Thursday, August 31, 2023

TRUE MYRTLE A POPULAR HAIR TONIC TREE 323. குழிநாவல் பிரபல கூந்தல் தைல மரம்

 

குழிநாவல் பிரபல
கூந்தல் தைல மரம்
  


01. குழி நாவல் ஒரு முக்கியமான மூலிகை மற்றும் பழமரம், இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு சொந்தமான மரம், இது நாவல் பழத்தின் தாவர குடும்பம் மிர்ட்டேசி’ யைச் சேர்ந்தது, பழங்குடி மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்துவரும் ஒரு சிறிய மரம், ஆல்கஹாலுடன் சேர்த்து மது வகைகளையும் தயார் செய்ய உதவும் பழமரம், அதன் சிறப்பு சொல்வது என்றால் குழி நாவல், ஒரு கூந்தல் தைலமரம், இளம் வயது வழுக்கை தடுக்கும் மரம்.

02.தாவரவியல் பெயர்:மிர்ட்டஸ் கம்யூனிஸ் (MYRTUS COMMUNIS)

பொதுப் பெயர்கள்ட்ரூ மிர்ட்டில், காமன் மிர்ட்டில் (TRUE MYRTLE, COMMON MYRTLE)

03.பலமொழிப் பெயர்கள்

தமிழ்:சட்டீவம், குழி நாவல், சதேவம், தேவம், தேவமரம்.(SATIVAM, KUZHINAVAL, SADEVAM,DEVAM,DEVAMARAM)

பெங்காலி: சுட் சோவா(SUT SOVA) 

இந்தி: பரகாஷா (BARAGASHA) 

கன்னடா:  முறுகிலு கிடா (MURUGILU KIDA)

மராத்தி: ஃபிரங்கி மேத்தி (FRANGI METHY)

சமஸ்கிருதம்: காந்தமாலதி (GANTHA MALATI)

தெலுங்கு: சிட்டி ஜாமா (CHITTI JAMA)

உருது: ஆஸ் (AAS) 

04. தாயகம்: தெற்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிற்கு சொந்தமான மரம், மத்திய தரைக்கடல் நாடுகளில் பிரபலமான மூலிகை, பிரபலமான கூந்தல் தைல மரம் என்பது இதன் சிறப்பு.

05.குழி நாவல் ஒரு சிறு மரம் அல்லது குற்றுச்செடிமாறா பசுமை கொண்ட மரம். 6 மீட்டர் உயரம் வரை வளரும்,

06.இதன் இலைகள் மூன்று முதல் ஐந்து சென்டிமீட்டர் நீளமானவை, இவை மணம் தருகின்ற அத்தியாவசிய எண்ணையைத் (ESSENTIAL OIL)தருகின்றது.

07. இதன் பூக்கள் நட்சத்திர வடிவில் இருக்கும், பூ இதழ்கள் பெரும்பாலும் வெண்ணிறமாக இருக்கும். 

08. இதன் பழங்கள், உருண்டையாக வட்ட வடிவமாக இருக்கும்,  பழம் நிறைய விதைகள் இருக்கும், பழங்கள் நீலம் கலந்த கருமை நிறமாக இருக்கும்.

09. ஹிப்போக்ரிடஸ், பிளைனிடயோஸ்கொரிடஸ், காலன் ஆகிய பிரபலமான எழுத்தாளர்கள் இதன் பயன்கள் குறித்து, தங்கள் எழுத்துக்களில் குறிப்பிட்டு உள்ளார்கள்.  

10. அரேபிய எழுத்தாளர்களும் இதன் மரங்களின் பெருமைகள் பற்றி நிறைய எழுதியுள்ளார்கள்.

11. இதனை மிர்டில் ஹெர்ப் (MIRTLE HERB)என்று சொல்லுகிறார்கள்,  இதிலிருந்து தயாரிக்கப்படும் கூந்தல் தைலம் நீளமான கூந்தலுக்கு விரைவாக வழி செய்கிறது.

11.குழி நாவல் மரத்தைப் பயன்படுத்தி பலவிதமான, மருந்துகளை பழங்குடிகள் தயாரித்து, பயன்படுத்தி வருகிறார்கள். 

12.குடற்புண், சரும நோய்கள், நுரையீரல் தொடர்பான நோய்கள், மிகுதியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, ஆகிய நோய்களை கட்டுப்படுத்த இந்த மரத்தை பயன்படுத்தி இயற்கையான மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.

13. புற்றுநோய்கள், சக்கரை நோய், பாக்டீரியா வைரஸ் மற்றும் பூசங்களால் ஏற்படும் நோய்கள், ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மருத்துவ பண்புகள்,  இந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள், பட்டைகள், கொட்டைகள், வேர்கள் ஆகியவற்றில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

14.இப்படிப்பட்ட மருத்துவ பண்புகளை எல்லாம் தரக்கூடிய தாவர ரசாயனங்கள் இந்த மரங்களின் பல்வேறு பாகங்களில் நிறைந்துள்ளன. 

15. இந்த மரங்களின் இருக்கும் பல்வேறு தாவர ரசாயனங்கள், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் குறித்த ஆய்வுகளை ஆழமாக ஆராயும் போது பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் அற்புதமான இயற்கையான மருந்துகள் நமக்கு கிடைக்கும்.

16.மிர்ட்டில் எண்ணெய் நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க, தோல் தளர்வினை நீக்க, அதனை பளிச்சிடச் செய்ய, உபயோகமாகிறது.

17.மிர்டில் எண்ணெயை (MYRTLE OIL) தலையில் தடவி, மசாஜ் செய்தால் முடி கொட்டுவது நிற்கும், பொடுகுகள் போகும், தலையில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.

17. மயிர்கள் மெல்லியதாக இளைத்துப் போகாது. ஆரோக்கியமான கூந்தலுக்கும்  தலை முடிக்கும், அனுசரணையாக இருக்கும். தலையில் இளம் வயது வழுக்கை தலை காட்டாது.

18.சைனு சைட்டிஸ் (SINU SITIS) தலைக்கனமாக உணர்தல் தலைவலி கண் வலி மூக்கடைப்பு, மூச்குக்குழாய் அழற்சி,  ஆகியவை அத்தனையும் குணமாகும். 

19.மூச்சுக்குழாய் அழற்சி  என்பது,  கடுமையான இருமல், நுரையீரல் மற்றும் நுரையீரலுக்கு காற்றைக் கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் வீக்கம், இதனால் கெட்டிப்பட்ட சளி வெளியேறுதல் ஆகியவற்றைக்குறிக்கும்,  

20. பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூசணங்களால்  ஏற்படும் நோய்களை இதன் மூலம் தாயாரிக்கும் மருந்துகள் குணமாக்குகின்றன.

21. குழி நாவல் இலைகளில் செய்யும் மருந்துகளை கொண்டு ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம், கக்குவான் இருமல், எலும்புருக்கி நோய், வயிற்றுப்போக்கு, ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.

22.குழி நாவல் பழங்களை சாப்பிடலாம், பழங்கள் சிறிய சைஸ் ஜம்பு நாவல் பழங்களை போல நீள்வட்ட உருண்டையாக,  கருநீல நிறமாக இருக்கும். 

23. பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும், உலர்த்திய இலைகள் பூக்கள் மற்றும் பழங்களை உணவுப் பண்டங்களில் மணமூட்டியாக  பயன்படுத்துகிறார்கள்.

24. சில சமயங்களில் பிரியாணி இலைக்குப் பதிலாக இந்த குழி நாவல் இலைகளை பயன்படுத்துகிறார்கள். பறித்த புதிய  பூக்களை சாலடுகளில் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

25. சட்டென்று பார்க்க ப்ளூபெர்ரி போல இருக்கும், இந்த குழி நாவல் பழங்களின் பழத்தசை சிவப்பு அல்லது ஊதா நிறமாக இருக்கும் ப்ளூபெர்ரியின் பழத்தசை பசுமையாக இருக்கும்.

26.குழி நாவல் பழங்களை அறுவடை செய்ததும் சாப்பிட முடியாது, ஆனால் அவற்றை சமைத்து சாப்பிடலாம்.

27. குழிநாவல் பழங்களிலிருந்து மிர்ட்டோ மற்றும் கார்சிகா  என்னும் பானங்களை தயார் செய்கிறார்கள். 

28. இந்த பழங்களும் பானங்களும் கர்சீனா மற்றும் சாரிடினியா ஆகிய தீவுகளில் பிரபலமானவை.

குழி நாவல் பழ மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று சொல்லுங்கள்,அது பற்றிய உபயோகமான தகவல் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

 

Wednesday, August 30, 2023

ELEMI MASSAGE OIL TREE CHINESE OLIVE TREE 322. மசாஜ் செய்ய உதவும் காரை செங்காரி

 


காரைச் செங்காரி மிகவும் பெரிய பசுமை மாறா பன்னாட்டு மரம் ஏறத்தாழ 100 அடி உயரம் வரை வளரும் ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்தும் சக்தி படைத்த அற்புதமான மூலிகை மரம், இந்த மரத்திற்கு சர்வதேச அளவில் எலமி என்று பெயர், எலமி மரம் என்பதை விட எலமி எண்ணை  மிகவும் பிரபலமானது. இதன் பிசினில் இருந்து அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL)எடுக்கிறார்கள், .அதிலிருந்து நோய்களை குணப்படுத்தும் மருந்து வகைகள், அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள்,  பெயிண்ட் வார்னிஷ்  ஆகியவை தயாரிக்கவும், உணவு மணமூட்டியாகவும், மசாஜ் செய்யவும்  பயன்படுத்துகிறது.

1. தாவரவியல் பெயர் கனரியம் கம்யூன் (CANARIUM COMMUNE) 

தாவரக் குடும்பம்: பர்ஸரேசி (BURSERACEAE)

தாயகம்:மலேசியா, பபுவா நியூகினியா, இந்தோனேசியா

பொதுப் பெயர்கள்:

சைனீஸ் ஆலிவ் (CHINESE OLIVE TREE)

ஜாவா அல்மாண்ட் (JAWA ALOMOND)

பசிபிக் அல்மான்ட் (PACIFIC ALMOND)

கெனரியம் நெட் (CANARIUM NUT)

பீலிநெட் (PILI NUT)

ஜாவா அல்மான்ட் (JAWA ALMOND) 

கேனரி நெட்  (CANARY  NUT)

காலிப் நெட் (GALIP NUT)

நங்கை (NANGAI)

2. காரை செங்காரி என்று சொல்லப்படும் இந்த மரம் சர்வதேச அளவில் எலமி என்று அழைக்கிறார்கள். எலமி மரம் என்பதை விட எலமி எண்ணை  மிகவும் பிரபலமானது.

3. இதன் பிசினில் இருந்து அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL)எடுக்கிறார்கள் .அதிலிருந்து நோய்களை குணப்படுத்தும் மருந்து வகைகளும், அழகு சாதனப் பொருட்களும் (COSMETICS) வாசனை திரவியங்களும்(PERFUMES), பெயிண்ட் வார்னிஷ் தயாரிப்பிலும், உணவு மணமூட்டியாகவும் (FOOD FLAVOURING) பயன்படுத்துகிறார்கள்.

 

4. மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மயக்க உணர்வு (STRESS, NERVOUS TENSION, FATIGUE) ஆகியவற்றை குணப்படுத்த மருந்துகள் தயாரிக்க காரை செங்காரி உதவுகிறது.

 5. நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் தொற்று, சிறுநீரகங்கள்உணவு செரிமானம், உடல் சருமம், ஆகியவற்றில், பாக்டீரியா வைரஸ் மற்றும் பூசங்களால் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.

6. நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் இருக்கும் சளி ஆகியவற்றை வெளியேற்ற உதவும் மருந்துகளும் இதில் தயாரிக்கிறார்கள்.

7. உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வலிகள் (ANALGESIC), சுளுக்கு, மூட்டு வலி, தசைவலி, தலைவலி, சைனஸ் தொடர்பாக ஏற்படும் வலிகள், காது வலி, ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

8. எப்போதெல்லாம் பலவீனமாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு சக்தியும் ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய டானிக்காகவும் இது செயல்படும்.

9. நமது உடல் சருமத்தினை பாதுகாக்கவும் பராமரிக்கவும் மேம்படுத்தவும் செய்யும் அத்தோடு உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் கட்டிகள் கொப்புளங்கள், மற்றும் இளமையிலேயே தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வயதான தோற்றம், ஆகியவற்றையும் குணப்படுத்தும் மாயாஜால சக்தியும் (BALSAMIC / CICCATRIZANT) இதில் உள்ளது.

10. அதுமட்டுமல்ல நமது மனம், உடல், ஆத்மசக்தி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அபூர்வமான சக்தி உடைய மரம் என்றும் சொல்லுகிறார்கள்.

11. பிரமிடுகளில் வைக்கும் சடலங்களை பதப்படுத்துவது உட்பட பலவிதமான சிகிச்சைகளுக்கு எகிப்து நாட்டுக்கார்ர்கள் இந்த மரத்தை வெகுகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

12. மூளையை அமைதி படுத்தவும் உடலுக்கு ஓய்வு அளிக்கவும் உதவுகிறது அரோமா தெரபி என்கிறார்கள்.

13. சில வருஷங்களுக்கு முன்னால் இந்த அரோமா தெரபி கேரளாவில் பிரபலமாக இருந்தது. இப்போதும் பிரபலம் தான்.  

14. ஆனால் இப்போது நிறைய மருத்துவமனைகளில் தமிழ்நாட்டிலேயே வந்துவிட்டது.

15. அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னால் நான் மலேசியா நாட்டிற்கு போயிருந்தேன். 

 

16.அங்கு நாங்கள் ஒரு மசாஜ் கிளப்புக்கு என்னை அழைத்து சென்றார்கள். என்னைத் தவிர எல்லோரும் அங்கு மசாஜ் செய்து கொண்டார்கள்.

 17.மசாஜ் என்றால் குப்புற படுக்க வைத்து ஏறி மிதிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு பயந்து கொண்டு தான் நான் மசாஜ் என்றதும், மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

18.இன்னொரு முக்கியமான அங்கு மசாஜ் செய்தவர்கள் எல்லோருமே பெண்கள்.

19.அதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு விபத்தில் அடிபட்டு இரண்டு மூன்று எலும்புகள் முறிந்து போய்,  அவை அப்போதுதான் கொஞ்ச நாட்களாக சரியாகி இருந்தது. என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

20.இப்போது அதற்கு அரோமா தெரபி என்ற சிகிச்சைக்கு நறுமண எண்ணெய் சிகிச்சை என்று அழகான தமிழில் சொல்லுகிறார்கள்.

21.பரவி இருக்கும் இடங்கள்:

கிழக்கு இந்தோனேசியா, பப்புவா நியூகினியா, சாலமன் ஐலேண்ட்ஸ் மற்றும் வாநாட்டு.

22.இந்த மரங்கள் இந்தியாவில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் குறைவான அளவு பரவி இருக்கும் எனத் தெரிகிறது.

உங்கள் யாராவது இந்த அரோமாதெரப்பி மசாஜ் பண்ணிக்கொண்ட அனுபவம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

 

 

Tuesday, August 29, 2023

ENNAIMARAM TREE OF BIO-DIESEL 321.பயோடீசல் எண்ணெய்மரம்


பயோடீசல் எண்ணெய்மரம்

ENNAIMARAM
TREE OF BIO-DIESEL


எண்ணெய்மரம் எனும் இந்த மரம் அத்தியாவசிய எண்ணெய் (ESSENTIAL OIL) மற்றும் பயோடீசல் (BIO DIESEL)தயாரிக்க, வாசனை தரும் அழகு சாதன பொருட்கள் (COSMETICS)செய்ய, மரச் சாமான்கள் செய்ய, கட்டுமான வேலைகள் செய்ய, பழங்குடிகளுக்கு கிராமங்களில் விளக்கு எரிக்க, படகுகள் செய்ய, தொழிற்சாலைகளிL பயன்படுத்த, பெயிண்ட் வார்னிஷ் மற்றும் அவை தொடர்பான பொருட்கள் தயாரிக்க, அனைத்திற்கும் ஏற்றது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சொந்தமான இந்திய மரம்.

