Sunday, July 9, 2023

TITUN ARUM WORLD'S LARGEST UN-BRANCHED INFLORESCENCE 243. பெரிய கிளையில்லா பூங்கொத்து

 

உலகின் பெரிய கிளையில்லா
பூங்கொத்து டைடன் ஆரம்


பொதுப்பெயர்: டைட்டன் ஆரம் (TITUN ARUM)

தாவரவியல் பெயர் அமர்ஃபோபேல்லஸ் டைட்டானியம் (AMORPHOPHALLUS TITANIUM) 

தாவர குடும்பம்: ஆரேசியே (ARACEAE)

உலகிலேயே கிளையற்ற மிக நீளமான பூங்கொத்தையுடையது (BRANCHLESS INFLORESCENCE) இந்த அமர்ஃபோபேல்லஸ் பூங்கொத்து தான்.

உலகிலேயே அழகிய மாமிச வாடை வீசும் படியான பூக்களை உடையது இந்த அமர்போபேLலஸ் பூங்கொத்து தான்.

அதிகபட்சமாக 10 அடி நீளம் வரை உயரமாக வளர்ந்து பூக்கும். இதன் பூ பார்க்க நாட்டுசெக்கு மாதிரி தோன்றும். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் நட்டு வைத்த நாதஸ்வரம் மாதிரியும் உயரமான ஊமத்தம் பூ மாதிரியும் இருக்கும்.

பிராணிகளின் அழகிய மாமிசத்தை சாப்பிடும் வண்டுகளை கவர்வதற்காக தான் பிரத்தியேகமான பிண வாசனை கொண்டவைகளாக உள்ளன இந்த பூக்கள்.

மாமிச வண்டுகள் மற்றும் ஈக்கள் தான் இந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.

இந்த பூங்கொத்து பார்க்க மரம் போல காட்சி தரும். இதன் இலைகள் 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டவைகளாக இருக்கும்.

புதிய செடிகளை உருவாக்க இதன் கிழங்குகளை நட வேண்டும் ஒரு கிழங்கு அதிகபட்சமாக 150 கிலோ வரை எடை இருக்கும்.

இந்த அதிசய பூ மரத்தின் சொந்த ஊர் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு. இது உலகின் மிகப்பெரிய ஆறாவது தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பூ மரம் அருகி வரும் தாவரம் அல்லது அழிந்து வரும் தாவரம். அதாவது எண்டமிக் டூ சுமத்ரா (ENDEMIC TO SUMATHRA)என்று அறிவித்துள்ளார்

இந்தோனேசியாவில் இந்த பூவின் பெயர் பங்கா பங்கை (BUNGA BHUNGAI) என்பது இந்தோனேசிய மொழியில் பங்கா என்றால் பூ பங்கை என்றால் பிணம்.அதாவது பிண வாடகை வீசும் பூ என்று அர்த்தம் இந்த பூ பூக்க ஆரம்பித்ததும் பிண வாடை வீசும்.

கேரியான் ஈட்டிங் பீட்டில் (CARRION EATING BEETLE)மற்றும் இறைச்சி ஈக்கள் (FLESH FLIES)ஆகியவை இந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.

இதில் பெண் பூக்கள் முதலில் பூக்கும், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துத் தான் ஆண் பூக்கள் மலரும். அதனால் தன் மகரந்த சேர்க்கையை தடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

பூக்கள் வளர்ந்த இடத்தில் மண்ணில் கிடங்குகள் இருக்கும் அதிலிருந்து ஒற்றை இலை வளரும். இது மூன்று பிரிவாய் பிரிந்து 20 அடி உயரத்திற்கு வளரும். அந்த இலை வளர்ந்து மடிந்த பின்னால் புதியதாய் மீண்டும் பூக்களை உருவாக்கும்.

லண்டனில் உள்ள ராயல் நியூ கார்டனிலும், நியூயார்க் பொட்டானிக்கல் கார்டன்களும், இந்த பண வாய்ப்புச் செடியை வளர்க்கிறார்கள். இரண்டு இடங்களுக்கும் நான் நேரில் போய் இருந்தேன். ஆனால் இந்த பூக்களை பார்க்கவில்லை.

இந்த டைட்டன் ஆரம் பூபற்றி வேறு சுவாரஸ்யமான தகவல் ஏதும் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

1 comment:

Yasmine begam thooyavan said...

பூக்கள் என்றாலே மணம் தான் அதன் குணாதிசயமாக இருக்கும். ஆனால் இந்த பூவோ பிண வாடை உள்ளது என்பது ஆச்சரியம் மான விஷயம்.
இந்த பூவை பார்க்கும் போது உரித்து வைத்த வாழைப்பூவை நினைவு படுத்துகிறது.
பிரமிக்க வைக்கும் நல்ல தகவலை அள்ளி தரும் தங்களுக்கு வாழ்த்துகள்.

நன்றி.

ஏ.யாஸ்மின் தூயவன் எழுத்தாளர்.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...