Monday, August 7, 2023

INDIAN & SINGAPORE RHODODENDRON ORNAMENTAL HERB 299.கடலை மற்றும் நாக்குகருப்பன் அழகு மூலிகை மரம்

 

கடலை நாக்குகருப்பன்
அழகு மூலிகை மரம்

கடலை மற்றும் நாக்குகருப்பன் என்று தமிழில் அழைக்கப்படும் மரம் இந்தியன் ரோடோடென்ட்ரான், ஒரு குத்து செடி, அல்லது சிறு மரம், இந்தியா சைனா டைவான் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் பரவி இருக்கும் மரம், இதன் பூக்கள் 8 சென்டிமீட்டர்   நீளமாக அகலமாக இருக்கும். இதழ்கள் லேசான மற்றும் அடர்த்தியான ஊதா நிறமாக இருக்கும். இதன் பழங்களை சாப்பிடலாம். ஆனால் பழங்களில் எந்த சுவையும் இருக்காது, இதன் பழங்கள் பறவைகள் அணில்கள் மற்றும் குரங்குகளுக்கு உணவாகின்றன, உடலில் ஏற்படும்  நோய்கள், வயிற்றுப்போக்கு சீதபேதி, பல்வலி செரியாமை, வெள்ளைப்படுதல் மூட்டுவலி, கால்வீக்கம் மூட்டுவீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளும் இதில் உள்ளன..

1. தாவரவியல் பெயர்: மெலஸ்டோமா மலபாத்திரிகம் (MELASTOMA MALABATHRICUM)

பொதுப்பெயர்கள்: மலபார் மெலஸ்டோம், இந்தியன் ரோடோடென்ட்ரான், சிங்கப்பூர் ரோடோடென்ட்ரான், பிளான்டர்ஸ் ரோடோடென்ட்ரான், மலபார் கூஸ்பெரி, சென்டக், ஸ்ட்ரெயிட்ஸ் ரோடோடென்ட்ரான் (INDIAN RHODODENDRON, SINGAPORE RHODODENDRON, PLANTERS RHODODENDRON, MALABAR GOOSE BERRY, SENDUCK, STRAITS RHODODENDRON, )

மொழிப் பெயர்கள்:

அசாமிஸ்: புட்களா (PHUTKALA)

ஆங்கிலம் மலபார் மெலஸ்டோன் (MALABAR MELASTOME)

மலையாளம் கடலி (KADALI)

தமிழ்: கடலி, நாக்குகருப்பன் (KADALI, NAAKKU KARUPPAN)

2.தாவரக் குடும்பம்: மெலஸ்டோமெட்டேசி (MELASTOMETACEAE)

3. ரோடோடென்ட்ரான் ஒரு குத்து செடி, அல்லது சிறு மரம், ஒன்று முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை வளரும்.

4. இயற்கையாக பரவி இருக்கும் இடங்கள், இந்தியா சைனா டைவான் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிபிக்.

5. விரும்பி வளரும் இடங்கள், மழைக்காடுகள் புல்வெளிகள் முள்காடுகள் திறந்தவெளி பிரதேசங்கள் மற்றும் மலைச்சரிவுகள்

6. விரும்பும் தட்பவெட்ப நிலை, வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் மற்றும் பருவ மழை பெறும் பகுதிகள்

7. இந்த மரங்களின் தண்டு பகுதி சிகப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டைகள் செதில்களாக அமைந்திருக்கும். இலைகள் ஈட்டி முனை போல இருக்கும். இரண்டு முதல் 15 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும். இலைகளில் 3 நரம்புகளுடன் இருக்கும். இலைகளின் அடிப்பகுதி கூர்மையான மெல்லிய ரோமங்களால் மூடி இருக்கும்

8. பூக்கள் 8 சென்டிமீட்டர்   நீளமாக அகலமாக இருக்கும். இதழ்கள் லேசான மற்றும் அடர்த்தியான ஊதா நிறமாக இருக்கும். அரிதாக வெண்மை நிறமாக இருக்கும். ஆண்டு முழுவதும் பூக்கும் காய்க்கும்.

9. பழங்கள், தோராயமாக உருண்டையாக இருக்கும். அவை கனிந்தால் அதன் பழத்தசை அடர்த்தியான நீல நிறமாக மாறும். அதில் நிறைய விதைகள் இருக்கும். விதைகள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

10. பழங்களை சாப்பிடலாம். ஆனால் பழங்களில் எந்த சுவையும் இருக்காது, ‘சப்’பென இருக்கும். பழங்கள் சாப்பிட்ட பின்னால் அது நமது நாக்கு நீல நிறமாக மாறிவிடும், நாவல் பழம் சாப்பிட்ட மாதிரி.

11. இந்த ரோடோடென்ட்ரான் மரங்கள் தரிசு நிறங்களில், காடுகளில் மற்றும் சுமாரான மண் வகைகளிலும் வளரும். சில நாடுகளில் இதனை களை மரமாக கருதுகிறார்கள். தாழ்வான நிலப்பகுதிகள் மற்றும் மூவாயிரம் மீட்டர் உயரமான மலைப் பகுதிகள் வரையிலும்  இந்த மரங்கள் பரவி உள்ளன.

12. தேனீக்கள் குளவிகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இதன் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன. இதன் பழங்கள் பறவைகள் அணில்கள் மற்றும் குரங்குகளுக்கு உணவாகின்றன.

13. இந்த ரோடோடென்ட்ரான் புதிய செடிகளை உருவாக்க விதைகளை பயன்படுத்தலாம். கிளைத் தண்டுகளையும் நடவு செய்யலாம். இதன் பழங்களை சாப்பிடலாம். இலைகள் விதைகள் அனைத்தையும் சாப்பிடலாம். இலைகளை சமைக்காமல் கூட சாப்பிடலாம். லேசா புளிப்பாக இருக்கும். விதையை சுற்றி இருக்கும் தசைப் பகுதியைக் கூட இந்தோனேசிய மக்கள் சாப்பிடுகிறார்கள்.

14. மருத்துவ பயன்கள், பழங்குடி மருத்துவத்தில் பலவிதமான நோய்களை குணப்படுத்த வெகு காலமாக உதவியாக உள்ளது இந்த ரோடோடென்ட்ரான் மரங்கள்.

15. உடலில் ஏற்படும் வலி வயிற்றுப்போக்கு சீதபேதி, பல்வலி செரியாமை, வெள்ளைப்படுதல் வயிற்று வலி, மூலம்,  உடல் காயங்கள், மூட்டுவலி, கால்வீக்கம் மூட்டுவீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் பண்புகள் இதில் உள்ளன..

16. சில இடங்களில் இதன் இலைகளை பட்டு பூச்சிகளுக்கு தீவனமாகப் போடுகிறார்கள். இதன் விதைகளில் இருந்து கருப்பு சாயமும், வேர்களில் இருந்து ஊதாநிறச் சாயமும் தயாரிக்கிறார்கள்.

17.ஊதா மற்றும் வெண்ணிற அழகான பூக்களுக்காக இந்த ரோடோடென்ட்ரான் மரங்களை அழகு மரங்களாக வளர்கிறார்கள்

18. ஈரமான மண்கண்டங்களில் நீர் தேங்கி நிற்கும்படியான இடங்களிலும் இந்த மரங்கள் நன்கு வளர்கின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...