Saturday, August 19, 2023

HOW TO TAKE CARE OF BOUGAINVILLEA PLANTS காகித பூச்செடிகளை கவனமாய் பராமரிப்பது எப்படி

காகித பூச்செடிகள் 
தொட்டிகளில்

 

காகித பூ முகப்பு வாயில் வளைவு

காகித பூச்செடிகள் 
உயிர் வேலி

காகிதபூச்செடிகள் உலகின் வெப்பமண்டலப் பகுத்களில் எல்லாம்  பரவியிருக்கும் அழகு பூச்செடி, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நம் தோட்டத்தை அலங்கரிக்கும், அதிக கவனமும் செலவும் இன்றி பரமாரிக்க ஏற்றது, தொட்டிச் செடியாகவும், குற்றுச்செடியாகவும், பந்தலில் படர் கொடியாகவும் வளர்க்க ஏற்றது, தென் அமெரிக்கவிற்கு சொந்தமான  பலவண்ண அழகுச்செடி.

1.காகிதபூச்செடிகள் அதிகப்படியான தண்ணீர் கொடுப்பது ஆகாது மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுப்பது நல்லது.

2. அதிகப்படியான தண்ணீர் கொடுப்பதால் அதிகப்படியான தழை மண்டிவிடும், பூப்பது குறையும், அதனால் அளவாக தண்ணீர் தருவது அவசியம்.

3. கூடுதலான குளிரை காகிதபூச்செடிகள் தாக்கு பிடிக்காது 30டிகிரி சென்ட்டிகிரேடுக்குக்  குறைவான வெப்பநிலை அதற்கு சரிப்பட்டு வராது.

4. காகிதபூச்செடிளுக்கு இரசாயன உரம் தேவை இல்லை, தொழுஉரம் அல்லது மண்புழு உரம், வேஸ்ட்டிகம்ப்போசர்,  அமுதக்கரைசல், பஞ்சகவ்யம் மாதிரியான  இயற்கை உரங்கள் போதுமானது.

5. பொதுவாக கொடிவகை செடிகள் அருகில் இருக்கும் கொம்புகள் அல்லது சுவர்களை பற்றி கொள்ளும் கம்பிகளை உருவாக்கிக்கொள்ளும். அப்படிப்பட்ட  பற்றுக் கம்பிகள் காகிதபூச்செடிகளில் கிடையாது. அதற்கு நாம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. வளரும் காகிதபூச்செடிகள் எலும்புகள் மாதிரி உறுதியாக வளரும், அதனால் இதன் கொடிகளின் கிளைகளை, வேலிகள் கம்புகள் ஆகியவற்றுடன் சேர்த்து இறுக்கமாக்க் கட்ட வேண்டும்.

7.காகிதபூச்செடிகளில் ஏகப்பட்ட வகைகள் உண்டு. உயரம் குறைவான வகைகள், படர்ந்து நீண்டு கொடி போல வளரும் வகைகள், தொட்டிகளில் குட்டையாக வளர்க்க ஒரு வகை என்று தனித்தனி வகைகள் இருக்கின்றன.

8. காகிதபூச்செடிகள் செடியா கொடியா மரமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும், எனக்கும் வந்தது. இது ஒரு மரவகை ஏறுகொடி (CLIMBER)என்று என்ற தாவர வகையைச் சேர்ந்தது.

9. காகிதபூச்செடிகள் இருவகையான பண்புகளைக் கொண்டது ஒன்று படர்ந்து வளர்வது இன்னொன்று ஏறி வளர்வது. ஆனால் பெரும்பாலும் இதனை குற்றுச் செடிகளாகவே பராமரிக்கிறார்கள். அதாவது தரித்தும் கத்தரித்தும் இதனை குத்துச்செடிகளாகவே பரமரிக்கிறோம்.

10. காகிதபூச்செடிகள் கிளிப்பிள்ளை மாதிரி நீங்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கும் தோட்ட செடிகளை மாதிரி ஒரு நல்ல பிள்ளை மற்றும் செல்ல பிள்ளை. 

11. சில வகைகளை தொட்டிகளில் மட்டும் பெட்டிகளில் வளர்க்கலாம். அவை ஐந்து முதல் ஆறடி படர்ந்து வளரும். ஆனால் காகிதபூச்செடிகள் அதிகபட்சமாக 40 அடி வரை கூட நீளமாக கொடியாக வளரும். குளிர்ச்சியான வெப்ப நிலை உள்ள பகுதிகளில் இந்த செடிகள் இலைகளை உதிர்ந்து விடும்.

12. இந்தச் செடிகள் பெரும்பாலும் சிவப்பு, அடர்த்தியான ஊதா நிறம், ஆகிய இரு  நிறங்களில் பூக்களைப் பூக்கும். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலும் பூக்கும் செடிகளும் உள்ளன.

