புலிநகக்கொன்றை |
TIGER’S CLAW CURES HUMAN DISEASES |
இந்தியாவில்
சொந்த மரம் போல மாறிப்போனது புலிநகக்கொன்றை, எனும் பேய்கொன்றை, மூன்றடி உயரம் வரை செங்குத்தாக வளரும் பெருஞ்செடி, பார்க்க புலி நகம் மற்றும் பாம்பின் தலை மாதிரியும் தோன்றும். பார்க்க
அமானுஷ்யமாக இருப்பதால் இதனை பேய்
நகம் என்றும் அழைக்கிறார்கள், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் மருத்துவ முறைகளில் பலவிதமான
நோய்களை கட்டுப்படுத்த வெகுகாலமாக பயன்படுத்து வருகிறார்கள்.
தாவரவியல்
பெயர்; மார்ட்டீனியா டயாண்றா (MARTINIYA DIANDRA)
தாவரக்
குடும்பம்: பெடலியேசி
அல்லது மார்ட்டினியேசி (PEDALIACEAE / MARTINIACEAE)
தாயகம்: மத்திய
அமெரிக்காவிற்கு சொந்தமானது ஆனால் இந்தியாவில் சொந்த மரம் போல மாறிப்போனது
பொது
பெயர்கள்: டைகர்ஸ் கிளா,
ஸ்னேக்ஸ் ஹெட், டெவில்ஸ் கிளா,
கேட்ஸ் கிளா (TIGER’S
CLAW, SNAKE’S HEAD,DEVIL’S CLAW, CAT’S CLAW )
பலமொழிப்
பெயர்கள்
தமிழ்:பேய்நகம் புலிநகம், தேள்கொடுக்கி, காக்காமூக்குசெடி (PULINAGAM, THELKODUKKI, KAKKAMUKKUSEDI)
பெங்காலி:
பாக்நாக்கி (BHAGNAKHI)
இந்தி:
பாக்நாக் (BAGHNAKH)
கன்னடா:
கருடமுகமுள்ளு(GARUDAMUGAMULLU)
மலையாளம்:
புலிநகம் (PULINAGAM)
மராத்தி: வின்
சாவி (VINCHAVI)
நேபாளி: பிர்லொநக்ரி
(BIRLONAGRI)
ஒரியா:
பகநாக்கி (BAGHA
NAKHI)
சமஸ்கிருதம்: காக்கநாசா (KAKASASA)
தெலுங்கு:
கருடமூக்கு (GARUDAMUKKU)
புலி நக கொன்றை வளரியல்புகள்
புலிநகக்கொன்றை
ஒரு பெருஞ்செடி, மூன்றடி உயரம் வரை செங்குத்தாக வளரும். செடிகளின்
மீது சுரப்பியுடன் கூடிய ரோமம் மூடி இருக்கும். பூக்கள்
7 முதல் 14 பூக்களை
கொண்ட பூங்கொத்தாக இருக்கும். பூக்கள் நீளவட்டமாக
பூவிதழ்கள்
சிவப்புகூடிய ஊதாநிறமாக இருக்கும். பூவின்
தொண்டைபகுதியில் மஞ்சள்நிற புள்ளிகள்
இருக்கும். பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும்..
இதன்
பழங்கள் நீள் வட்டமாக, கொஞ்சம் தட்டையாக, இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளமுடையதாக, அதன்
நுனியில் கொக்கி மாதிரியான இரு
முள்ளுடன் இருக்கும்.
மொத்தத்தில் பார்க்க புலி நகம் மற்றும் பாம்பின் தலை மாதிரியும் தோன்றும். பார்க்க
அமானுஷ்யமாக கூட தோன்றும். அதனால் தான் அதனை பேய் நகம் என்றும் அழைக்கிறார்கள்.
தாயகம்:
மெக்சிகோ, சென்ட்ரல் அமெரிக்கா, மற்றும் கருபியன் ஆகிய நாடுகள் தான் புலிநகத்தின் சொந்தமண். ஆனால்
உலகம் முழுவதும் வெப்பமண்டல பகுதிகளில் பரவியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கிராமப்புற முழுவதிலும் பரவி உள்ளது.
இந்தியாவில் மணிகள் மற்றும் இதர அணிகலன்கள் செய்ய வெகு காலமாக பயன்படுத்தி
வந்துள்ளார்கள். தவிரவும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெகுகாலமாக இந்திய துணை கண்டம் முழுக்க
பயன்படுத்தி வருகிறார்கள்.
புலிநகக் கொன்றை
பழங்களில் உள்ள கொக்கிகள் அங்கு மேயவரும் ஆடு மாடுகளின் உடலில் ரோமங்களில்
மாட்டிக்கொள்ளும். அதன் மூலம் இந்த விதைகள் பல இடங்களுக்கும் பரவும்.
ஆயுர்வேதம்
மற்றும் சித்த மருத்துவம் மருத்துவ முறைகளில் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்த புலிநகக்கொன்றையை
பலவிதமாக பயன்படுத்துகிறார்கள்.
சிகிச்சை
தரும் நோய்களின் பட்டியல்
வலிப்புநோய்,
தொண்டைப்புண், எரிகாயங்கள், அரிப்பு, சருமநோய்கள், தேள்கடி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்த இயற்கை
மருத்துவ முறைகளில் புலிநகக்கொன்றையைப்
பயன்படுத்துகிறார்கள்.
புலிநகக்கொன்றைக்கு என்னென்ன
பெயர்கள் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். பேய்நகம், பாம்புதலை, புலிநகம் மற்றும் பூனைநகம். நாட்டு
வைத்தியர்கள் இதனை பாம்புகடிகுக் கூட
விஷமுறிப்பானாக பயன்படுத்துகிறார்கள்.
இதன்
பழங்கள் முதிரும் சமயம் தசையுடன் கூடியதாக இருக்கும்.
காய்ந்து நெற்றுக்காக மாறிய பின்னர்தான் அதனுடைய புலி நகத்தோற்றம் அதிலிருந்து
வெளிவரும்.
புலி
நகக் கொன்றையின் இலைகள், சிறுநீரகங்கள் மாதிரி தோராயமான வட்ட வடிவில், 6 முதல் 15 சென்டிமீட்டர் அகலமாக இலைகளின் இருபுறமும்
ரோமங்களால் மூடி இருக்கும். இதன் காம்புகள் நீளமானவை. ஒன்பது முதல் 14 சென்டிமீட்டர் வரை நீளமாக இருக்கும்.
புலிநகக்கொன்றையின்
நெற்றிக்கள் கருப்பு
நிறமாக இருக்கும். ஒவ்வொரு நெற்றிலும் இரண்டு கருப்பு அல்லது காவிநிற விதைகள் இருக்கும்.
ஒட்டும்
தன்மை கொண்ட ரோம இலைகள் மற்றும் தண்டுகளின்
மேல் ரோமங்கள் மூடி இருக்கும். இவை ஒட்டும் தன்மையுடன் இருக்கும். தொட்டுப்
பார்த்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டிக்
கொள்ளும்..
குழாய்
போன்ற அமைப்பு உள்ள பூக்கள் அடிப்பக்கம் குறுகலாகவும் நுனிப்பக்கம் அகலமான
வாயுடனும், அழகான ஊதா மற்றும் வெண்மை நிற இதழ்களுடன்,
தொண்டையின் உட்புறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகளுடனும் இருக்கும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment