Tuesday, August 29, 2023

ENNAIMARAM TREE OF BIO-DIESEL 321.பயோடீசல் எண்ணெய்மரம்


பயோடீசல் எண்ணெய்மரம்

ENNAIMARAM
TREE OF BIO-DIESEL


எண்ணெய்மரம் எனும் இந்த மரம் அத்தியாவசிய எண்ணெய் (ESSENTIAL OIL) மற்றும் பயோடீசல் (BIO DIESEL)தயாரிக்க, வாசனை தரும் அழகு சாதன பொருட்கள் (COSMETICS)செய்ய, மரச் சாமான்கள் செய்ய, கட்டுமான வேலைகள் செய்ய, பழங்குடிகளுக்கு கிராமங்களில் விளக்கு எரிக்க, படகுகள் செய்ய, தொழிற்சாலைகளிL பயன்படுத்த, பெயிண்ட் வார்னிஷ் மற்றும் அவை தொடர்பான பொருட்கள் தயாரிக்க, அனைத்திற்கும் ஏற்றது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சொந்தமான இந்திய மரம்.

2. தாவரவியல் பெயர்: டிப்டிரோகார்பஸ் போர்டில்லோனி (DIPTEROCARPUS BOURDILLONI)

3.பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: எண்ணெய்மரம் (ENNAIMARAM)

இங்கிலீஷ்: நியூகினியா ரோஸ்வுட் (NEWFUINEA ROSEWOOD)

கன்னடா: வாலிமரா (VALEE MARA)

மலையாளம்:  வா வாங்கு வெள்ள அயனி (VAVANGU VELLA AYANI)

4. எண்ணெய்மரம் மிகவும் உறுதியான மரம் ஒரு கன அடி மரத்தின் எடை 54 பவுண்டு, இதன் வைரமரம் ஊதா நிறம் மற்றும் செங்காவி நிறமாக இருக்கும், தேக்கு மரத்தை விட கடினமான மரம் இது, ஒரு கன அடி தேக்கு மரத்தின் எடை 41 பவுண்டு தான்.

5. இதன் கட்டைகளை (TIMBER), ரயில் பாதை அமைக்கும் வேலையில் ஸ்லீப்பர் கட்டைகள், மின்சார கம்பங்கள், பெரும் தூண்கள், மற்றும் நீருக்கு அடியில் பயன்படுத்தும் பொருட்கள் செய்ய, என்று பல முக்கியமான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

6. மேற்கு தொடர்ச்சி மலையை தாயமாக கொண்ட மரம் இது, அதிக கேரள மாநிலத்தில் பரவி இருக்கும் மரம் ஆனால் அரசினால் மிக வேகமாக அழிந்து வரும் மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7.மிக உயரமாக, வாட்டசாட்டமாக வளரும் மரம், அதிகபட்சமாக 49 மீட்டர் உயரம் வளரும், அடிமரம் கனமாகவும், வளரும். இலைகள் பெரியதாக நீண்டதாக அகலமான இலைகளாக இருக்கும். 18 முதல் 45 சென்டிமீட்டர் நீளமும் 12 முதல் 25 சென்டிமீட்டர் அகலமும் உடையதாக இருக்கும். முட்டை வடிவமாக இருக்கும்

8. ஏறத்தாழ 1 1/2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இலையை விரித்து சாப்பிடலாம், அவ்வளவு பெரிய இலைகள்.

9. பூக்கள் இரு பாலின பூக்களாக, இலை கணுக்களில் தோன்றும் பூக்கள் கொத்துக்களாக தோன்றும். ஒவ்வொரு கொத்திலும் மூன்று முதல் ஐந்து பூக்கள் தோன்றும், பூக்கள் 3.5 முதல் 5.00 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும்.

10. இதன் கொட்டைகளைத் தான் பழங்கள் என்கிறோம், இரண்டு சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டவைகளாக இருக்கும் இந்த பழங்கள்.

11. கேரள மாநிலத்தில் பரவி இருக்கும் இடங்கள்:

இடுக்கி, கொல்லம், பாலக்காடு, மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள்.

12. இந்தியாவில் பரவி இருக்கும் மாநிலங்கள்:

தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா.

13. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகிவரும் மரம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த எண்ணெய் மரங்கள் இந்தியாவில் பரவி உள்ளன. குறைவான உயரம் உள்ள பகுதிகளில் வளரும் மரம், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைக் காடுகளில் வளர்ந்திருக்கும் மரம்.

14. பூக்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும், பழங்கள் மே மாத வாக்கில் முதிர்ச்சியடையும்,ப்பிஸ் இண்டிகா மற்றும் ஏப்பிஸ் டார்சேட்டா (APHIS INDICA, APHIS DORSATA)ஆகிய இரண்டு தேனீ இனங்கள் இந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.

15. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 இடங்களில் சுமார் 250 மரங்கள் மட்டுமே தற்போது உள்ளன என்று சொல்லுகிறார்கள். ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

16. பல வகைகளில் பயன்படும் இந்த மரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனில் இந்த மரங்கள் முழுமையாக காணாமல் போக வாய்ப்பு உண்டு.

17.  தற்போது கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்ற வித்தியாசம் இன்றி மரங்களை நடும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பணிகளில் ஈடுபடுவோர் இந்த மரங்களை தேடிP பிடித்து நடவு செய்யுமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

18. மேலும் சில இடங்களில் சிலர் விதை வங்கி என்று வைத்துள்ளார்கள். அவர்கள் முக்கியமாக இது போன்ற அரிய மர வகைகளின் விதைகளை சேமித்து அதனை விநியோகம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

19. இந்த மரங்கள் பிரபலமான மரங்கள் இல்லை. ஆயினும் பல பயன் தரவல்ல இது போன்ற மரங்களை நாம் தேடிப் பிடித்து அவற்றை நடுவதற்கு நாம் பழக வேண்டும்.

20.முகம் தெரியாத இது போன்ற மரங்களை தேடிப் பிடித்து எழுதுவதற்கு முக்கியமான காரணம் இது போன்ற மரங்கள் மறைந்து போகும் மரங்களாக ஆகி விடக்கூடாது என்பதுதான்.

21. நான் எழுதும் மர வகைகளில் பெரும்பாலானவை எனக்கு தெரியாத மரங்கள் தான். ஆனால் அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து, தூசுதட்டி, துடைத்து எடுத்து, மெருகு ஏற்றி, அவை தொடர்பான அறிவியல் செய்திகளை ஆங்காக்கே சேர்த்து உங்களுக்கு பரிமாற முடிகிறது என்றால் நான் கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

22. இவற்றையெல்லாம் எனக்கு முன்னாலேயே தேனீக்கள் போல சிறுசிறு தேன் துளிகளாக சேகரித்து வைத்துள்ள எனது முகம் தெரியாத எனது முன்னோடிகளுக்கும் நானும் நீங்களும்  நன்றி சொல்ல வேண்டும்.

23. ஏதாவது ஒரு மொழியில் பதிவு இப்படி செய்துவிட்டால், பிறகு புண்ணியவான்கள்  யாராவது ஆங்கிலம் ஹிந்தி என இதர மொழிகளில் எல்லாம் பிளந்துகட்டுவார்கள்.

24. பின்னர் இந்த மர வகைகள் எல்லாம் மீண்டும் நம் பழக்கத்திற்கு வந்துவிடும் புழக்கத்திற்கும் வந்துவிடும்.

25. இந்த மரங்கள் பெரிய உயரமான மரங்கள் என்பதால் இதில்ஒரு மரப் படகுகள் செய்யலாம். ஒரு பெரிய நீளமான மரத்துண்டை எடுத்துக்கொண்டு அதனை குடைந்து எடுத்து அதனை படக்காக தயார் செய்வார்கள்.

26. தைத்தான் ஆங்கிலத்தில் டக்அவுட்  கெனோ (DUGOUT CANOE)என்று என்று சொல்லுகிறார்கள்,தற்கு நான் ஒருமரப்படகு என்று  நாமகரணம் சூட்டி உள்ளேன்.

27. இந்த மரத்தின் கட்டைகளில் ஒட்டுப்பலகைகளில் தயார் செய்யலாம், மரங்கள் அவ்வளவு தரமான மரங்கள் என்று சொல்ல முடியாது.

28.சில மரங்களை சிறிதாக காயப்படுத்தினால் கூட அதில் பால் வடியும். அதுபோல இந்த மரத்தில் ஓட்டை போட்டால் எண்ணெய் வடியும். இதனை ஒலியோரெசின் (OLEO RESIN) என்று சொல்லுகிறார்கள். இந்த ஓட்டைகளை நெருப்பிட்டு லேசாக கொளுத்தினால், பழைய ஓட்டைகளில் புதிய எண்ணெய் வடியும். 

29. இப்படி இந்த மரங்களில் வடியும் எண்ணெயை எடுத்து திலிருந்து பயோடீசல் (BIO-DIESEL) தயாரிக்கலாம், மேலும் பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள்.

30. லியோ ரெசின் என்பது ஒரு தாவரத்திலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL) மற்றும் பிசின் (RESIN) ஆகியவற்றின் கலவை. இது பெரும்பாலும் திரவமாக இருக்கும். ஆனால் அதில் பெரும் பகுதியாக இருப்பது அத்தியாவசிய  எண்ணைதான்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...