13. றி படரும் கொடிகள் என்றால் நேராக நிற்க முடியாமல், அருகில் இருக்கும் மரங்கள் அல்லது சுவர்களின் துணையுடன் ஏறி வளரும் செடிகளை கிளைம்பர் (CLAIMBER)என்று வகைப்படுத்துகிறார்கள், உதாரணம் திராட்சை மற்றும் மணி பிளான்ட் செடிகள்.

14. காகிதபூச்செடிளில் மொட்டுவிட்டு பூத்து பூவாக செடிகளில் இருக்கும் நாட்கள் என்றால் அவை மொத்தம் 28 நாட்கள். மொட்டுக்கள் பூக்களாக மலர ஒன்று முதல் 12 நாட்கள் எடுத்துக் கொள்ளுகின்றன., செடிகளை பூக்கள் அலங்கரிக்கும் நாட்கள் என்று பார்த்தால் சுமார் 13 நாட்கள்.

15. காகிதபூச்செடிளில் பூக்கும் மாதங்கள் என்ற பார்த்தால் அவை மொத்தம் ஏழு மாதங்கள், நவம்பர் முதல் மே மாதம் வரை. இவை நன்கு பூக்க இரண்டு தேவைகள் ரொம்பவும் அவசியம், ஒன்று சூரியஒளி இரண்டு அதிக வெப்பம்.

16. அதிக சூரிய ஒளி என்றால் நேரடி சூரியன், ஒரு நாளில் குறைந்த பட்சம் ஐந்து மணி நேரமாவது செடிகள் நேரடியாக சூரிய ஒளியில் குளிக்க வேண்டும், இல்லை என்றால் அது பூப்பினை பாதிக்கும்.

17. காகிதபூச்செடிளின் சிறப்பு என்றால், இரண்டைச் சொல்லலாம். ஒன்று பளிச்சென்று அதன் வண்ணம், இரண்டு நாம் விரும்பும்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை.

18. காகிதபூச்செடிளில் பராமரிப்பு என்றால் அவை மூன்று, ஒன்று அதிக சூரிய ஒளிக்கு ஏற்பாடு செய்வது, இரண்டு அதிகம் இல்லாமல் தண்ணீர் கொடுப்பது, மூன்று தேவைப்படும்போது கிளைகளை கவாத்து செய்வது.

19. மிகவும் பிரபலமான காகிதபூச்செடி ரகம் என்பது எது பார்பரா காஸ்ட்ரா (BARABARA KASTRA) என்பதுதான் பிரபலமான ரகம், காரணம் அதன்  நிறம், சிவப்பு மற்றும் மெஜந்தா  இரண்டும் கலந்த  நிறம், இன்னொன்று வருஷம் 365 நாளும் பூக்கும் பண்பு, மூன்றாவது அதிகபட்சமாக அதாவது 40 அடி உயரம்/ நீளம் வரை படரும்/ வளரும் பண்பு.

20. காகிதபூச்செடிகள் ஓராண்டில் சராசரியாக ஒரு அடி வளரும் ஆனால் நல்ல சூழலில் இரண்டு முதல் நான்கு அடி கூட வளரும்.

21. இந்த செடிகளின் சராசரியான வயது என்பது 50 ஆண்டுகள், ஆனால் சில செடிகள் 200 ஆண்டுகள் வரை கூட இருப்பதாக சொல்லுகிறார்கள். கவாத்து செய்வது என்பது ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். மொட்டு விடுவதற்கு முன்னதாக, அதனைச் செய்ய வேண்டும். அதனால் இடத்துக்கு இடம் இது வேறுபடும்.

22. தேவையற்ற கிளைகள், உலர்ந்தவை, நோய்களால் அல்லது பூச்சிகளால் தாக்கப்பட்டவை, அதிக நெருக்கமாக அல்லது ஒழுங்கின்றி வளர்ந்த கிளைகள் மற்றும் சிம்புகளை வெட்டி நீக்க வேண்டும். இதைத்தான் நாம் கவாத்து என்று சொல்கிறோம். மற்றபடி கிளைகளை ஒழுங்கு செய்வது என்பதை தேவைக்கு ஏற்ப ஆண்டு முழுவதும் செய்யலாம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

1 comment:

சுப்ரமணிய பாலா said...

காகித பூக்களின் வலி ஓன்றை என்னிடம் சொன்னது கனவில் ...வாசம் கூட்டுக எமக்கு சிலர் என்னை வாசமற்றவள் என்கிறார்கள்...

தகவல்கள் தந்தமைக்கு நன்றி

ஓரு காலத்தில் எல்லாவீடுகளிலும் வாசலில் இருந்தது..
இனி எப்ப வரும் அந்த காலம்

பாண்டிச்சேரி அன்னைக்கு பிடித்த பூ

காகித பூவாக இரு
புகழ் எனும் வாசம் அற்றூ
காகித பூவாக இரு
அழகெனும் ரூபம் கொண்டு

காகிதப்பூ கனவில் சொன்னதை சொல்கிறேன்
தேனிகளுக்கு தேன் தர வாசம் வேணும் மனுசங்களுக்கு அல்ல ...பாலா

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...