Sunday, July 2, 2023

VANCHI KARUR PASUPATHEESWARAR STHALAVRIKSHA 219. கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஸ்தலவிருட்சம் வஞ்சி மரம்


கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர்
ஸ்தலவிருட்சம் வஞ்சி மரம்


(INDIAN WILLOW TREE)

தாவரவியல் பெயர்: சாலிக்ஸ் டெட்ராஸ்பெர்மா (SALIX TETRASPERMA)

தாவரக் குடும்பம் பெயர்: சாலிகேசியே (SALICACEAE)

தாயகம்: இந்தியா

பொதுப் பெயர்: இந்தியன் வில்லோ ட்ரீ (INDIAN WILLOW TREE)

எம்பெருமான் முருகன் ஓளவைக்கு பாடம் சொன்னது நாவல் மரத்தடியில்>; சிவபெருமான் பிரம்மாவுக்கு பாடம் சொன்னது வஞ்சி மரத்தடியில்.

கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலவிருட்சம் என்ற பெருமைக்கு உரிய மரம் வஞ்சிமரம் ; கரூர் வஞ்சிமா நகரம் என்றழைக்கக் காரணமாக இருந்த மரம் ; கரூர் மாநகரின் அடையாளம் வஞ்சி மரம்.

தமிழில் இதன் பெயர் வஞ்சி மரம். ஆங்கிலத்தில் இதன் பெயர் இண்டியன் வில்லோ. சாலிகேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. நடுத்தரமான அளவு வளரும் மரம். 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வஞ்சி மரத்தை சாகுபடி செய்கிறார்கள்; குறிப்பாக இந்தியா> பாகிஸ்தான்> நேபாளம,> லாவோஸ்> மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வஞ்சி மரங்கள் அதிகம் காணப்படுகின்றன் மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் பெயர் வாலுஞ் ; அங்கு பூனா> சதாரா> சாங்லி மற்றும் கோலாப்பூரில் வஞ்சி மரங்கள் அதிகம் தென்படுகின்றன.

வஞ்சி மரத்தின் பல மொழிப் பெயர்கள்

மிழ்:; வஞ்சி மரம்> ஆற்றுப்பாலை> நிர்வாணி (VANJI MARAM, ATRUPPALAI, NIRVANI)

பெங்காலி: பனிஜமா (PANIJAMA)

கம்போடியா: சம்பீட் (SAMBEAT)

இந்தி: பாதா> பத்லா> பைஷி> பின்சு> பெய்ன்ஸ்> பாத்> ஜல்மலூ> லைலா> சுக்குல் பெட் (BADHA, BADHLA, BAISHI, BINSU, BAINS, BADH, LAILA, SUKKUL BET)

இந்தோனேசியா: டாலு டாலு> லெரி (DALU DALU, LERI)

ஜவானிஸ்: அஞ்;சாங் அஞ்சாங் (ANJANG, ANJANG)

லாவோஷியன்: கைஸ்காவ்> கைஸ் கிவ்ஸ்> காய்ஸ் முன்ஸ் (KHAIZ KHAV, KHIZ NGIWS, KHAIZ MUNZ)

கன்னடா: நிரஞ்சி (NIRANJI)

மலேயா: டாலு டாலு> டெடாலு> மெர்நாலு ஏர்> சென்டாலு (DALU DALU, DEDALU, MERNALU AIR, SENDALU)

மலையாளம்: அரளி> ஆற்றுப்பலா> ஆட்டுப்பலா> புழப்பஞ்சி> வஞ்சி> வஞ்சி மரம் (ARALI, ATRUPPALA, ATTUPALA, PUZHAPANJI, VANJI, VANJI MARAM)

மணிப்புரி: ஊயம் (OOYAM)

சமஸ்கிருதம்: ஜால்வெட்டாஸ். வருணா (JALVETAS, VARUNA)

சூடானிஸ்: கப்பெ கப்பெ (KAPEH KAPEH)

தெலுங்கு: ஈட்டி பலா (EETI PALA)

தாய்: சானுன்> டானுன்> டா கிராய் போக்> களாய். கராய் நுன் (SANUN, TANUN, TA KRAI BOK, KHALAI, KHRAI NUN)

உருது: ர்க் பெய்ட் சாதா (BURG BAID SADA)

பூக்களில் ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை; பூக்கள் சரங்களாக பூக்கும்; ஆண் பூச்சரங்கள் 5 முதல் 10 சென்டி மீட்டரும்> பெண் பூச்சரங்கள் 10 முதல் 15 சென்டிமீட்டர் நீளமும் இருக்கும்; பூக்கள் ரம்மியமான வாசனை உடையவை;. மணிப்பூரில் இதன் பெயர் ஊயம். நம்ம ஊர் வடைபாயசம் மாதிரி ஊயம் மணிப்பூரின் ஸ்பெஷல்.