2. தாவரவியல் பெயர்: டிப்டிரோகார்பஸ் போர்டில்லோனி (DIPTEROCARPUS BOURDILLONI)

3.பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: எண்ணெய்மரம் (ENNAIMARAM)

இங்கிலீஷ்: நியூகினியா ரோஸ்வுட் (NEWFUINEA ROSEWOOD)

கன்னடா: வாலிமரா (VALEE MARA)

மலையாளம்:  வா வாங்கு வெள்ள அயனி (VAVANGU VELLA AYANI)

4. எண்ணெய்மரம் மிகவும் உறுதியான மரம் ஒரு கன அடி மரத்தின் எடை 54 பவுண்டு, இதன் வைரமரம் ஊதா நிறம் மற்றும் செங்காவி நிறமாக இருக்கும், தேக்கு மரத்தை விட கடினமான மரம் இது, ஒரு கன அடி தேக்கு மரத்தின் எடை 41 பவுண்டு தான்.

5. இதன் கட்டைகளை (TIMBER), ரயில் பாதை அமைக்கும் வேலையில் ஸ்லீப்பர் கட்டைகள், மின்சார கம்பங்கள், பெரும் தூண்கள், மற்றும் நீருக்கு அடியில் பயன்படுத்தும் பொருட்கள் செய்ய, என்று பல முக்கியமான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

6. மேற்கு தொடர்ச்சி மலையை தாயமாக கொண்ட மரம் இது, அதிக கேரள மாநிலத்தில் பரவி இருக்கும் மரம் ஆனால் அரசினால் மிக வேகமாக அழிந்து வரும் மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7.மிக உயரமாக, வாட்டசாட்டமாக வளரும் மரம், அதிகபட்சமாக 49 மீட்டர் உயரம் வளரும், அடிமரம் கனமாகவும், வளரும். இலைகள் பெரியதாக நீண்டதாக அகலமான இலைகளாக இருக்கும். 18 முதல் 45 சென்டிமீட்டர் நீளமும் 12 முதல் 25 சென்டிமீட்டர் அகலமும் உடையதாக இருக்கும். முட்டை வடிவமாக இருக்கும்

8. ஏறத்தாழ 1 1/2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இலையை விரித்து சாப்பிடலாம், அவ்வளவு பெரிய இலைகள்.

9. பூக்கள் இரு பாலின பூக்களாக, இலை கணுக்களில் தோன்றும் பூக்கள் கொத்துக்களாக தோன்றும். ஒவ்வொரு கொத்திலும் மூன்று முதல் ஐந்து பூக்கள் தோன்றும், பூக்கள் 3.5 முதல் 5.00 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும்.

10. இதன் கொட்டைகளைத் தான் பழங்கள் என்கிறோம், இரண்டு சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டவைகளாக இருக்கும் இந்த பழங்கள்.

11. கேரள மாநிலத்தில் பரவி இருக்கும் இடங்கள்:

இடுக்கி, கொல்லம், பாலக்காடு, மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள்.

12. இந்தியாவில் பரவி இருக்கும் மாநிலங்கள்:

தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா.

13. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகிவரும் மரம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த எண்ணெய் மரங்கள் இந்தியாவில் பரவி உள்ளன. குறைவான உயரம் உள்ள பகுதிகளில் வளரும் மரம், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைக் காடுகளில் வளர்ந்திருக்கும் மரம்.

14. பூக்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும், பழங்கள் மே மாத வாக்கில் முதிர்ச்சியடையும்,ப்பிஸ் இண்டிகா மற்றும் ஏப்பிஸ் டார்சேட்டா (APHIS INDICA, APHIS DORSATA)ஆகிய இரண்டு தேனீ இனங்கள் இந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.

15. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 இடங்களில் சுமார் 250 மரங்கள் மட்டுமே தற்போது உள்ளன என்று சொல்லுகிறார்கள். ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

16. பல வகைகளில் பயன்படும் இந்த மரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனில் இந்த மரங்கள் முழுமையாக காணாமல் போக வாய்ப்பு உண்டு.

