Thursday, August 10, 2023

BUDDHA BELLY BAMBOO BRINGS PROSPERITY 302. புத்தர்தொப்பைமூங்கில் அதிர்ஷ்ட மரம்


அதிர்ஷ்டம் கொண்டு வரும்
புத்தர்தொப்பைமூங்கில்  


BUDDHA BELLY BAMBOO
BRINGS PROSPERITY

1. கேள்விப்பட்டிருக்கிறீர்களா இப்படி ஒரு மூங்கில் மரம் ? புத்தா பெல்லி பாம்பு, அதாவது புத்தரின் தொப்பை மூங்கில் கையடக்கமான மூங்கில் மரம். இதன் கணக்களை உற்றுப் பாருங்கள். ருத்துத் திரண்ட தொப்பை தெரியும். நீளம் குறைந்த கணுக்கள், அடர்த்தியான பச்சை நிற மரங்கள்.

2. தாவரவியல் பெயர்:  பாம்புசா வாமின் சிச்சார்ட்  (BAMBUSA WAMIN SICHARD)

தாவர குடும்பம்: போவேசி (POACEAE)

3. மரங்கள் அதிகபட்சமாக 2.5 மீட்டர் உயரம் வளரும். குறுக்களவு 2.7 சென்டிமீட்டர் இருக்கும். பல அடிமரங்களுடன் குத்தாக வளரும்மரங்கள் அடர்த்தியான பளபளப்பான பச்சை நிறத்தில் இருக்கும். (CLUMPING).

4. மரங்களின் இரு கணுக்களுக்கு இடையே உள்ள  நீளம் 10 முதல் 15 சென்டிமீட்டர் ப்பியது போல இருக்கும். இலைகள் 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும். 20 முதல் 30 மில்லி மீட்டர் அகலமாகவும் இருக்கும்.

5. ஏற்ற தட்பவெப்ப சூழல், வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல சூழல்களில் நன்கு வளரும். முழு நாளும் சூரிய ஒளி கிடைத்தால் நல்லது.. கணிசமான அளவு பகுதி நேரமாவது நேரடி சூரிய ஒளி கிடைத்தால், இதன் சீரான வளர்ச்சிக்கு அது உதவும்.

6. மண்வளம், இந்த வகை மூங்கில் வளர முக்கியமாக வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடான மண் மற்றும் வண்டல் மண் தன்மை இதற்கு ஏற்றது.

7. பயன்கள், அழகு மரமாக தோட்டங்களில் வளர்க்கலாம். உயிர் வேலிகள் அமைக்கலாம். மண்ரிப்பை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். முக்கியமாக கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்  தயாரிக்க இது மிகவும் ஏற்புடைய மரம்.

8. தாயகம், அனேகமாக இந்த புத்தர்தொப்பைமூங்கில் ரகம் சீனா அல்லது தாய்லாந்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்கிறார்கள்.

9. பொதுவாக மூங்கில் மரம்தான் உலகில் வேகமாக வளரும் மரம். அதனால் இந்த புத்தர்தொப்பைமூங்கில் ஓர் ஆண்டில் மூன்று முதல் நான்கு அடி உயரம் வளர்கிறது. இது முழுவதுமாக வளர மூன்று முதல் நான்கு ஆண்டுகளாகும்.

10. புத்தர்தொப்பைமூங்கில் இயல்பான சூழலில் 40 முதல் 55 அடி உயரம் வளரும். இந்த மரங்கள் அதன் கிளைகளுடன் 30 முதல் 40 அடி அகலத்திற்கு பந்து வளரும்.

11. அதிர்ஷ்ட மூங்கில்களை வீடுகளில் வியாபார நிறுவனங்களில் நுழைவு வாயிலில் புத்தர்தொப்பைமூங்கில்  வளர்ப்பது நல்ல வளத்தையும், நலத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது.

12. உலகிலேயே மிகவும் அழகான மூங்கில் என்பது இந்த புத்தர்தொப்பைமூங்கில் தான். இதனை மிகவும் சுலபமாக வீடுகளில் வளர்க்கலாம். ..

13. மூங்கில் முளை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உணவாக இருந்து வருகிறது. மூங்கில் மரங்களின் இளம் தண்டுகளை உணவாக சமைத்து சாப்பிடும் பழக்கம், ஆசிய நாடுகள் அனைத்திலும் உள்ளன. அப்படி புத்தர்தொப்பைமூங்கில் இளம் தண்டுகளையும் சமைத்து சாப்பிடலாம்.

14. பண்ணை கருவிகள், நெசவு செய்வதற்கான கருவிகள், வீடுகளில் பயன்படுத்தும் தட்டுமுட்டு சாமான்கள், மேஜை நாற்காலிகள், ஆகியவற்றைச் செய்ய உதவுகிறது.

அன்பின் இனிய நண்பர்களே உங்கள் வீடுகளில் யாராவது புத்தர் மூங்கில் வளர்த்து வந்தால் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்! புத்தர்தொப்பைமூங்கில் அதிர்ஷ்டமா ?

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...