சாதாரண மரம் அசாதாரண மூலிகை

வஞ்சி ஒரு மூலிகை மரம். இலைகளை உலர்த்தி பொடியாக்கி அத்துடன் சுவைக்காக சர்க்கரை சேர்த்து மருந்தாக பயன்படுத்துகிறார்கள்; இதன் மூலம் மூட்டு வலி> வலிப்பு நோய்> பாலியல் தொடர்பான நோய்கள்>; சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல். பல வகையான மூல நோய்கள்>; உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தவும்> இதன் பட்டையை குடற்புழு அகற்றியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

வஞ்சி மரப்பட்டை காய்ச்சலை குணப்படுத்துகிறது; எகிப்து நாட்டில் பல காலமாக பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க இதன் இலைகள் மற்றும் பட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்; இலை மற்றும் வேர் கஷாயத்தை குழந்தைகளின் கக்குவான் இருமலுக்கு கொடுக்கிறார்கள் ; தேள்கடி> வண்டுக்கடிகாயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்த வேர் அல்லது இலைச் சாற்றினை பாதிக்கப்பட்ட  இடங்களில்; பூசுகிறார்கள்; ஹெப்படைட்டிஸ் வைரஸ் பாதிப்புக்கு நன்கு உலர வைத்த வேரிலிருந்து எடுக்கும் கஷாயத்தை மருந்தாகத் தருகிறார்கள்; குடற்புழு நீக்கம் செய்ய இதன் பட்டைச் சாற்றைத் தருகிறார்கள். ; டிஸ்மெனோரியாவை (DYSMENORRHEA)  குணப்படுத்த மரத்திலிருந்து எடுக்கும் சாற்றினை (STEM SAP) உபயோகப்படுத்துகிறார்கள்.; மரத்தின்  எல்லா பாகங்களிலிருந்தும் எடுக்கும்   சாற்றை> குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும்,; அபார்டிபேசியண்ட் (ABORTIFACIENT) ஆகவும் பயன்படுத்துகிறார்கள் ; பாகிஸ்தானில் பட்டைச் சாற்றினை புழுக்கொல்லியாக உபயோகிக்கிறார்கள். மேலும் காயங்களுக்கு இலைகளை மூட்டையாகக் கட்டி அதனால் ஒத்தடம் கொடுத்து குணப்படுத்துகிறார்கள்.; பங்களாதேஷ் நாட்டில் இதே சிகிச்சையை காய்ச்சலுக்கு அளிக்கிறார்கள்.

இந்தியாவில் வஞ்சி மரத்தின் வேர்கள் சர்க்கரை நோய்க்கான மருந்து. வலிப்பு நோய்> மூட்டு வலி> சிறுநீரகக்ல்>; ஹெமராய்ட்ஸ் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம் வஞ்சிமரப் பட்டைகள். 

இதன் மரங்களும் பலவிதங்களில் பயன்படும் பலவித பொருட்களை செய்யலாம். உதாரணம் பெட்டிகள்>; துடைப்பங்கள்,; கிரிக்கெட் மட்டைகள், குழந்தைத் தொட்டில்கள்> பொம்மைகள் மற்றும் விளையாட்டு சாமான்கள்.

திருஞான சம்மந்தர் பாடிய கோயில்

தமிழ்நாட்டில் சேர சோழ மன்னர்களின் தலைநகரமாக இருந்த பெருமைக்கு உரியது கரூர். இங்கு இருக்கும் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் தலவிருட்சம் வஞ்சி மரம்; பூராட நட்சத்திரத்தில் இங்கு சென்று வழிபடுவது சிறப்பு;.  கொங்கு நாட்டின் ஏழு சிவத் தலங்களில் ஒன்று. இன்று கரூர் என்று வழங்கப்பட்டாலும் இதன் பழைய பெயர் கருவூர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.

