Monday, July 31, 2023

WALNUT ANTIOXIDANTS RICH DRY FRUIT TREE 287.வால்நட் என்னும் அக்ரூட் கொட்டை மரம்

 

வால்நட் என்னும்
அக்ரூட் கொட்டை

WALNUT  ANTIOXIDANTS RICH 
DRY FRUIT

அக்ரூட் மரம் கொட்டைகளை மட்டுமல்ல மரக்கட்டைகளை தருவதிலும் பிரபலமானது. 

அக்ரூட்கொட்டை என அழைக்கப்படும் வால்நட்டை உலகம் முழுவதும் சாப்பிடுகிறார்கள். அதனால் இதனை வியாபார ரீதியாக அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்.. அக்ரூட் கொட்டைகளில் கொழுப்புச்சத்து புரதச்சத்து மற்றும் மாவு சத்து அதிகம் உள்ளன. மரச்செதுக்கல் மூலம் சிற்பங்கள் மற்றும் சிலைகள் செய்ய ஏற்ற அரிய மரம் இது, 

தாவரவியல் பெயர்: ஜுக்லன்ஸ் ரீஜியா (JUGLANS REGIA)

தாவரக் குடும்பம்: ஜெக்லண்டேசி (JUGLANDACEAE)

கிர்க்கிஸ்தான் பகுதியில் தான் இந்த வால்நட் மரங்களை உள்ளடக்கிய காடுகள் நிறைய உள்ளன. 1000 முதல் 2000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் மரங்கள் நன்கு வளர்கின்றன.

அக்ரூட் கொட்டைகளை அறிமுகம் செய்த மகா அலெக்சாண்டர் அதனை உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்தார். மகா அலெக்சாண்டர் வால்நட் மட்டுமல்ல பல பழங்கள் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்தவர். அலெக்ஸாண்டர் எங்கு படை எடுத்துச் சென்றாலும் அந்த நாட்டில் பிரபலமாக இருக்கும் பழங்களை தனது படை வீரர்களுக்கு வாங்கி பரிசாக தருவது அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அலெக்சாண்டரின்  படை வீரர்கள் மூலமாக பல நாடுகளில் இந்த பழங்கள் பரவியதாக தெரிகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் வால்நட் போன்ற உலர் பழங்கள் சாகுபடிக்கு பிரபலமானது.

ஆசியாவின் சீனா பிரான்ஸ் செர்பியா கிரீஸ் பல்கேரியா ருமேனியா ஹங்கேரி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் வால்நட் என்னும் அக்ரூட் கொட்டை மரங்கள் பரவியுள்ளன.

ஆசியாவில் சீனா மெக்ஸிகோ பஜாகலிபோர்னியா மற்றும் லத்தீனிய அமெரிக்காவிலும் பரவி உள்ளன.

அக்ரோட் கொட்டை மரங்களின் வளரியல்புகள்

அக்ரூட் கொட்டை மரங்கள் 25 முதல் 30 மீட்டர் உயரம் வளரும்.

இவை முழுமையான சூரிய ஒளியை விரும்பும். பட்டைகள் சாம்பல் நிறத்தில் வழு வழுப்பாக அகன்ற வெடிப்புகளுடன் இருக்கும்.

ஐந்து முதல் ஒன்பது  இலைகளை கொண்ட கூட்டு இலைகளாக இருக்கும். நீளமான காம்புகளில் ஆண் பூக்கள் அடர்த்தியாக இருக்கும். இதன் நுனிப்பகுதியில் இரண்டு முதல் ஐந்து பெண் பூக்கள் அமைந்திருக்கும்.

இப்போது அக்ரோட்டு கொட்டைகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். அக்ரூட் கொட்டைகளில் கொழுப்புச்சத்து புரதச்சத்து மற்றும் மாவு சத்து அதிகம் உள்ளன.

கீழே இருக்கும் அட்டவணையைப் பாருங்கள், 100 கிராம் அக்ரூட்டு கொட்டையில் இருக்கும் சத்துக்கள் விவரங்களைப் பாருங்கள்.

கொழுப்பு: 65.2 கிராம்

புரதம்: 15.2 கிராம்

மாவுப்பொருள்: 13.7 கிராம்

நார்ச்சத்து: 6.7 கிராம்

உயிர் சத்து பி6:  0.54 மில்லி கிராம்

மாங்கனீசு: 3.4 மில்லி கிராம்

தயமின்: 0.34 மில்லி கிராம்

செப்பு: 1.6 மில்லி கிராம்

மக்னீசியம்: 158 மில்லி கிராம்

துத்தநாகம்: 3.16 மில்லி கிராம்

பாஸ்பரஸ்: 346 மில்லி கிராம்.

அக்ரோட்டு மரம் குறித் இன்னொரு முக்கியமான செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள  நான்ஆசைப்படுகிறேன்.

இது ஒரு வித்தியாசமான செய்தி, சிற்பங்கள் மற்றும் சிலைகள் செய்ய ஏற்ற அரிய மரம் இந்த அக்ரூட் மரம்.

ஒரு காலத்தில் இந்த மரச்செதுக்கல் வேலை (WOOD CARVING) மிகவும் பிரபலமாக இருந்தது. இதனை காஷ்மீர் வால்நட் மரச் செதுக்கல் (KASHMIR WALNUT WOOD CARVING) என்று சொல்லுவார்கள். இந்திய அரசின் புவியியல் சார்ந்த குறியீட்டு எண் 2011 மற்றும் 12 ஆம் ஆண்டில், இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மச்செதுக்கல் வேலைப்பாடு இவர்களுக்கு பாரசீக நாட்டு கலைஞர்களால் சொல்லித் தரப்பட்டது.

அக்ரூட் மரங்களுக்கு இணையாக பல இந்திய மரங்கள் இது மாதிரி கடைசல் வேலைகளுக்கு ஏற்றவைகளாக உள்ளன. அந்த சமயம் அக்ரூட் மரம் போல இந்தியாவில்  நூக்க மரங்கள் இப்படி பயன்பட்டன என்று தெரிகிறது.

நமது ஈட்டி மற்றும் சிசு மரங்களை நாம் தமிழில்  நூக்க மரங்கள் என்கிறோம்.

தமிழ்நாட்டில் இப்படி கடைசல் செய்ய ஏற்ற மரங்கள் என்று ஒரு பெரும் பட்டியலைத் தயார் செய்யலாம். அப்படிப்பட்ட கலைஞர்களும் அப்போது இங்கு இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த மரச்செதுக்கல் வேலைக்காக புவியியல் குறியீட்டு எண் எதுவும் பெற்றதாக தெரியவில்லை.

அக்ரூட் மரம் கொட்டைகளை மட்டுமல்ல மரக்கட்டைகளை தருவதிலும் பிரபலமாக உள்ளது என தெரிகிறது.

அக்ரோடு மரம் பற்றிய வேறு புதிதாக ஏதும் செய்திகள் தெரிந்திருந்தால் எனக்கு பகிர்ந்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் காஷ்மீர் போனால் மறக்காமல் அக்ரோ ஒட்டு மரத்தின் செதுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளையும் வாங்கிக் கொண்டு 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...