள், சதுப்பு
நிலப்பகுதிகள், மற்றும் 2400 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகள்.
5. பயன்கள்:
தோட்டங்களில்
அழகு மரமாக வளர்கிறார்கள். இமயமலைப்
பகுதிகளில் நெருப்பு இடைவெளியாக நடவு செய்கிறார்கள்..
அழகான
இதன் பூக்களுக்காக வளர்க்கிறார்கள்.
6. சுவையான
இதன் பழங்களுக்காக வளர்க்கிறார்கள். பழங்களிலிருந்து
ஜாம், ஜல்லி, ஒயின் ஆகியவற்றைச்
செய்யலாம்.
வியட்நாம்
நாட்டில் பிரபலமான ஒயின்
தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.
7. வளரியல்புகள்:
மாறா
பசுமை குற்றுச் செடி, அல்லது சிறு மரம் நான்கு மீட்டர் உயரம் வரை வளரும்.
8. இலைகள், தோல்
போல தடிமனாக இருக்கும். ஐந்து முதல் ஏழு சென்டிமீட்டர் நீளமாகவும், 2
முதல் 3.5 சென்டிமீட்டர்
அகலமாகவும் இருக்கும். பளபளப்பான பசுமையாக இருக்கும்.
காம்புகள் அகலமாக இருக்கும்.
9. பூக்கள் தனித்தனியாகவும் இரண்டு முதல் மூன்று பூக்களின் கொத்தாகவும் பூக்கும். 2.5 முதல் 3 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும்.
10. இதழ்கள்
ஊதா நிறமாகவும் ஓரங்கள் வெண்ணிறமாகவும் இருக்கும்
பழங்கள் சாப்பிடலாம்
பத்து முதல் 15 மில்லி
மீட்டர் நீளம் இருக்கும் அழுத்தமான ஊதா நிறமாக இருக்கும்.
11. 40 முதல் 45 விதைகள்
ஒவ்வொரு பழத்திலும் இருக்கும்.
பழங்களைப்
பறவைகள் மற்றும் பிராணிகள் சாப்பிட்டுவிட்டு விதைகளை பரப்புகின்றன.
12. பொதுப்
பெயர்கள்:
சிலான் கூஸ் பெர்ரி (CEYLON HILL GOOSE BERRY)
டவுனி மிர்டில் (DOWNY MYRTLE)
ஃபெஜோவா (FEIJOVA)
ஹில் கோவா (HILL GUAVA)
ஐசன்வெர்க் புஷ் (ISENBERG BUSH)
மிர்டில் கிராசில்லி
(MYRTE GROSEILLE)
கெமுட்டிங் (KEMUTING)
கேன்கிரென்சி (GANGRENZI)
ரோஸ் மிர்டில் (ROSE MYRTLE)
13. வியட்நாம்
சைனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் தவிட்டுக் கொய்யாவை பயன்படுத்தி வருகிறார்கள்.
14. பரவி
இருக்கும் இடங்கள்
வியட்நாம்
ஜப்பான் தாய்லாந்து சைனா பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா.
நண்பர்களே
தவிட்டுக் கொய்யா
பற்றிய கூடுதலான தகவல் ஏதும் உங்களுக்கு
தெரிந்திருந்தால் எனக்கு தெரிவியுங்கள், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி.
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment