Monday, July 10, 2023

WHITE WILLOW CRICKET HELICOPTER SHOT SECRET TREE 244. தோனி ஹெலிகாப்டர் ஷாட்டின் ரகசியம்

 

தோனி ஹெலிகாப்டர் ஷாட் ரகசியம்


கிரிக்கெட் ஸ்பெஷல்
வெள்ளை வில்லோ மரம்

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு உதவியாக இருப்பது இந்த வெள்ளை வில்லோ மரத்தின் மட்டை தான். தோனி தனது கிரிக்கெட் மட்டைகளை எல்லாம் ஜலந்தரில் உள்ள ஒரு கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் கம்பெனியில் தான் வாங்குகிறார்.

தாவரவியல் பெயர்: சாலிக்ஸ் ஆல்பா (SALIX ALBA)

பொதுப் பெயர்: ஒயிட் வில்லோ (WHITE WILLOW)

தாவரக்குடும்பம்: சாலிகேசி (SALICACEAE)

கிரிக்கெட் ஆட்டத்திற்கு இந்தியாவில் பிரபலமான ஆட்டக்காரர்கள் என்று பார்த்தால் கபில்தேவ், டெண்டுல்கர், தோனி என்று அரை டஜன் பெயர்களை சொல்லலாம் ஆனால் கிரிக்கெட்மட்டை செய்ய தேவைப்படும் மரம் என்றால்  ஒரே ஒரு பெயரைத் தான் சொல்ல முடியும். அதுதான் வெள்ளை வில்லோ மரம். அது பற்றித் தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகிறோம்.

சச்சின் டெண்டுல்கர் சிறுவனாக இருந்த போது அவருடைய தமக்கை அவர் பிறந்த நாளில் பரிசாக கொடுத்தது காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் மட்டை தான். அதைச் செய்தது வெள்ளை வில்லோ மரத்தில்தான்.

மற்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் மட்டைகளை விட காஷ்மீர் வில்லோ மரங்களில் செய்யும் கிரிக்கெட் மட்டைகள்தான் உறுதியானவை மற்றும் வலுவானவை. சிக்ஸர் அடிக்க மிகவும் உதவியாக இருக்கும். அதற்குக் காரணம் இந்த வெள்ளை வில்லோ மரம்.

கிரிக்கெட் மட்டை செய்யும் மாநிலங்கள்

ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எல்லாம் வில்லோ மரங்களில் கிரிக்கெட் மட்டை செய்து  விற்பனை செய்கிறார்கள்.

கிரிக்கெட் மட்டை வில்லோ மரங்களை பிரிட்டனில் ஒரு சிறப்பு மரப்பயி ராக வளர்க்கிறார்கள்.

வெள்ளை வில்லோ மரங்களை விரும்பி சாகுபடி செய்வதற்கான ஒரே காரணம் கிரிக்கெட் மட்டை உற்பத்தி தான்.

இந்த வெள்ளை வில்லோ மரங்கள் ஒரே நேராக செங்குத்தாக வேகமாக வளரும் மரம்.

இதன் இலைகள் நீளமானவை நீளம் 10 முதல் 11 சென்டிமீட்டர்,  அகலம் 1.5 முதல் 2 சென்டி மீட்டர் இருக்கும்.இலைகள் நீம் கலந்த பசுமை நிறமாக இருக்கும்.

யூகே,வில் வளர்க்கும் வெள்ளை வில்லோ மரங்கள் கலப்பினமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

கனடா, வடஅமெரிக்கா, ரஷ்யா ஆகிய இடங்களிலும் வெள்ளை வில்லொ மரங்களை சாகுபடி செய்கிறார்கள். கிரிக்கெட் மட்டைகளை உற்பத்தி செய்யவும் செய்கிறார்கள்.

வளர் இயல்பு

30 மீட்டர் வரை உயரமாக வளரும். நடுத்தரமான மற்றும் பெரிய இலையுதிர் மரம். மரப்பட்டை சாம்பல் மற்றும் பழுப்பு நிறமாக இருக்கும். முதிர்ந்த மரங்களில் பட்டைகள் ஆழமான பிளவுகளுடன் இருக்கும். இலைகள் வெளிர் சாம்பல் பச்சை மற்றும் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் பெண் பூக்கள் தனித்தனி மரங்களில் பூக்கின்றன. குளங்கள், ஏரிகள், மற்றும் ஆற்றங்கரைகளில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

வேறு எந்த மரத்தில் செய்த மட்டைகளால் அடித்தால் ஹெலிகாப்டர் ஷாட் போகும் எனத் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். நன்றி

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...