Saturday, August 26, 2023

BASATARD SANDAL SOUTH INDIAN TREE HERB 318.காட்டுசந்தனம் என்னும் செம்புளிச்சான் ஒரு மூலிகை மரம்

காட்டுசந்தனம் என்னும்
செம்புளிச்சான் 

BASATARD SANDAL 
SOUTH INDIAN TREE HERB

காட்டு சந்தனம் என்று சொல்லப்படும் இந்த மரத்தின் உள்ளூர் பெயர் செம்புளிச்சான், தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவிற்கு சொந்தமானது

1.தாவரவியல் பெயர்: எரித்ராக்சைலான் மானோகைனம் (ERYTHROXYLON MONOGYNUM)

இதன் பொதுப் பெயர்கள், பாஸ்டர்டுசாண்டல் மற்றும் ரெட்செடார் என்பவை.

(BASATARD SANDAL, REDCEDAR).

2. காட்டு சந்தனம் என்று சொல்லப்படும் இந்த மரம் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவிற்கு சொந்தமானது, இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இது தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம்.

3.வெப்ப மண்டல பகுதிக்கு ஏற்புடைய இந்த காட்டுசந்தனமரம் அதிகபட்சமாக 7 மீட்டர் உயரம் வரை வளரும், சில சமயங்களில், இதைவிட கூடுதலாகவும் வளருவதற்கு வாய்ப்பு உண்டு.

4.இதன் பூக்கள் சிறியவையாக இருக்கும், இரு பால் பூக்களாக இருக்கும், பூக்கள் வெண்மை நிறமாக இருக்கும், பூப்பதும் காய்ப்பதும் ஆண்டு முழுவதும் நடைபெறும்.

5.இந்த காட்டு சந்தன மரம் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு மருத்துவ பண்பு கொண்ட மூலிகை மரம், பல நோய்களை இதன் மூலம் குணப்படுத்த முடியும்..

6. உதாரணமாக வயிற்று வலி, காய்ச்சல் உடலில் ஏற்படும் நீர்வீக்கங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.

7.வயிற்று எரிச்சல், வயிற்று உப்பிசம், சாப்பிட்டவுடன் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுதல், குறைவாக சாப்பிட்டாலே வயிறு புடைக்க சாப்பிட்டது போன்ற உணவு ஏற்படுதல்,வற்றை தமிழில் குன்மம் என்றும் ஆங்கிலத்தில் டிஸ்பெப்சியா (DYSPEPSIA) என்றும் சொல்லுகிறார்கள், இது போன்ற உடல் உபாதைகளையும் இந்த காட்டு சந்தனம் குணப்படுத்தும். 

8.காட்டு சந்தன மரத்தின் இலைகள் பழங்கள் மற்றும் வேர்கள் இவற்றைப் பயன்படுத்தி சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் பல நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கிறது.

9.பல மொழி பெயர்கள்

தமிழ்:செம்புளிச்சான், தேவதரம், தாசதரம் (SEMBULICHAN, THEVADARAM, DASADARAM)

மலையாளம்: தேவதாரு (DEVADARU)

தெலுங்கு: பாரிபத்ரகாமு (PARIBHADRAKAMU) 

கன்னடம்: காந்தகிரி (GANDHAGIRI)

10.இந்த மரத்தின் பட்டைகள் ஆழ்ந்த காவி நிறமாக பருமனாக கடினமாக இருக்கும்.

11.இதனை சிவப்புசெடார் மரங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள், இந்த மரங்கள் கோதாவரி நதிக்கரையில் உள்ள காடுகளில் நிறைய இருப்பதாக சொல்லுகிறார்கள்.

12.இன்னொரு முக்கியமான செய்தி சந்தன மரங்களுக்கு பதிலாக இந்த மரங்களை பயன்படுத்துவதாக சொல்லுகிறார்கள், என்பது தான் அது.

13.சந்தன மரங்கள் விலை அதிகம். அதிகம் கிடைப்பதில்லை. அதனால்,பூஜை மற்றும் புனஸ்காரங்களில் சந்தன மரங்களுக்கு பதிலாக இந்த மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

14. காட்டு சந்தன மரங்களிலிருந்து இயற்கையான எண்ணெய் (ESSENTIAL OIL) எடுக்கிறார்கள், மரக்கட்டையில் இருந்து ஒரு வகையான மர எண்ணெய் (WOOD OIL) எடுக்கிறார்கள்.

15.காட்டு சந்தன மரங்கள் இந்தியா, ஸ்ரீலங்கா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பரவியுள்ளன.

16.இதன் இலைகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம், பழங்குடிகள் இதனை பஞ்சகால உணவு என்று சொல்லுகிறார்கள்.

17.இதன் இலைகளில் ஒரு வகையான ஆல்கலாய்டுகள் இருக்கின்றன, அதனால் இவை கசப்பாகவும் அதேசமயம் துவர்ப்பாகவும் இருக்கும், இது கோகோவின் சுவைக்கு இணையானது என்று சொல்லுகிறார்கள். அத்தோடு கொஞ்சம் இனிப்பு சேர்த்தால் அதுதான்சாக்லெட்என்கிறார்கள்.

18.இதன் மரக்கட்டையில் இருந்து ஒரு வகையான தார் மாதிரி ஒரு பொருளை எடுக்கிறார்கள், இதைப் பயன்படுத்தி படகுகள் போன்ற மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை  பாதுகாக்க இதனை பயன்படுத்துகிறார்கள்.

19.இதன் மரக்கட்டையில் இருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கிறார்கள், அற்புதமான இதன் வாசம் சந்தன எண்ணைக்கு சமமானது என்று சொல்கிறார்கள்.

20.இந்த மரத்தினை சந்தன மரத்திற்கு பதிலாக பயன்படுத்த முடியாது என்றும் சிலர் சொல்லுகிறார்கள். மரத்தின் நிறம் எடை மற்றும் வாசம் இது எதுவும் சந்தன மரம் போல இல்லை என்றும் அடித்து சொல்லுகிறார்கள் சிலர்.

21.இதன் விதைகளை பயன்படுத்தி புதிய கன்றுகளை சுலபமாக உருவாக்க முடியும்.

22.ரெட் செடார் என்றும் செம்புளிச்சான் என்றும் காட்டு சந்தனம் என்றும் சொல்லப்படும் இந்த மரத்தினை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? இந்த மரம் சந்தன மரம் போல இருக்கிறதா அதன் வாசம் எப்படி இருக்கிறது? அதன் கட்டை எப்படி இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா ? தெரிந்தால் சொல்லுங்களேன், நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

2 comments:

Malarmesai Bagavan said...

Super

Gnanasuriabahavan Devaraj said...

Dear Mr.Mayiilajana Bahavan,
Thank you so much for your comments, you can also write few sentences about the article.
GNANASURIA BAHAVAN D

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...