அகர்பத்தி மூங்கில் டுல்டா |
இந்த மூங்கில் ரகத்தில் தான் அகர்பத்திகள் செய்ய தேவைப்படும்
குச்சிகளை செய்கிறார்கள். இதனை இந்தியன் பேம்பு (INDIAN
BAMBOO)என்கிறார்கள். ஸ்பைன்லெஸ் பேம்பூ (SPINELESS
BAMBOO) மற்றும் பெங்கால் பேம்பு(BENGAL BAMBOO) என்றும் கூட சொல்லுகிறார்கள். பேப்பர் தயாரிப்பில் கூட இதனை அதிகம்
பயன்படுத்துகிறார்கள்.
தாவரவியல் பெயர்: பேம்பூசா டுல்டா (BAMBUSA TULDA)
பொது பெயர்கள்:
பெங்கால் பேம்பு
இந்தியன் டிம்பர் பேம்பு
ஸ்பைன்லெஸ் இந்தியன் பேம்பு
தாயகம்: இந்திய துணைக்கண்டம் இந்தோசைனா, திபத்து மற்றும் யுன்னான்
தாவர குடும்பம்: போவேசி. (POACEAE)
இந்திய மூங்கில் இது. இந்தியா, இந்தோசைனா, திபத்து, சீனா ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது இந்த மூங்கில்.
வளரியல்புகள்
டுல்டா மூங்கில் 6 முதல் 23 மீட்டர் உயரமும், 8 சென்டிமீட்டர் அகலமும் உடையதாக வளரும். இளம்மரங்கள் இளம் பச்சை நிறமாகவும், முதிர்ந்த மரங்கள் சாம்பல் நிறம்
கலந்த பசுமை நிறமாகவும் இருக்கும்.
இதனை அகர்பத்தி மூங்கில் என்று சொல்லுகிறார்கள். காரணம்
இந்தியாவில் மட்டும் சுமார் 90 ஆயிரம் மில்லியன் டன் டுல்டா மூங்கிலை அகர்பத்தி செய்ய பயன்படுத்துகிறார்கள். சீனா மற்றும்
வியட்நாமில் இருந்து நமது தேவையில் சுமார் 60% மூங்கில் குச்சிகளை நாம் இறக்குமதி செய்து வருகிறோம்.
இறக்குமதியை கட்டுப்படுத்த விரும்பும் இந்திய அரசு
தற்போது இந்திய அரசு இறக்குமதிக்கான கட்டணத்தை அதிகம் ஆக்கி உள்ளது. இதற்கு காரணம் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். நம்மிடையே இந்த
மூங்கில் ரகம் இருக்கிறது ஆனால் அகர்பத்தி குச்சிகளை உற்பத்தி செய்யும் முயற்சி
இல்லாமல் இருந்தது. அதனை ஊக்கிவிக்கத்தான் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது இந்திய அரசு.
இப்போது நாம் இந்திய மூங்கில்கள் மற்றும் டுல்டா மூங்கில் பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம் இந்தியாவில் மொத்தம் 148
வகையான மூங்கில்களே உள்ளன. பெரும்பாலான
வகைகள் வடகிழக்கு மாநிலங்களில் தான் இருக்கின்றன. மேலும் தென் மாவட்டங்களிலும் தென்
மாநிலங்களிலும் ஈரம் மிகுந்த இலையுதிர் காடுகளிலும் கணிசமான அளவு மூங்கில் வகைகள்
பரவி உள்ளன.
மூங்கில் ராணி
மிசோரம் மாநிலத்தை மூங்கில் ராணி என்று சொல்லுகிறார்கள். காரணம்
இங்குதான் மூங்கில் காடுகளின் பரப்பளவு இந்தியாவிலேயே அதிகம்.
டுல்டா வேகமாக வளரும் மூங்கில்
உலகத்திலேயே அதிக வேகமாக வளரும் தாவரம் மூங்கில் தான். அந்த
மூங்கில்களில் கூட அதிக வேகமாக வளர்வது டுல்டா மூங்கில் தான் என்று
சொல்லுகிறார்கள். ஒரு நாளில் டுல்டா மூங்கில் 30 சென்டிமீட்டர் உயரம் வளரும். மழைக்காலத்தில்
அது 70 சென்டிமீட்டர் ஆக அதிகரிக்கும்.
