Thursday, July 27, 2023

TRADITIONAL HERBAL TREE DEVIL FIG 276.பாரம்பரிய இயற்கை வைத்திய பழமரம் பேய்அத்தி

 

இயற்கை வைத்திய
பழமரம் பேய்அத்தி



தாவரவியல் பெயர்: ஃபைஸ் ஹிஸ்பிடா (FICUS HISPIDA)

பொதுப் பெயர்கள்: ஹேர்ரி ஃபிக், டெவில் ஃபிக், ஆப்போசிட் லீவ்டு ஃபிக் ட்ரீ, ரஃப் லீஃப் ஃபிக் (HAIRY FIG, DEVIL FIG, OPPOSITE LEAVED FIG, ROUGH LEAF FIG)

தாவர குடும்பம்: மோரேசி (MORACEAE)

பேய் அத்தி ஒரு சிறு மரம், உரோம அத்தி (HAIRY FIG)என்றும், இதனை சொல்லுகிறார்கள், பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்தியா முழுவதும் பரவியுள்ளது. காகங்கள், மர்ங்கொத்தி, மைனா, கிளிகள்,  உட்பட பல பறவைகளுக்கும் அணில், குரங்குகள் போன்ற வன விலங்குகளுக்கும், இருப்பிடமாக, உணவாக உபயோகமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல இயற்கை மருத்துவ முறைகளில் இதனை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா சீனா ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா யார்னாகிய நாடுகளில் நெடுங்காலமாக பேய் அத்திப்பழங்களை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் முக்கியமாக புற்றுநோய் சக்கர நோய் ரத்தசோகை குடற்புண் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்த வருகிறார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சிகள்

செய்யப்பட்டுள்ளன மூச்சு சம்பந்தமான அல்லது நுரையீரல் சம்பந்தமான நோய்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உடலின் ஏற்படும் காயங்கள் சர்க்கரை நோய் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

மொழிப் பெயர்கள்:

தமிழ்: பேய் அத்தி (PEY ATHI)

இந்தி: கோப்லா (GOBLA)

மராத்தி: பொகேடா (POKEDA)

மலையாளம்: எருமனாக்(ERUMANAAK)

தெலுங்கு; பொம்ம மெடி (BOMMA MEDI)

கன்னடா: காடாத்தி, கல்லத்தி,அடவி அத்தி (KADAATHI, KALLATHI, ADAVI  ATHI)

கொங்கணி: கார்வொட்டி (KARVOTI)

குஜராத்தி: டெட் உம்பார் (DHED UMBAR)

சமஸ்கிருதம்: காகாடும்பாரிகா (KAKADUMBARIKA)

நேபாளி: கொத்யா டுமாரி (KOTHYA DUMARI)

மணிப்புரி: ஹைபாங் (HEIBONG)

மிசோ: பெய்த்தி மெயின் (PAITHE MAIAN)

தாயகம்: ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள்

பேய் அத்தியை ரோமம் உள்ள அத்தி ஹேர்ரி பிக் என்றும் சொல்லுகிறார்கள். இதன் பழங்களை பல நூறு ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறார்கள், மருந்தாக பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதிகமாக சாப்பிட்டால் குமட்டி கொண்டு வரும் என்கிறார்கள், சிலர் தனை அதிகமாக சாப்பிடக்கூடாது என்று கறாராகச் சொல்லுகிறார்கள்.

பரவி உள்ள இடங்கள்

இந்த பேயத்தி மரங்கள், வட இந்தியா தென்னிந்தியா என்ற பாகுபாடு இல்லாமல், இந்தியா முழுவதும் பரவியுள்ளது.. அது மட்டுமல்ல இமயமலை பகுதிகளில், சுமார் 2000 மீட்டர் வரை உயரம் உள்ள இடங்களில் இவை பரவியுள்ளன.

ஆயுர்வேத மூலிகை

பேயத்தியை ஆயுர்வேத மருத்துவ மூலிகை என்றே சொல்லுகிறார்கள். தோல் அல்லது சரும நோய்கள், உடலில் ஏற்படும் காயங்கள், காய்ச்சல் ஆகிவற்றை குணப்படுத்துவதோடு தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் இது உதவியாக உள்ளது என்று சொல்லுகிறார்கள்.

பறவைகள் விரும்பும் பழங்கள், காகங்கள் பெருமளவு இந்த பழங்களை விரும்பி சாப்பிடும். அது மட்டுமல்ல, அது விருப்பமாக தனது கூடுகளையும் இந்த மரத்தில் கட்டுகின்றன. ஆனால் சமஸ்கிருதத்தில் அதனால் தான் சமஸ்கிருதத்தில் இதனை காக்கோடும்பாரி (KAKADUMBARIKA) என்று சொல்லுகிறார்கள்.

வளர் இயல்புகள்:

பேய்அத்தி ஒரு சிறு மரம் அல்லது பெரும் செடி, 15 மீட்டர் வரை உயரமாக வளரும். கிளைகள் எல்லாம் காவி அல்லது வெண்மை நிற ரோமம் அல்லது முடிகளால் மூடி இருக்கும். பழங்கள் இலை கணக்களில் அல்லது கிளைகளிலும் நீளமான காம்புகளில் தொங்கி கொண்டிருக்கும்.

பழங்கள் உருண்டையாக, 1.5 முதல் 2 1/2 சென்டிமீட்டர் அளவில் ஆலம்பழங்களைப் போல், அரசன் பழங்களைப் போல் உருண்டையாக இருக்கும்.

ஆனால் பழங்கள் பசுமை நிறமாகவும் பழங்களாக மாறும்போது மஞ்சளாகவும் மாறும். இந்த மரங்கள் ஆண், பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கின்றன. ஆண் மரங்களில் இரு விதமான பூக்கள் இருக்கின்றன. ஆண் பூக்கள் பெண் பூக்கள் என இருவகையாக பூக்கின்றன.

அன்பின் இனிய நண்பர்களே, பேயத்திக்கு அதன் கிளைகள் மீதிருக்கும் ரோமங்கள் மற்றும் பழங்களில் இருக்கும் ஒருவித நச்சுத்தன்மையும் அத்ற்கு அந்தப்பெயர் வந்த்தற்கு காரணம் என்று நினைக்கிறேன், வேறு காரணங்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள், இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேளுங்கள், நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...