Saturday, August 19, 2023

AFRICAN LOCUST A GOOD FOOD & MEDICINE 311.அழகு பேட்மின்டன் பந்து மரம் உணவாகும் மருந்தாகும்

 

அழகு பேட்மின்டன் பந்து மரம் 

பேட்மின்டன் பந்து மரம் அழகான மேற்கு ஆப்பிரிக்க மரம், பெரிய மரங்களாக வளரும், இதன் பழங்களை, இலைகளை, விதைகளை சாப்பிடலாம், டிசம்பர் ஜனவரி மாதங்களில் இதன் பூக்களை மரங்களில் பார்க்கலாம்,இதன் பூக்கள் பிசிறில்லாத வட்ட வடிவமாக உருண்டையாக வெள்ளை வெளேர் என்று மின்சார பல்புகள் மாதிரி இருக்கும், இதன் பழங்களும் கொட்டைகளும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றவைகாரணம் இதனை உணவாகவும் மருந்தாகவும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தினை  ஏறத்தாழ எல்லா இந்திய மாநிலங்களிலும் நம்மால் பார்க்க முடியும், 

1. தாவரவியல் பெயர்:பார்க்கியா பிக் லேண்டுலோசா (PARKIA BIGLANDULOSA)

2. பொதுப் பெயர்கள்: பேட்மின்டன் பால் ட்ரீ, ஆப்பிரிக்கன் லோக்கஸ்ட் ட்ரீ, காங் ஸ்டிக் ட்ரீ (BATMINTON BALL TREE, AFRICAN LOCUST TREE, CONG STICK TREE)

3. பல மொழி பெயர்கள்

ஹிந்தி:செண்டுல்கா ஜார்(CHENDULKA JAR),

கன்னடா: சிவலிங்கடா மரா(SHIVALINGADA MARA)

மராத்தி: செண்டு பூல் (CHENDU PHUL) 

தமிழ்: பேட்மின்டன் பந்து மரம் (BATMINTON PANTHU MARAM)

4.பேட்மின்டன் பந்து மரம் மிக அழகான மேற்கு ஆப்பிரிக்க மரம், பெரிய மரங்களாக வளரும், இதன் பழங்களை சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை பூண்டு மாதிரி இருக்கும்.

5. சட்டென்று பார்த்தால்  இந்த மரம் மயில் கொன்றை மாதிரியும் ஜக்கரந்தா மரங்கள் மாதிரியும் இருக்கும்.

6.டிசம்பர் ஜனவரி மாதங்களில் பேட்மின்டன் பந்து மாதிரியான, இதன் பூக்களை மரங்களில் பார்க்கலாம்.

7. இந்த மரங்களை பெரும்பாலும் அழகுக்காக சாலை ஓரங்களில் நடுகிறார்கள்.

8.இதன் பூக்கள் பிசிறில்லாத வட்ட வடிவமாக உருண்டையாக வெள்ளை வெளேர் என்று மின்சார பல்புகள் மாதிரி இருக்கும்.

8.இதன் பூக்கள் இலைக் கணுக்களில் நீண்ட காம்புகளுடன் இருக்கும்.

9.சென்னையில் சாலைகளில் பல மரங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்ஆனால் நான் இதுவரை சென்னையில் ஒரு மரம் கூட  பார்க்கவில்லை. இனி உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.

10.இதனை ஆங்கிலத்தில் ஆப்பிரிக்கன் லோக்கஸ்ட் பீன் (AFRICAN LOCUST BEAN)என்று சொல்லுகிறார்கள், இது பல்லாண்டு வாழும் இலையுதிர் மரம்.

11.பல்வேறு விதமான மாறுபட்ட இயற்கை சூழ்நிலைகளில் இதனை வளர்க்கிறார்கள்.

12.முக்கியமாக இதன் பழத்தின் தசைக்காகவும் கொட்டைகளுக்காகவும் வளர்க்கிறார்கள்.

13.இதன் பழங்களும் கொட்டைகளும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றவை, காரணம் இதனை உணவாகவும் மருந்தாகவும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

14.இந்த மரம் எல்லா வகையான மண் தன்மையிலும் வளரும், நல்ல சூரிய ஒளி இதற்கு தேவை, குறைவான  நீர் போதுமானது, வறட்சியான நிலங்களிலும், மானாவாரி  பிரதேசங்களிலும், இது நன்கு வளரும்.

15.இந்த மரம் இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் இந்த மரத்தினை  ஏறத்தாழ எல்லா இந்திய மாநிலங்களிலும் நம்மால் பார்க்க முடியும்.

16.தமிழில் இதனை சாம்பிராணி மரம், கலிக்கி மரம், பூப்பந்து மரம்ஆப்பிரிக்க வெட்டுக்கிளி மரம் என்றும் சொல்லுகிறார்கள்.

17.இதன் இலைகள் விதைகள் பழங்கள் அனைத்தையும் சாப்பிடலாம், ஆப்பிரிக்காவில் இந்த மரங்கள் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை உணவாக பல வகைகளில்  உட்கொள்கிறார்கள்.

18.இதன் விதைகளை வறுத்து இடித்து தூளாக்கி காபி தூளுக்குப் பதிலாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பரவலாக பரவியிருக்கும் இந்த மரங்கள் உங்கள் ஊரில் தோட்டத்தில் வீட்டில் இருக்கிறதா இருந்தால் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்களேன் நன்றி, வணக்கம்.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

1 comment:

Ponnamuthan said...

We don't see this trees these days sir. This trees bring our early hood memories

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...