எங்கு வளரும்
பலவிதமான மரங்களைக் கொண்ட இலையுதிர் காடுகள்,
பள்ளத்தாக்குகள், ஓடைக்கரைகள், கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்
உயரத்திற்குள் உள்ள பகுதிகள், ஆகியவற்றில் டுல்டா நன்கு வளரும்.
எப்படிப்பட்ட மண் வேண்டும்
ஈரமான மண் கண்டம் உடைய தாழ்வான நிலப்பகுதிகளில், கார அமில நிலை 4.5
முதல் 6.5 வரை உள்ள மண் வகைகளில், சீராக வளரும்.. பகல் நேர வெப்பநிலை 22
முதல் 28 டிகிரி சென்டிகிரேட் உள்ள இடங்களில் பிரச்சனை இன்றி வளரும். இதனால் 32 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கூட
தாங்கி வளரக்கூடிய சக்தி உடையது.
கிழங்குகள் நடவு
மூங்கில் விதைகளை விதைப்பதாக இருந்தால் விதைகளை எடுத்த ஒரு
மாதத்திற்குள் விதைக்க வேண்டும். அதன் முளைப்புத்திறன் 70% வரை இருக்கும். ஆனால் அதைவிட
சிறப்பு மூங்கில் கிழங்குகளை நடவு செய்வதுதான். 90 சதவீத கிழங்குகள் வெற்றிகரமாக முளைக்கும். ஒன்று முதல்
இரண்டு ஆண்டுகள் வயதுடைய மூங்கில் மரங்களில் இந்த கிழங்குகளை சேகரிக்க வேண்டும்.
60 சென்டிமீட்டர் நீள அகல ஆழமுள்ள குழிகளை எடுத்து குல்லா மூங்கில்
கன்றுகளை வரிசைக்கு வரிசையும் கன்றுக்கு
கன்றும் 8 மீட்டர் இடைவெளி
விட்டு நடவு செய்யலாம்.
ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ந்த மூங்கில்களை அறுவடை செய்ய
தொடங்கலாம். ஒரு குத்தில் மூன்று முதல் ஆறு இளங்கன்றுகளை விட்டுவிட்டு, அறுவடை
செய்யலாம். அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
பவுடர் போஸ்ட் வண்டுகள் (POWDER POST BEETLES)
அறுவடை செய்த மூங்கில் கொம்புகளை 10 முதல் 15 நாட்களுக்கு ஓடும் தண்ணீரில் அமிழ்த்தி வைத்து பதப்படுத்த வேண்டும். இதன் மூலம் பவுடர் போஸ்ட் பீட்டில் என்ற வண்டுகள் தாக்காமல் பாதுகாக்க முடியும்.
பயன்கள்:
கட்டுமானப் பணிகள், மேஜை நாற்காலி போன்ற சாமான்கள், கூடைகள், பாய்கள், வீடுகளில் பயன்படுத்தும் தட்டு முட்டுச் சாமான்கள், கைவினைப் பொருட்கள், காகித குழு தோட்ட பயிர் வயல்களில் காற்று தடுப்பான் அகர்பத்தி
குச்சிகள் என பல வகைகளில் பயனாகிறது புல் தான் மூங்கில்.
மூங்கில் பூக்கள் 25 முதல் 40 ஆண்டுகளுக்கு உள்ள மூங்கில் பூக்கும்.பூக்க ஆரம்பித்தால் இரு
ஆண்டுக்குள் தொடர்ந்து பூக்கும் மூங்கில் பூத்தால் அதன் வயது முடிந்தது என்று
அர்த்தம்.
ஆம் சொல்றா மூங்கில் உற்பத்தியில் கவனம் செலுத்தினால் சைனா வியட்நாம்
ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை மூங்கில் சாகுபடி
பற்றிய சந்தேகம் உங்களுக்கு ஏதாவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment