Friday, August 4, 2023

DEVIL TREE OF THAILAND IS INDIA’S HERB 296.உறப்பு பிசின் மரம் தாய்லாந்து நாட்டின் பேய்மரம்

தாய்லாந்தின் பேய்மரம்
உறப்பு பிசின் மரம்
 
உறப்பு பிசின் மரம்

2. உரப்பு பிசின் மரம் இந்தியா பங்களாதேஷ் மலேசியா மியான்மர் தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவி இருக்கும், உயரமான பெரிய மரம், உறுதியான வலுவான மரம். இந்த மரம் பற்றிய மயிர் கூச்செறியும் செய்தி ஒன்றை நான் சொல்லுகிறேன் இது தாய்லாந்து நாட்டின் பேய் மரம்.

3. தாவரவியல் பெயர்: ஹாப்பியா ஓடரோட்டா (HOPEA ODORATA)

தாவர குடும்பம்:டிப்டிரோகார்ப்பேசி  (DIPTEROCARPACEAE)

4. இந்த றப்பு பிசின் மரம் 45 மீட்டர் உயரமும், அடிமரம் 4 1/2 மீட்டர் குறுக்களவும் கொண்டதாக இருக்கும். இந்த மரம் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், பூஜ்ஜியம் முதல் 600 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் காடுகளில் காணப்படுகின்றன.

5. மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் தீவுகளில் நிழலுக்காக இந்த மரங்களை வளர்க்கிறார்கள். இதன் மரக்கட்டைகளும் உறுதியானவை மற்றும் தரமானவை.

6. நாங் டா கியான் (NANG TA-KHIYAN)என்பது தாய்லாந்து நாட்டின் ஒரு பெண் பேய். இந்த பேய்களுக்கு பிடித்தமான மரம் இதுதான். இந்த மரங்கள் தான் தாய்லாந்தில் இருக்கும் பெரிய மரங்கள். இந்த நாங் டா கியான் பெண் பேய்கள் இந்த மரங்களில் தான் வசிக்கின்றன.

7. இந்த பேயின் பெயரைத் தான் தாய்லாந்து நாட்டில்,ந் மரத்தின் பெயராக்ச் சொல்லுகிறார்கள். தாய்லாந்து நாட்டில் யாரும் தங்கள் வீடுகளுக்கு அருகில் இந்த மரங்களை நடமாட்டார்கள்

8. ஆனால் இந்த பேய்கள் நல்லவர்கள் யாரையும் எதுவும் செய்யாது. பொய்யும் புனை சுருட்டும் செய்பவர்களை அது போட்டு தள்ளிவிடும், சும்மா விடாது என்றும் சொல்லுகிறார்கள். நம்ம ஊரில் இந்த மரங்களை கொஞ்சம் கூடுதலாக நடலாம் என்று நினைக்கிறேன்.

9. மரக்கட்டைக்காக அல்லது வேறு வியாபார ரீதியாக இந்த மரங்களை வெட்டுபவர்களை, இந்த பேய் சும்மா விடாது. ஆனால் புத்தரின் ஆலயங்கள் கட்டுவதற்காக வெட்டுபவர்களை இது ஒன்றும் செய்வதில்லை. எவ்வளவு அறிவு உள்ள பேய்கள் இவை.  நாட்டில் நல்ல பேய்களும் இருக்கத்தான் செய்கின்றன.

10. இந்த மாதிரி பேய்களை கொஞ்சம் நம்ம நாட்டிலும் அறிமுகப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். தாய்லாந்து நாட்டில் பல பகுதிகளில்  இந்த மரங்களை கடவுளாக வணங்குகிறார்கள். ஒருபுறம் இதனை பேய் என்று சொன்னாலும் இதனை மரங்களின் தேவதை என்று சொல்லி அவர்கள் வழிபடுகிறார்கள்.

11. தாய்லாந்து நாட்டில் பல இடங்களில் இந்த இந்த மரங்களின் தேவதைக்கு கோயில்கள் கூட கட்டி இருக்கிறார்கள். பல பெரிய கோயில்களில் இந்த மர தேவதைக்காக தனியாக சிறப்பாக ஒரு இடத்தை கூட ஒதுக்கி தந்துள்ளார்கள்.

12. தாய்லாந்து நாட்டில் இந்த மரத்தின் பெயரால் டாக் கியான் (DAK KHIYAN)என்ற தலைப்பில் ஒரு சினிமாவை எடுத்து உள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் இது எவ்வளவு பிரபலமான மர தேவதை என்று பாருங்கள்.

13. நெசவு தொழிற்சாலைகளில் உருளைகள், மற்றும் பாலங்கள் போன்ற பெரிய வேலைகளுக்குத் தேவையான மரங்களை தருகிறது இந்த டாக்கியான் மரங்கள்.

14. இந்த மரங்களின் பட்டைகளில் அதிக அளவு டானின் சத்து இருப்பதால் இதனை தோல் பதனிட பயன்படுத்தலாம். இதிலிருந்து சராசரியாக தரமுள்ள வார்னீஷ் ஒன்றையும் தயார் செய்கிறார்கள்.

16. இதன் பட்டைகளை இந்தோ சைனாவில் இருப்பவர்கள் பாக்குக்கு பதிலாக (MASTICATORY)பயன்படுத்துகிறார்கள். பங்களாதேஷ் பர்மா லாவோஸ் தெற்குவியட்நாம் கம்போடியா தாய்லாந்து அந்தமான் தீவுகள் மற்றும் மலேசியா திருவிழா இடங்களில் இந்த மரம் பரவலாக பரவியுள்ளது.

17. மரங்கள் நடுத்தரமான மற்றும் பெரிய மரங்களாக வளரும், அதிகபட்சமாக 45 மீட்டர் வரை உயரமாக வளரும். அடிமரம் 120 சென்டிமீட்டர் அளவுக்கு குறுக்களவு கொண்டவர்களாக இருக்கும்.

18.பட்டைகள் செதில்களாக, அடர்த்தியான காவி நிறமாக இருக்கும். தடிமனாகவும் இருக்கும்.ட்புறமாக இருக்கும் பட்டைகள் மங்கலான மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகள் நீவட்டமாக, ஈட்டி முனை போல ஏழு முதல் 14  செ.மீ. நீளமாக கிட்டத்தட்ட அரை அடி நீளம் இருக்கும்.

19. பழங்கள் ரோமங்கள் மேல் இல்லாமல் மொழுமொழு வென இருக்கும். கொட்டைகள் ஒரு சென்டிமீட்டர் நீளம் இருக்கும். ஒரு பழத்தில் ஒரு கொட்டை தான் இருக்கும். ஒவ்வொரு விதையிலிருந்தும் நான்கு செடிகள் கூட முளைக்கும்.

20. இப்படி ஒரு விதையில் பல செடிகள் முளைக்கும் என்றால் அதனை பாலி எம்பிராயானிக்(POLY EMBRYONIC) என்று சொல்லுகிறார்கள்.

21. தீபகற்ப மலேசியாவில் இந்த ரங்கள் மிகவும் பிரபலம். காரணம் இதனை அதிக அளவில் பரவலாக நட்டிருக்கிறார்கள். குறிப்பாக சாலை ஓரங்களில் எல்லாம் இந்த மரங்கள் தான் அதிகம் இருக்கின்றன.

22.உறுதியான மற்றும் பல ஆண்டுகள் உழைக்கும் மரம் என்பதால் இதனை படகுகள் மற்றும் கேனோ என்று சொல்லப்படும் ஒருமரப்படகுகள் செய்யவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...