17.  தற்போது கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்ற வித்தியாசம் இன்றி மரங்களை நடும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பணிகளில் ஈடுபடுவோர் இந்த மரங்களை தேடிP பிடித்து நடவு செய்யுமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

18. மேலும் சில இடங்களில் சிலர் விதை வங்கி என்று வைத்துள்ளார்கள். அவர்கள் முக்கியமாக இது போன்ற அரிய மர வகைகளின் விதைகளை சேமித்து அதனை விநியோகம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

19. இந்த மரங்கள் பிரபலமான மரங்கள் இல்லை. ஆயினும் பல பயன் தரவல்ல இது போன்ற மரங்களை நாம் தேடிப் பிடித்து அவற்றை நடுவதற்கு நாம் பழக வேண்டும்.

20.முகம் தெரியாத இது போன்ற மரங்களை தேடிப் பிடித்து எழுதுவதற்கு முக்கியமான காரணம் இது போன்ற மரங்கள் மறைந்து போகும் மரங்களாக ஆகி விடக்கூடாது என்பதுதான்.

21. நான் எழுதும் மர வகைகளில் பெரும்பாலானவை எனக்கு தெரியாத மரங்கள் தான். ஆனால் அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து, தூசுதட்டி, துடைத்து எடுத்து, மெருகு ஏற்றி, அவை தொடர்பான அறிவியல் செய்திகளை ஆங்காக்கே சேர்த்து உங்களுக்கு பரிமாற முடிகிறது என்றால் நான் கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

22. இவற்றையெல்லாம் எனக்கு முன்னாலேயே தேனீக்கள் போல சிறுசிறு தேன் துளிகளாக சேகரித்து வைத்துள்ள எனது முகம் தெரியாத எனது முன்னோடிகளுக்கும் நானும் நீங்களும்  நன்றி சொல்ல வேண்டும்.

23. ஏதாவது ஒரு மொழியில் பதிவு இப்படி செய்துவிட்டால், பிறகு புண்ணியவான்கள்  யாராவது ஆங்கிலம் ஹிந்தி என இதர மொழிகளில் எல்லாம் பிளந்துகட்டுவார்கள்.

24. பின்னர் இந்த மர வகைகள் எல்லாம் மீண்டும் நம் பழக்கத்திற்கு வந்துவிடும் புழக்கத்திற்கும் வந்துவிடும்.

25. இந்த மரங்கள் பெரிய உயரமான மரங்கள் என்பதால் இதில்ஒரு மரப் படகுகள் செய்யலாம். ஒரு பெரிய நீளமான மரத்துண்டை எடுத்துக்கொண்டு அதனை குடைந்து எடுத்து அதனை படக்காக தயார் செய்வார்கள்.

26. தைத்தான் ஆங்கிலத்தில் டக்அவுட்  கெனோ (DUGOUT CANOE)என்று என்று சொல்லுகிறார்கள்,தற்கு நான் ஒருமரப்படகு என்று  நாமகரணம் சூட்டி உள்ளேன்.

27. இந்த மரத்தின் கட்டைகளில் ஒட்டுப்பலகைகளில் தயார் செய்யலாம், மரங்கள் அவ்வளவு தரமான மரங்கள் என்று சொல்ல முடியாது.

28.சில மரங்களை சிறிதாக காயப்படுத்தினால் கூட அதில் பால் வடியும். அதுபோல இந்த மரத்தில் ஓட்டை போட்டால் எண்ணெய் வடியும். இதனை ஒலியோரெசின் (OLEO RESIN) என்று சொல்லுகிறார்கள். இந்த ஓட்டைகளை நெருப்பிட்டு லேசாக கொளுத்தினால், பழைய ஓட்டைகளில் புதிய எண்ணெய் வடியும். 

29. இப்படி இந்த மரங்களில் வடியும் எண்ணெயை எடுத்து திலிருந்து பயோடீசல் (BIO-DIESEL) தயாரிக்கலாம், மேலும் பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள்.

30. லியோ ரெசின் என்பது ஒரு தாவரத்திலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணை (ESSENTIAL OIL) மற்றும் பிசின் (RESIN) ஆகியவற்றின் கலவை. இது பெரும்பாலும் திரவமாக இருக்கும். ஆனால் அதில் பெரும் பகுதியாக இருப்பது அத்தியாவசிய  எண்ணைதான்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  


INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...