Sunday, August 6, 2023

HOG PLUM COSMETIC CUM MEDICINAL TREE 298.கடலிறஞ்சி மருத்துவ அழகு சாதன பழ மரம்

கடலிறஞ்சி மருத்துவ
அழகு சாதன பழ மரம்


1. கடலிறஞ்சி மரங்கள் ஐந்து மீட்டர் வரை உயரமாக வளரும், நடுத்தரமான மரங்கள் வேகமாக வளரக்கூடியவை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரங்கள் மாறாத பசுமையான மரங்கள், இவை பெரும்பாலும் இயற்கையான வனப்பகுதியில் வளர்ந்து கிடக்கின்றன, இது அதிகபட்சமாக ஒரு பழமரம், உணவாக உபயோகமாகிறதுஇதில் ஜூஸ் செய்யலாம், ஜாம் செய்யலாம், புளிக்க வைத்து ஒயின் தயாரிக்கலாம். பீர் பிராந்தி போன்ற மது வகைகளை தயாரிக்க முடியும். இதன் பழக்கொட்டைகளைப் பிழிந்து எண்ணை எடுக்கலாம். இதனை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தலாம்இதன் கொட்டை எண்ணெயில் பல்வேறு விதமான அழகு சாதன பொருட்களை தயார் செய்கிறார்கள். கடல்இஞ்சியில் தயாரிக்கும் இயற்கையான மருந்துகள் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

2. தாவரவியல் பெயர்: சைமெனியா அமெரிக்கானா (XIMENIA AMERICANA)

3. பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப் பெயர்: ஹாக் ப்ளம், டாலோவுட், எல்லோ பிளம், சி லெமன் (HOG PLUM, TALLOW WOOD, YELLOW PLUM, SEA LEMON)

தமிழ் பெயர்: கடல் இறஞ்சி மரம், கடல் அழிஞ்சிசிறு இலந்தை  

தாவரக் குடும்பம்: ஒலக்கேசியா (OLACACEAE)

4. கடலிறஞ்சி மரங்கள் ஐந்து மீட்டர் வரை உயரமாக வளரும், நடுத்தரமான மரங்கள் வேகமாக வளரக்கூடியவை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரங்கள் மாறாத பசுமையான மரங்கள்.

5. கடலிறஞ்சி பரவி இருக்கும் இடங்கள், ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஆசியா முதல் ஆஸ்திரேலியா வரை உள்ள நாடுகள், நியூசிலாந்து பசிபிக் தீவுகள் வெஸ்ட் இண்டீஸ் மத்திய அமெரிக்கா தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா.

6. கடலிறஞ்சி மரங்கள் பெரும்பாலும் இயற்கையான வனப்பகுதியில் வளர்ந்து கிடக்கின்றன 500 மீட்டர் வரை ஆயிரம் இரண்டாயிரம் மீட்டர் வரை உள்ள உயரமான பகுதிகளில் இந்த மரங்கள் வளருகின்றன.

7. மலைப்பகுதிகளில் கடலோரங்களில் புதர் செடிகள் வளர்ந்திருக்கும் இடங்கள் ஆற்றங்கரைகள் அலையாத்தி மரங்கள் வளர்ந்து இருக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த கடலிறஞ்சி பழமரங்கள் பரவி இருக்கின்றன.

8. கடலிறஞ்சி மரங்கள் சராசரியான மண் வகைகளில் வறண்ட பிரதேசங்களில் இயற்கையாக பரவியுள்ளன. யாரும் இதனை சாகுபடி செய்வதில்லை என்று சொல்லுகிறார்கள்.

9. கடலிறஞ்சி அதிகபட்சமாக ஒரு பழமரம். உணவாக உபயோகமாகிறது. பறித்த பழங்களை அப்படியே சாப்பிடலாம், அல்லது ஊறுகாய் போட்டு உபயோகப்படுத்தலாம்.

10.எலுமிச்சம் பழங்களுக்குப் பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதில் ஜூஸ் செய்யலாம், ஜாம் செய்யலாம், இதனை புளிக்க வைத்து ஒயின் தயாரிக்கலாம். பீர் பிராந்தி போன்ற மது வகைகளை தயாரிக்க முடியும்.

11.தெற்கு ஆப்பிரிக்காவில் இந்த கடலிறஞ்சி பழங்களைப் பயன்படுத்தி ஒரு வகையான பீர் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

12. கடலிறஞ்சி பழக்கொட்டைகளை பிழிந்து எண்ணை எடுக்கலாம். இதனை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தலாம். மேலும் வெண்ணெய்  நெய் மாதிரியே இதனை உபயோகிக்கலாம்.

13.இதன் கொட்டைகளில் பேதியை தூண்டும் தன்மை இருப்பதால் அதிகமான அளவில் இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆசிய நாடுகளில் இதன் இலை தழையை கீரையாகவும், இதர வகையிலும் சமையலில் பயன்படுத்துகிறார்கள்.

