Thursday, August 17, 2023

CANNON BALL MANGROVE ANTI TSUNAMI TREE 309. கண்டலங்காய் மரம் சுனாமி எதிர்ப்பு அலையாத்தி

 

 சுனாமி எதிர்ப்பு அலையாத்தி
கண்டலங்காய் மரம்


கண்டலங்காய் மரம்  அலையாத்தி மரம், சர்வதேச அளவில் பரவியிருக்கும் மரம், படகுகள் செய்ய உதவும், வீடுகள் மற்றும் இதர கட்டிடங்கள் கட்ட பயன்படும்,  ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா தீவுகளில் அதிகம் பரவியுள்ளது, இதன் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை, இதன் பழக்கசாயம் பால் உணர்வுத் தூண்டியாக பயன்படுத்துகிறார்கள், இதில் அடர்சிவப்புநிற சாயம் எடுக்கிறார்கள், விதை எண்ணை கூந்தல் தைலமாகவும் ஏரி பொருளாகவும் பயன்படுகிறது, மொத்த்த்தில் இது சகல கலா வல்லமை கொண்ட ஒரு சுனாமி எதிர்ப்பு அலையாத்தி மரம்.

1. கேனான்பால் மேங்ரோவ் தமிழில் கண்டலங்காய் மரம் என்று சொல்லும் அலையாத்தி மரம், ஆப்பிரிக்கா ஆசியா ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் பரவி இருக்கும் மரம், இதன் பழங்கள் பீரங்கிகுண்டுகள் மாதிரி உருண்டையாக பெரிதாக இருப்பதால் இதனை கேனான்பால் மேங்ரோவ் என்று சொல்லுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

2. தாவரவியல் பெயர்: கரப்பா ஒவோவேட்டா (CARAPA OBOVATA/ XYLOCARPUS GRANATUM)

தாவரக் குடும்பம்: மீலியேசி (MELIACEAE)

3. சிறிய மற்றும் நடுத்தரமான இந்த மரங்கள், 12 மீட்டர் உயரம் வரை வளரும் மரத்தின் அடிமரம் பருத்து காணப்படும்.

4. பயன்கள்

இதன் மரங்கள் உறுதியானவை வலுவானவை நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மை உடையவை.

5. இந்த கண்டலங்காய் மரங்கள் படகுகள் செய்ய உதவும், வீடுகள் மற்றும் இதர கட்டிடங்கள் கட்ட பயன்படும்.

6. பொது பெயர்கள்:

கேனன்பால் மேங்குரோவ்,

செடார் மாங்குரோவ்,

பஸ்ஸில் நட் ட்ரி

(CANNONBALL MANGROVE, CEDAR MANGROVE, PUZZLENUT TREE)

7. பரவி இருக்கும் இடங்கள்

இந்த அலையாத்தி மரவகையான கண்டலங்காய் மரங்கள் ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா தீவுகளில் அதிகம் பரவியுள்ளது.

8. பூக்கள் தனித்தனியானவை, பூக்கள் 8 மில்லி மீட்டர் அகலம் கொண்டவை, பூக்கள் இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கும்.

9. பகல் நேர வெப்பநிலை 22 முதல் 30 டிகிரி சென்டி கிரேட் வரை உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் நன்கு வளரும்.

10. மணற்பாங்கான மண் கண்டத்திலிருந்து களிமண் பாங்கான மண்கண்டம், வரையான பலவிதமான மண்ணிலும் நன்கு வளரும்.

11. கார அமில  நிலை 6.5  முதல் 7.5 வரை உள்ள நிலங்களில் கண்டங்காய் மரங்கள் பிரச்சனை இன்றி வளரும்.

12. மருத்துவ குணம் கொண்ட பழங்கள், மார்பக வீக்கம் மற்றும் யானைக்கால் நோயினை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டவை.

13. இதன் பழங்களில் தயாரித்த கசாயத்தை பால் உணர்வுத் தூண்டியாக பயன்படுத்துகிறார்கள், இந்த பழங்களின் தோலினை உலர்த்தி பொடியாக்கி அதனை பசித் தூண்டியாக உபயோகப்படுத்துகிறார்கள்.

14. துவர்ப்பு தன்மை கொண்ட இதன் பட்டைகள் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான பலவிதமான பிரச்சனைகளையும் தீர்க்க பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டைகளை காய்ச்சலுக்கான மருந்தாகவும் உபயோகப்படுத்துகிறார்கள்.

15. இதன் விதைகளைப் பொடித்து அதனை தோலில் ஏற்படும் அரிப்பினை கட்டுப்படுத்த பயன்படுத்துகிறார்கள்,  மரத்தின் பட்டைகளில் டானின் சத்து 20 முதல் 34 சதவீதம் வரை உள்ளது. இதனைப் பயன்படுத்தி தண்ணீரில் பயன்படுத்தும் கயிறுகளை பலப்படுத்துகிறார்கள். இதில் அடர்சிவப்புநிற சாயம் எடுக்கிறார்கள்.

16. இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணை கூந்தல் தைலமாகவும் ஏரி பொருளாகவும் பயன்படுகிறது. இதன் மரக்கட்டைகளின் வயிரப்பகுதி செம்பழுப்பு நிறமாக இருக்கும். மரக்கட்டைகள் கடினமானவை, மிதமான கனமானவை, வலிமையானவை, நீடித்து உழைக்கக் கூடியவை, இந்த மரத்தில் வேலை பார்ப்பது எளிது, ஏறத்தாழ மகோகனி மரம் போல இருக்கும்.

17. புதிய கன்றுகளை உருவாக்க புதிதாக சேகரித்த விதைகளை விதைக்கலாம் புதிய விதைகள் 70 சதம் வரை முளைக்கும். நான்கு முதல் பத்து வாரங்களில் விதைகள் முளைக்க தொடங்கும்.

18. கென்யா, தான்சானியா, மொசாம்பிக், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, மற்றும் பப்புவா நியூகுனியா ஆகிய இடங்களில் கண்டலங்காய் மரம் பரவியுள்ளன.

19. இந்த மரங்கள் 0,1 முதல் 3 % வரை உப்பு தன்மையைத் தாங்கும் தன்மை உடையவை.

20. உள்ளூரில் தோல் பதனிடும் தொழில் கூடங்கள் வைத்திருப்பவர்கள், இந்த மரங்களின் பட்டைகளை றித்துக்கொண்டு போய்விடுவார்கள். அந்த பட்டல்களை தோல் பதனிட அவர்கள் பயன்படுத்துவார்கள். பட்டைகள் உறித்த குறுகிய காலத்திலேயே மீண்டும் இந்த மரங்கள் புதிய பட்டையை உருவாக்கிக்கொள்ளும்.

21.அன்பிற்குரிய நண்பர்களே, ண்டலங்காய்மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா ? இருந்தால் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். மீண்டும் அடுத்த சந்திப்பில் பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...