Tuesday, August 22, 2023

BEST WISHES TO CHANDRAOYAN 3 சந்திராயன் மூன்று நிலாக்கால கனவுகள்

 

சந்திராயன் மூன்று 

இப்படி நிலவில் ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை எனில் இன்னும் நான் நிலவில் வடை சுடும் பாட்டியின் முகம் என்றைக்கு தெளிவாகத் தெரியும் என்று நிலாவை பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஒரு சமயம் அந்தப் பாட்டி வேறு யாரும் இல்லை அவ்வயார் என்றும் சொல்லி வைத்தார்கள், ரொம்ப நாள் அதையும் நான் நம்பிக்கொண்டிருந்தேன்.

அதுசரி வானம் நமக்கு எட்டாத உயரத்துக்குப் போனது என்று தெரியுமா ? ஒரு காலத்தில் வானம் ரொம்ப கீழவே இருந்தது, அப்போது மோர் விற்கும் ஒரு பாட்டியின் குடத்தை வானம் தட்டிவிட, அந்த மோர்குடம் கீழே விழுந்து உடைந்துவிட்டது.  அன்று அந்த பாட்டி கொடுத்த சாபம்தான் வானம் எட்டாத உயரத்தில் போய்விட்டது.

 1. நிலவின் ஆய்வுக்காக இந்தியா தொடங்கி இருக்கும் ஆய்வு திட்டத்தின் பெயர் தான் சந்திராயன் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நிலவின் தென் பகுதிக்கு ஏவி இருக்கும் விண்கலம் தான் சந்திராயன். 3.

2. இந்த நிமிடத்தில் இந்த வினாடியில் நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி விண்கலம் சந்திராயன் 3, இன்று (23.08.2023) மாலை 06. 04 மணிக்கு, நிலவின் தென்பகுதியில் சந்திராயன் 3,  வெற்றி பெற உங்கள் சார்பிலும் என்னுடைய சார்பிலும் வாழ்த்துக்களைச் சொல்லி இந்த பதிவினைத் தொடங்குகிறேன்.

3. மரங்கள் பற்றி மட்டும்தான் நீங்கள் எழுதுவீர்களா? இந்த நிமிடத்தில் இந்த வினாடியில் நிலவைச் சுற்றி வரும் சந்திராயன் 3 பற்றி ஒரு மூன்று செய்திகளையாவது எழுதுங்களேன், என்று சில நண்பர்கள் கேட்டதனால்

ந்தப் பதிவு செய்து உள்ளேன். 

4.சந்திராயன் 3,   நிலவில் தரையிறங்கிய பின்னால் அது 14 நாட்கள் அங்கிருந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று "இஸ்ரோ" விஞ்ஞானிகள் அதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். இஸ்ரோ என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INDIAN SPACE RESEARCH STATION) என்று அர்த்தம்.

5. சந்திராயன் 3 விண்வெளி கலனின் மொத்த எடை 3900 கிலோ. இதன் செலுத்து பெட்டகத்தின் எடை 2148 கிலோ. 

6. இதுதான் தரை இறங்கி (LANDER)மற்றும் தரை ஊர்தி (ROVER) என்ற பாகங்களை சுமந்து செல்லும் விண்கலம்.

7. சந்திராயன் 3, தரையிறங்கியின் எடை 1752 கிலோ, இதற்கு விக்ரம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

 8. இதன் மூன்றாவது முக்கியமான பகுதி, தரை ஊர்தி இதனை ரோவர் (ROVER) என்று சொல்லுகிறார்கள். இதன் எடை வெறும் 26கிலோ தான். 

9.சந்திராயன் 3.  விண்கலத்தில், நிலவில் இறங்கும் பகுதிக்கு தரை இறங்கி என்று பெயர், தைத்தான் ஆங்கிலத்தில் லேண்டெர் (LANDER) என்று சொல்லுகிறார்கள்.

10.சந்திராயன் மூன்று விண்கலம் 14.07.23 அன்று பிற்பகல் 7 35 மணிக்கு சதீஷ் தான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. 

11.இந்த விண்கலம் திட்டப்படி 23ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு  தரை இறங்க உள்ளது.

12. இதற்கு முன் அனுப்பிய சந்திரயான் 2 திட்டமிட்டபடி நிலாவின் மேல் இறங்க முடியாததற்கு காரணம் மென்மையாக தரையிறங்கும் தொழில்நுட்பம் (SOFT LANDING TECHNIQUE) அதில் சரி வர கையாளப்படவில்லை என்கிறார்கள்.

13.ஆனால் இந்த சந்திரியான் 3 ல் இந்த மென்மையாக தரை இறங்கும் தொழில்நுட்பம் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

14.இப்போது நிலாவில் தரையிறங்கும் போது நிலாவுக்கும் நோகாமல் தரை இறங்கும் விக்ரமிற்கும் நோகாமல் இறங்க  மிகவும் எச்சரிக்கையாக இதனை வடிவமைத்து உள்ளார்கள். 