14. அதே போல் இதன் இலையில் சயனைட்ஞ்சு இருப்பதால் அதிகம் சாப்பிடாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். கடலிறஞ்சி கொட்டை எண்ணெயில் பல்வேறு விதமான அழகு சாதன பொருட்களை தயார் செய்கிறார்கள்.

15. கடலிறஞ்சி எண்ணெயிலிருந்து சருப் பாதுகாப்பு,ளிம்புகள், கூந்தல் தைலங்கள், சோப்புகள், லிப்ஸ்டிக்குகள், உணவு எண்ணெய், ஆகியவை தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

16. கடலிறஞ்சி மரங்களின் யிரப் பகுதி கட்டைகள் மற்றும் இதன் பூக்களை பயன்படுத்தி ஆரஞ்சு மரங்களை பூக்க செய்ய ஒரு வகையான ஊக்கவிப்பு மருந்து தயார் செய்கிறார்கள்.

17. கடலிறஞ்சி மரங்களின் கட்டைகள் அற்புதமான விறகாக பயன்படுகிறது. இதிலிருந்து சார்கோல் கறி தயார் செய்கிறார்கள். கடலிறஞ்சி  கொட்டைகளில் இருந்து எடுக்கும் பயோ ஃப்யூல் இயற்கை எரி எண்ணையாக பயன்படுத்தலாம். இதனை கெரசின்னுடன் கலந்து எரித்தால் அற்புதமாக எரியும் என்கிறார்கள். 

18.கடல் இறைஞ்சியை பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். கடல்இஞ்சியில் தயாரிக்கும் இயற்கையான மருந்துகள் மூலம் என்னென்ன நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

19.மணல்வாரி அம்மை நோய் மலேரியா சருமநோய்கள் பாலியல் நோய்கள் வயிற்றுப்போக்கு தசைப்பிடிப்பு நுரையீரல் கட்டிகள் ஜலதோஷம் காய்ச்சல் கண் வலி பல் வலி தொண்டைப்புண் தலைவலி  நஞ்சு முறிப்பு தொழு நோய் மிகையான ரத்தப்போக்கு   உறக்கநோய் சிறுநீர் தாரைகளில் தொற்று ஏற்படுதல் புற்றுநோய் ஆகிய நோய்களை குணப்படுத்த கடலிறஞ்சி மரங்களின் இலை தழை பட்டை கட்டைகள் வேர்கள் அத்தனையும் பயனாகின்றன.

20. பிரேசில் நாட்டின் இதன் இலைகளில் தயாரித்த தேநீர் மிகவும் பிரபலமானது. இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்கிறார்கள். இதன் எண்ணை, சருமப்பாதுகாப்புக்காகவும் மற்றும் கூந்தல் பாதுகாப்புக்காகவும் நிறைய விற்பனை ஆகிறது.

21. கடலிறஞ்சி ரத்தின் பூக்கள் மற்றும் பழங்கள் கவர்ச்சிகரமானவை என்பதால் இதனை அழகு மரங்களாக வளர்க்கலாம். காடுகளில் இருக்கும் இந்த பழ மரங்கள் வனவிலங்குகள் மற்றும் இதர உயிரினங்களுக்கு உணவாக உள்ளது.

22. இந்தியாவில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த கடலிறஞ்சி மரங்கள் பரவியுள்ளன.

23. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சேலம் திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த கடலிறஞ்சி  மரங்கள் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் இது பரவியுள்ளது.

24. இந்த மரத்திற்கு நாட்டு சந்தன மரம் என்ற பெயர் உண்டு.. காரணம் இதன் கட்டைகளில் கம கமவென்று வாசனை வரும். கடலிறஞ்சி  மரத்தின் தாயகம் இந்தியா என்பது ஒரு பெரும் பட்டியலை ந்துள்ளார்கள். அவை அங்கோலா அர்ஜென்டினா பகாமாஸ் பங்களாதேஷ் பொலிவியா போர்னியோ போட்ஸ்வானா பிரேசில் கேமரூன் ஆகியவை.

25. சர்வதேச அளவில் பரவி உள்ள இடங்கள் இந்தியா ஸ்ரீலங்கா ஆப்பிரிக்கா மியான்மர் சீமான் மலேசியா ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள்.

26.புதிய கடலிறஞ்சி மரங்களை உருவாக் நேரடியாக விதைகளை விதைக்கலாம் அல்லது கிளைத் தண்டுகளை நடவு செய்யலாம்.

27.பறவைகள் மற்றும் பிராணிகள் விதைகளை பரப்புகின்றன. கடலிறஞ்சி மரத்தின் பூக்களில் தேனீக்கள் மற்றும் பூச்சிகள் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்துகின்றன.

அன்பின் இனிய நண்பர்களே இந்த கடலை இஞ்சி மரம் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...