பிரம்மாவுக்கு ஒரு பாடம்

ஒரு சமயம் பிரம்மாவுக்கு உலகத்தின் படைப்புக் கடவுள் நாம் தான் என்ற அகங்காரம் மிகுந்துவிட்டது.;  அதனால் அவருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பினார் சிவபெருமான்.;  ஒரு சிறிய நாடகத்தை ஏற்பாடு செய்தார்.; அதன்படி தெய்வீகப் பசு காமதேனு கரூருக்கு வந்து வஞ்சிமரக் காட்டுக்குள் எறும்பு புற்றுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தை நோக்கி வழிபட்டு தவமிருக்கத் தொடங்கியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் பிரம்மாவிடம் இருந்த படைப்புத் தொழில் பொறுப்பை மாற்றி காமதேனுவிடம்; ஒப்படைத்தார். காமதேனு கருவூரில் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கியது. தனது தவற்றை உணர்ந்தார் பிரம்மர். மறுகணம் பிரம்மா கரூர் வஞ்சிக்காட்டு சிவலிங்கத்தை நோக்கி ஓடோடி வந்தார். மனமுருகி வணங்கி மன்னிப்புக் கோரி தவம் செய்யத் தொடங்கினார்.  சிவபெருமான் மனம் இறங்கினார் ; பிரம்மனின் படைப்புத் தொழிலை மீண்டும் அவருக்கே அருளினார்.;

இந்த சமயம் இன்னொரு சம்பவமும் நடந்தது; அடர்ந்த வஞ்சிமரக்காட்டுக்குள் இருந்த சிவலிங்கத்திற்கு தனது அமுதூறும் பாலைச் சொரிந்து அபிஷேகம் செய்தபோது அறியாமல் காமதேனுவின் குளம்பு சிவ லிங்கத்தின் மீது பட்டு ஒரு வடு உண்டானது.

அந்த வடுவினை இன்றும் கூட அந்த லிங்கத்தில் பார்க்க முடியும்.; அந்த இடத்தில்தான் பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்தது. இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக ஆனது வஞ்சி மரம்.; இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த ஆலயத்தின் நாயகர் பசுபதிநாதர் ஆனார். இந்த கோவிலும் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் ஆனது

ஒரு காலத்தில் வஞ்சி மரங்கள் நிறைந்திருந்ததால் இதற்கு வஞ்சிமா நகரம் அழைக்கப்பட்டது. தெய்வீகப் பசு காமதேனு தனது படைப்புத் தொழிலை தொடங்கியதால் கருவூர் என்ற பெயர்பெற்றது. பிரம்மன் தனது தவறுக்காக பரிகாரம் கோறி சிவனை வழிபட்டதால்  இதற்கு பிரம்மகிரி என்ற பெயரும் உண்டு.

வஞ்சி மரங்கள் இருக்கா ?

இந்தக் கோவிலின் தென் பகுதியில் ஒரு மகிழம்பூ மரம் உள்ளது. இதனை வணங்கினால் மனதில் அமைதியும் செல்வவளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியின் அடையாளம் என்று சொல்லும் அம்மரத்தை வணங்குவதும் மகாலட்சுமி வணங்குவதும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். கோவிலின் தலவிருட்சம் வஞ்சி என்றாலும் அங்கு தற்போது வில்வ மரங்கள் மட்டுமே பார்க்க முடிகிறது என்கிறார்கள்.; உங்கள் பகுதியில் எங்காவது வஞ்சி மரங்கள் உள்ளதா ? கோயில் வளாகத்தில் நடலாமே !

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு போகணுமா ?

கரூர் செல்ல ரயில் மூலம் செல்லலாம். பஸ் மூலம் செல்லலாம்.; விமானம் மூலம் கூட செல்லலாம். விமானம் மூலம் செல்வதென்றால் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கி பஸ் அல்லது காரில் கரூர் செல்லலாம்.

கோவில் முகவரி: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்> கரூர்> கரூர் மாவட்டம்> தமிழ்நாடு 639 001> தொலைபேசி எண்: 914324262010

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 8 30 மணி வரை.

References:

www.fromthehindu.com – Kamadenu Worshipped Siva Here, www.fromthetamil.oneindia.com – Thanneer Pirachinai Theera Vazhi seyyum Raasi, Nakshathira Marangal, www.staurtexchange.org – Salix tetrasperma

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...