Friday, August 11, 2023

GLOBALLY FASTEST GROWING GIANT BAMBOO 303.ராட்சச மூங்கில் உலகின் வேகமாக வளரும் வகை

உலகின் வேகமாக வளரும்
ராட்சச மூங்கில் ரகம்.


1. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் மூங்கில் என்பது பரவலாக நமக்கு தெரியும். ஆனால் மூங்கிலில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உலகில் இருக்கின்றன.

2. இந்த ஆயிரம் மூங்கில் ரகங்களில் எந்த ரகம் மிக வேகமாக வளரும் சொல்ல முடியுமா உங்களால்? அதைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

3. இதனை ஜெயண்ட் பேம்பு என்றும் டிராகன் பாம்பு என்றும் சொல்லுகிறார்கள்.  இந்த ராட்சச மூங்கில் ரகம், தென்கிழக்கு ஆசியாவிற்கு சொந்தமானது.

4. தாவரவியல் பெயர்: டென்ட்ரோகலாமஸ் ஸ்பர் (DENDROCALAMUS ASPER )

பொதுப் பெயர்கள்: ஜெயண்ட் பேம்பு, டிராகன் பாம்பு (GIANT BAMBOO,DRAGON BAMBOO)

தாவரக் குடும்பம்:  போஓசி (POACEAE)

5. ராட்சசமூங்கில், 15 முதல் 20 மீட்டர் உயரம் வளரும். மரத்தின் குறுக்களவு 8 முதல் 12 சென்டிமீட்டர் இருக்கும். அதாவது அரை அடிக்கும் கொஞ்சம் குறைவானது.

6. ராட்சசமூங்கில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. முக்கியமாக இந்தியா ஸ்ரீலங்கா மற்றும் சீனா ஆகிய இடங்களில் பரவியுள்ளது. சமீப காலமாக இந்த ரக மூங்கில் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க பகுதிகளிலும் பரவி வருகிறது.

7. ராட்சசமூங்கில் சிறப்புகள் என்பவை, இதுதான். காலம்காலமாக கட்டுமானப் பணிகளில் பயன்படுத்துவது,  இரண்டாவது இதன் இளம் குருத்துகள் உணவாக உபயோகமாவது. இதனை காய்கறியாக சமையலில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

8. மூங்கில் மூளையை சமைத்து சாப்பிட்டவர்கள், பலர் என்னிடம் அது பற்றி சொல்லி இருக்கிறார்கள். கோழிஇறைச்சியை விட அதன் ருசி கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.

9. இந்த மரங்களின் மேற்புறம் சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறமாக இருக்கும். உலர்ந்த மரங்கள் மங்கலான காவி நிறமாக மாறும். 

10. மரத்தின் இளம் தண்டுகள் காவி நிறம் கலந்த கருப்பு நிறமாக இருக்கும். இதில் கணக்கள், இடையே இருக்கும் நீளம் 25 முதல் 60 சென்டிமீட்டர் வரை இருக்கும்.

11. ந்த மரங்கள் நேராக, செங்குத்தாக, நெளிவு சுளிவு இல்லாமல் வளரும். அதனால் முதிர்ச்சி அடைந்த மரங்களை சுலபமாக அறுவடை செய்யலாம். கட்டுமான வேலைகளில் முக்கியமாக மூன்று மூங்கில் ரகங்களை பயன்படுத்துகிறார்கள்.

12. அவை மோசோபேம்பு (MOSO BAMBOO) குவாடுவா பேம்பு (GUADUA BAMBOO) மற்றும் ஜெயண்ட் பேம்பு ஆகியவை.

13. இந்த முக்கியமான மூன்று வகைகளில், பெரிய அளவு மூங்கிலாகவும், உறுதியான மூங்கிலாவும், இருப்பது நமது ஜெயண்ட் பேம்பு தான்.

14. இந்த ஜெயண்ட் பூம்பு மூங்கில் ரகத்தினை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.

இந்தோனேஷியா பீட்டிங் (BETING)

மலேசியா: பெட்டிங் (BETING)

பிலிப்பைன்ஸ்: புக்காவி (BUKAWE)

தாய்லாந்து: பாய் டாங் (PHAI TONG)

வியட்நாம்: மான் டாங் (MANH TONG)

ஸ்ரீ ஸ்ரீலங்கா:  னா (UNA)

தைவான்: மலைமழு (MALAI MAZHU)

சைனா: டிராகன் பாம்பூ (DRAGON BAMBOO)

மியான்மர்: கியால்வெ வா (KYALWAY WA)

லாவோஸ்:ஹாக் (ஹொக்)

சிங்கப்பூர்: ரேபாங் சைனா (REBONG CHINA).

15. விவசாயம் செய்யும் மூங்கில் ரகம், நல்ல சூழலில் இந்த ஜெயண்ட் பேம்பூ ரகம், அதிகபட்சமாக 100 அடி உயரமும், 7 முதல் 8 அங்குலம் குறுக்களவு கொண்டதாக வளரும்

16. மற்ற ரகங்களை விட உறுதியான ரகம். இதனை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் இதனை விவசாயம் செய்ய தொடங்கியுள்ளார்கள்.

17. அந்த வகையில் லத்தீன்அமெரிக்கா, ஈக்வேடர், ஆப்பிரிக்கா, மற்றும் ப்ளோரிடா ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த ராட்சசமூங்கில் ரகத்தை விவசாயப் பயிராக சாகுபடி செய்கிறார்கள்.

18. காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மூங்கில் மரங்கள் பரவி உள்ளன.

19. உலக அளவில் பரவி இருக்கும் மொத்த மூங்கில் இனங்கள் 1000. அவற்றில் மிகவும் வேகமாக வளரும் மூங்கில் இனம் இந்த ராட்சசமூங்கில் ரகம்தான்.

20. சர்வதேச அளவில் இந்தியா சைனா ஜப்பான் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் அதிக அளவில் மூங்கில் உற்பத்தி செய்கின்றன. உலக அளவில் அதிக மூங்கில் உற்பத்தி செய்யும் நாடு சீனா தான். அதற்கு அடுத்தபடியாக உலக அளவில் மூங்கில் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது.

21. மூங்கிலில் இளம் தண்டுகள் உணவாக உபயோகம் ஆகிறது என்று பார்த்தோம். தனை ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அத்துடன் கைவினைப் பொருட்கள், மேஜை நாற்காலி வகை மரச்சாமான்கள், விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள், கூடைகள், வாக்கிங் ஸ்டிக்குகள், குடை கைப்பிடிகள், அகர்பத்தி குச்சிகள், மற்றும் பல வகையான காகிதங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

22. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் சேர்வராயன் மலைத்தொடர் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஜவ்வாது மலைப்பகுதிகளிலும் மூங்கில் மரங்கள் பரவி உள்ளன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...