Wednesday, August 23, 2023

INDIAN HEYNEA TREE OF REFORESTATION 315.காரைவிளங்கு வனமீட்பு இந்திய மரம்

 

காரைவிளங்கு
வனமீட்பு  இந்திய மரம் 

காரைவிளங்கு இமய மலைப் பகுதிகளில் நேபாளம் பூட்டான், வடகிழக்கு இந்தியா பர்மா சீனா மலேசியா ஆகிவற்றைத் தாயகமாக்க் கொண்டது, ஆசியாவில் பல நாடுகளில் இந்த மரம் பரவி உள்ளது, அழிக்கப்பட்ட காடுகளில் மீண்டும் வனத்தை உருவாக்க இந்த மரங்களை பயன்படுத்தலாம், இந்த மரங்களை கட்டிடங்களின் உட்பகுதி வேலைகளுக்கும். இதர தட்டமுட்டு சாமான்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும். இதன் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணையை விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தலாம், மரத்தை விறகாக அடுப்பெரிக்கவும் பயன்படுத்தலாம்.. 

1. தாவரவியல் பெயர்:ஹெய்னியா ட்ரை ஜூகா (HEYNEA TRIJUGA)

2. பொதுப் பெயர்கள்:இந்தியன் ஹெயினியா (INDIAN HAYNEA)

3.தாவரக் குடும்பம்:மீலியேசி (MELIACEAE) 

4.தாயகம்: இமய மலைப் பகுதிகள் நேபாளம் பூட்டான், வடகிழக்கு இந்தியா பர்மா சீனா மலேசியா

5. பலமொழிப் பெயர்கள் 

அசாமிஸ்: தென்காரி ஆறாங்  (THENGARE ARONG) 

கன்னடம்: கோரா  (KORA) 

மலையாளம்: கோரக்காடி (KORAKADI) 

மராத்தி: லிம்பாரா  (LIMBARA) 

நேபாளி: ஆங்க்கா  (AANKHA) 

தமிழ்: காரைவிலங்கு, காரை, செந்தணை, செந்தரை    (KARAIVILANKU, KARAI,SENTHANAI,SENTHARAI)

6.பரவி இருக்கும் இடங்கள்:  

ஆசியாவில் தெற்கு சைனா, இந்தியா, நேபால், பூட்டான், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இந்த மரம் பரவி உள்ளது.

பயன்கள்:

7.அழிக்கப்பட்ட காடுகளில் மீண்டும் வனத்தை உருவாக்குவதற்காக இந்த மரங்களை பயன்படுத்தலாம்.

8. கனமில்லாத எடை குறைவான இந்த மரங்களை கட்டிடங்களின் உட்பகுதி வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதர தட்டமுட்டு சாமான்கள் செய்வதற்கும் இதனை பயன்படுத்த முடியும்.

9.இதன் எண்ணெயை விளக்கு எரிக்க பயன்படுத்தலாம். வனங்களை பரப்புவதற்கு உதவியாக இருக்கும் பறவைகள் மற்றும் பிராணிகளை கவர்ந்து இழுக்கக்கூடிய மரம் இது. 

10. வளரியல்புகள்:

பகுதியாக இலை உதிக்கும் மரம் இது, ஐந்து முதல் பத்து மீட்டர் உயரம் வேகமாக  வளரும், மரச்சாமான்கள் செய்யவும், எண்ணை எடுக்கவும், பாரம்பரிய மருந்துகள் செய்யவும் பயன்படும் மரம், தாய்லாந்து நாட்டில் வன மீட்பு பணிகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.

11.வளரும் இடங்கள்:

மலைப்பகுதிகளில் உள்ள காடுகள் அவ்விடங்களில் 200 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள பகுதிகள், மேலும் மலைப்பகுதிகளில் திறந்தவெளிகளில் உள்ள பசுமை மாறா காடுகளிலும் நன்கு வளரும்.

12. இந்த மரங்கள் வேகமாக வளர்ந்து இதனுடைய தலை அமைப்பு பரந்து, அதிகப்படியாக வளரும் களைகளை வெகுவாக கட்டுப்படுத்தும். இதன் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணையை விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்.

13. இந்த மரத்தின் கட்டைகள் மிகவும் மிருதுவானவை, கட்டிடங்களின் உட்புற வேலை செய்வதற்கு பொருத்தமாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக இந்த மரத்தை விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுத்துகிறார்கள். 

14.சிறிய மரம் மரத்தின் பட்டைகள் செங்காவி நிறமாக இருக்கும் இலைகள் கூட்டிலை நான்கு முதல் 15 அங்குல நீளமாக இருக்கும், பூக்கள் சிறியவை செந்நிறமாக இருக்கும் இருபால் பூக்கள், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டங்களில் பூக்கும்.

15. தீபகற்ப இந்தியா, வடகிழக்கு இந்தியா, உத்தரப்பிரதேசம், பீகார், வெஸ்ட் பெங்கால், சிக்கிம், அருணாச்சல பிரதேஷ், அசாம், மேகாலயா, ஒரிசா, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, நேபாளம், மியான்மர், மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பரவியுள்ளது

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...