பாரம்பரிய மருத்துவ மரம் சிம்ப்லோகாஸ் மரம் |
TRADITIONAL TREE HERB SYMPLOCOS
232. பாரம்பரிய மருத்துவ மரம் சிம்ப்லோகாஸ் மரம்
(SYMPLOCOS TREE)
தாவரவியல் பெயர்: சிம்ப்லோகாஸ் புல்ச்ரா (SYMPLOCOS PULCHRA)
தாயகம்: ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஈரத்தன்மையுடன் கூடிய வெப்பமண்டலப் பகுதிகள்.
தாவர குடும்பத்தின் பெயர் சிம்ப்லோகேசி(SYMPLOCACEAE). இந்த தாவவரக் குடும்பத்தில் 300 வகை தாவர இனங்கள் உள்ளன.
இது ஒரு குறு மரம்
அல்லது பெருஞ்செடி. ஸ்ரீலங்கா மற்றும் மேற்கு தொடர்ச்சி
மலைப் பகுதியில் மறைந்து வரும் மர வகை என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8.50 மீட்டர் வரை உயரமாக வளரும்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி கேரளாவில் கொல்லம் பாலக்காடு கர்நாடகாவில் சிக்மகளூர் பகுதியில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்காவில் அருகிவரும் மரம் என அறிவித்துள்ளார்கள்.
சிம்ப்லோகேசியே தாவரக் குடும்பத்தில் சுமார் 300 வகையான தாவரங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில்
பரவியுள்ளன. இவற்றின் பெரும்பாலான தாவர வகைகள்
வெப்ப மண்டல பகுதிகளில் வளரும்.
இது மருத்துவ
பண்புகள் கொண்ட மரம். பாரம்பரிய மருத்துவத்தில் இதன்
இலைகள் மற்றும் பட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
யானைக்கால் நோய், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், கண் நோய்கள், குடற்புண், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும். மிகுதியான இரத்தப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்த இந்த மரத்தின்
இலைகள் பட்டைகள், வேர்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவை தவிர வீக்கம்
மாதவிலக்கு இன்மை மிகுதியாக ஏற்படும் மாதவிலக்கு, ஈரல் சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றை சரிசெய்யும்.
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment