Wednesday, August 30, 2023

ELEMI MASSAGE OIL TREE CHINESE OLIVE TREE 322. மசாஜ் செய்ய உதவும் காரை செங்காரி

 


காரைச் செங்காரி மிகவும் பெரிய பசுமை மாறா பன்னாட்டு மரம் ஏறத்தாழ 100 அடி உயரம் வரை வளரும் ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்தும் சக்தி படைத்த அற்புதமான மூலிகை மரம், இந்த மரத்திற்கு சர்வதேச அளவில் எலமி என்று பெயர், எலமி மரம் என்பதை விட எலமி எண்ணை  மிகவும் பிரபலமானது. இதன் பிசினில் இருந்து அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL)எடுக்கிறார்கள், .அதிலிருந்து நோய்களை குணப்படுத்தும் மருந்து வகைகள், அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள்,  பெயிண்ட் வார்னிஷ்  ஆகியவை தயாரிக்கவும், உணவு மணமூட்டியாகவும், மசாஜ் செய்யவும்  பயன்படுத்துகிறது.

1. தாவரவியல் பெயர் கனரியம் கம்யூன் (CANARIUM COMMUNE) 

தாவரக் குடும்பம்: பர்ஸரேசி (BURSERACEAE)

தாயகம்:மலேசியா, பபுவா நியூகினியா, இந்தோனேசியா

பொதுப் பெயர்கள்:

சைனீஸ் ஆலிவ் (CHINESE OLIVE TREE)

ஜாவா அல்மாண்ட் (JAWA ALOMOND)

பசிபிக் அல்மான்ட் (PACIFIC ALMOND)

கெனரியம் நெட் (CANARIUM NUT)

பீலிநெட் (PILI NUT)

ஜாவா அல்மான்ட் (JAWA ALMOND) 

கேனரி நெட்  (CANARY  NUT)

காலிப் நெட் (GALIP NUT)

நங்கை (NANGAI)

2. காரை செங்காரி என்று சொல்லப்படும் இந்த மரம் சர்வதேச அளவில் எலமி என்று அழைக்கிறார்கள். எலமி மரம் என்பதை விட எலமி எண்ணை  மிகவும் பிரபலமானது.

3. இதன் பிசினில் இருந்து அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL)எடுக்கிறார்கள் .அதிலிருந்து நோய்களை குணப்படுத்தும் மருந்து வகைகளும், அழகு சாதனப் பொருட்களும் (COSMETICS) வாசனை திரவியங்களும்(PERFUMES), பெயிண்ட் வார்னிஷ் தயாரிப்பிலும், உணவு மணமூட்டியாகவும் (FOOD FLAVOURING) பயன்படுத்துகிறார்கள்.

 

4. மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மயக்க உணர்வு (STRESS, NERVOUS TENSION, FATIGUE) ஆகியவற்றை குணப்படுத்த மருந்துகள் தயாரிக்க காரை செங்காரி உதவுகிறது.

 5. நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் தொற்று, சிறுநீரகங்கள்உணவு செரிமானம், உடல் சருமம், ஆகியவற்றில், பாக்டீரியா வைரஸ் மற்றும் பூசங்களால் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.

6. நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் இருக்கும் சளி ஆகியவற்றை வெளியேற்ற உதவும் மருந்துகளும் இதில் தயாரிக்கிறார்கள்.

7. உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வலிகள் (ANALGESIC), சுளுக்கு, மூட்டு வலி, தசைவலி, தலைவலி, சைனஸ் தொடர்பாக ஏற்படும் வலிகள், காது வலி, ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

8. எப்போதெல்லாம் பலவீனமாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு சக்தியும் ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய டானிக்காகவும் இது செயல்படும்.

9. நமது உடல் சருமத்தினை பாதுகாக்கவும் பராமரிக்கவும் மேம்படுத்தவும் செய்யும் அத்தோடு உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் கட்டிகள் கொப்புளங்கள், மற்றும் இளமையிலேயே தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வயதான தோற்றம், ஆகியவற்றையும் குணப்படுத்தும் மாயாஜால சக்தியும் (BALSAMIC / CICCATRIZANT) இதில் உள்ளது.

10. அதுமட்டுமல்ல நமது மனம், உடல், ஆத்மசக்தி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அபூர்வமான சக்தி உடைய மரம் என்றும் சொல்லுகிறார்கள்.

11. பிரமிடுகளில் வைக்கும் சடலங்களை பதப்படுத்துவது உட்பட பலவிதமான சிகிச்சைகளுக்கு எகிப்து நாட்டுக்கார்ர்கள் இந்த மரத்தை வெகுகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

12. மூளையை அமைதி படுத்தவும் உடலுக்கு ஓய்வு அளிக்கவும் உதவுகிறது அரோமா தெரபி என்கிறார்கள்.

13. சில வருஷங்களுக்கு முன்னால் இந்த அரோமா தெரபி கேரளாவில் பிரபலமாக இருந்தது. இப்போதும் பிரபலம் தான்.  

14. ஆனால் இப்போது நிறைய மருத்துவமனைகளில் தமிழ்நாட்டிலேயே வந்துவிட்டது.

15. அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னால் நான் மலேசியா நாட்டிற்கு போயிருந்தேன். 

 

16.அங்கு நாங்கள் ஒரு மசாஜ் கிளப்புக்கு என்னை அழைத்து சென்றார்கள். என்னைத் தவிர எல்லோரும் அங்கு மசாஜ் செய்து கொண்டார்கள்.

 17.மசாஜ் என்றால் குப்புற படுக்க வைத்து ஏறி மிதிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு பயந்து கொண்டு தான் நான் மசாஜ் என்றதும், மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

18.இன்னொரு முக்கியமான அங்கு மசாஜ் செய்தவர்கள் எல்லோருமே பெண்கள்.

19.அதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு விபத்தில் அடிபட்டு இரண்டு மூன்று எலும்புகள் முறிந்து போய்,  அவை அப்போதுதான் கொஞ்ச நாட்களாக சரியாகி இருந்தது. என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

20.இப்போது அதற்கு அரோமா தெரபி என்ற சிகிச்சைக்கு நறுமண எண்ணெய் சிகிச்சை என்று அழகான தமிழில் சொல்லுகிறார்கள்.

21.பரவி இருக்கும் இடங்கள்:

கிழக்கு இந்தோனேசியா, பப்புவா நியூகினியா, சாலமன் ஐலேண்ட்ஸ் மற்றும் வாநாட்டு.

22.இந்த மரங்கள் இந்தியாவில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் குறைவான அளவு பரவி இருக்கும் எனத் தெரிகிறது.

உங்கள் யாராவது இந்த அரோமாதெரப்பி மசாஜ் பண்ணிக்கொண்ட அனுபவம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...