15. சந்திரனின் தென்பகுதி மலைகளாகவும், மடுக்களாகவும், மலிந்துள்ள பகுதி என்கிறார்கள்.  இந்த மலைகள் மற்றும் குழிகள் 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை கூட இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

16.அப்படிப்பட்ட இரண்டு குழிப்பள்ளங்களுக்கு இடையேதான் இந்த சந்திராயன் மூன்று இறங்குவதற்கு திட்டமிட்டு தந்துள்ளார்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள்.

17.அதில் ஒரு குழியின் பெயர் மான்கினசு இன்னொன்றின் பெயர் சிம்பேலியசு.

18.இந்த இரண்டு குழிகளுக்கு இடையே இறங்க சாத்தியம் இல்லை என்றால் வேறு மாற்று இடங்களை அதுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாம். அதற்குத் தகுந்தாற்போல அதனை வடிவமைத்து உள்ளார்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள்.  

19.சந்திராயன் இரண்டுக்கும் சந்திராயன் மூன்றுக்கும் இடையே உள்ள பிரதான மற்றும் முக்கியமான வித்தியாசம் மென் தரை இறங்கும் (SOFT LANDING TECHNIQUE)தொழில்நுட்ப வசதி தான்.

20.சந்திராயன் மூன்றில் உள்ள முக்கியமான பகுதி எது தெரியுமா? இதன் தரை ஊர்தி தான், அதில் இருக்கும் மொபைல் லேபரட்டரி, அதாவது நடமாடும் பரிசோதனை மையம் அல்லது நடமாடும் ஆராய்ச்சி நிலையம். இதன் எடை வெறும் 26 கிலோ மட்டுமே, இதன் பெயர்தான் பிகியான்.

30. பிரகியான் ஒரு செவ்வக வடிவில் ஒரு பெட்டி மாதிரி இருக்கும், அந்த பெட்டியின் அடிப்பகுதியில் ஆறு சக்கரங்கள் இருக்கும்.

31.இந்தப் பிகியான் நிலவில் அங்குமிங்கும் நடமாடி, அங்கு கல் இருக்கிறதா ? மண் இருக்கிறதா? நீர் இருக்கிறதா ? எப்படிப்பட்ட மண் ? எப்படிப்பட்ட நீர் ? என்று இவற்றின் பவுதீக குணங்களையும் ரசாயன குணங்களையும் ஆய்வு செய்து அந்தத் தகவல்களை நமக்கு அனுப்பி வைக்கும், நமக்கு. என்றால் இஸ்ரோவுக்கு.

32.சந்திராயன் மூன்று பற்றி பேசும்போது நாம் சந்திராயன்  ஒன்று மற்றும் இரண்டு பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். 

33.சந்திராயன் ஒன்று என்பது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் அனுப்பப்பட்ட ஆளில்லாத நிலா பயண கலம்.

34.இதனை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தாவன் விண்வெளி மையம், விண்ணில் ஏவியது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

35.சந்திராயன் ஒன்றின் பணி இரண்டு ஆண்டுகள் பணி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பதிலாக அது 312 நாட்களுக்கு பின்னால் மக்கார் பண்ணியது.

36.ஆனால் நிலாவில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகிற்கு தெரிவித்த பெருமை சந்திராயன் ஒன்றைத்தான் சேரும் என்கிறார்கள். 

37. சந்திராயன் 2 , 2019 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவியது  சதீஷ் தவான் விண்வெளி மையம். 

38. இது  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் விழுந்து நொறுங்கியது. சாப்ட் லேண்டிங் என்ற தொழில்நுட்பம்” (SOFT LANDING TECHNOLOGY) சரிவர அதில் கையாளப்படவில்லை என்று சொன்னது இஸ்ரோ. 

39. ஆனால் சந்திராயன் 2 ல் பயன்படுத்தப்பட்ட  ஆர்பிட்டர் இன்னும் உயிரோடு உள்ளது என்றும், சொல்லப்போனால் அந்த ஆர்பிட்டர், சந்திராயன் மூன்றின் வெற்றிக்கும் உதவியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள்.

40.உலக அளவில் ரஷ்யாவும் இந்தியாவும் நிலவு ஆராய்ச்சியில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும் என்றுதான்  நாம் விரும்பினோம்.

41.ஆனால் லூனார் 25 ன் நடவடிக்கை என்பது, எனக்கு முயல் ஆமை போட்டி மாதிரி தெரிந்தது.

ஆனால் இன்று இப்போது ஆமை மாதிரி பின்னால் இருந்தாலும், இந்தியா வெற்றி அடைய வேண்டும், நிலாவின் தென் பகுதியை துருவித் துருவி ஆராய வேண்டும், என்று நானும் விரும்புகிறேன், நீங்களும் விரும்புவீர்கள் ! உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள் ! நானும் வேண்டிக்கொள்ளுகிறேன். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...