Monday, July 17, 2023

THILLAI TEMPLE TREE OF THILLAI NATARAJA TEMPLE 259. தில்லை நடராஜர் ஆலயத்தின் கோவில்மரம் தில்லை

 

தில்லை  நடராஜர் ஆலயத்தின்
கோவில்மரம் தில்லை 


தில்லை  கோவில்மரம் தில்லை 

பொதுபெயர்கள்: பிலைண்டிங் ட்ரீ, மில்கி மேங்குரோவ், ரிவர் பாய்சன் ட்ரீ(BLINDING TREE, MILKY MANGROVE, RIVER POISON TREE)

தாவரவியல் பெயர்: எக்ஸ்கோகேரியா அகலோச்சா (EXCOECARIA AGALOCHA)

தாவரக் குடும்பம்: யூப்போர்பியேசி (EUPHORBIACEAE)  

தில்லை மரம், இதன் பால் கண்களில் பட்டால் கண்களை குருடாக்கிவிடும். மீன் நஞ்சாக இதனை பயன்படுகிறது, அத்தோடு மருத்துவ பண்புகள் உடைய மரமும் கூட, மூட்டுவலி, முடக்குவாதம் உட்பட பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி உடைய மூலிகை, அலையாத்தி மரங்களோடு நட்பாக உள்ள மரம், மிகவும் நெருக்கமான உறவுடைய மரம். ஆக தில்லை அலையாத்தி மரம் இல்லை.

மொழிப்பெயர்கள்:

பெங்காலி: கேவா (GEWA)

இந்தி:கேங்கிவா (GANGIVA)

கன்னடா: ஹாரா (HARA)

கொங்கணி:உசோ (USO)

மலையாளம்: கூமாட்டி ()

மராத்தி: கேவா (GEWA)

ஒரியா: குவான் (GUAN)

சமஸ்கிருதம்:அகரு(AGARU):

தெலுங்கு: டெல்லா (TELLA)

தமிழ்: தில்லை, அகதி,  ஆக்கொல்லி, அம்பல விருட்சம், அம்பலத்தி, ஆடிய கூத்தன், கொக்கு மேனி,  பருவி, வரிவனம் (THILLAI, AKATHI, AKKOLLI, AMBALA VIRUTCHAM, AMBALATHI, ADIYAKUTHAN, KOKKUMENI, PARUVI, VARIVANAM).

தெலுங்கு: டெல்லா (TELLA)

மருத்துவ பயன்கள் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் அலையாத்தி மரங்கள் அத்தனையும் மருத்துவ பண்புகள் கொண்டவை. இதன் இலைகளை உலர வைத்துத் தூளாக்கி மீன் நஞ்சாக பயன்படுத்தலாம். வலிப்புநோய், தொழுநோய் முடக்குவாதம், மூட்டு வலி, ஆகியவை அனைத்தையும் குணப்படுத்தும் திறன் உடையது இந்த தில்லை மரம்.

வளரியல்புகள் அதிகபட்சமாக 15 மீட்டர் உயரம் வளரும் சிறிய மரம், மரத்தின் பட்டைகள் சாம்பல் நிறம் கலந்த காவி நிறத்துடன் நீலவாக்கிலான வெடிப்புகளுடன் இருக்கும். வேர்கள் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக ஓடும். மரத்தின் இலை தண்டு தளிர் என்று எதனை காயப்படுத்தினாலும் அதிலிருந்து பால் வடியும், இந்த பால் கண்ணில் பட்டால் அவ்வளவுதான், பார்வை போய்விடும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தின் பழைய பெயர் தில்லை. ஒரு காலத்தில் இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் தான் அதனை தில்லை என்று அழைத்தார்கள்.

சிதம்பரத்தில் உள்ள  உள்ள சிவன் கோவிலின் தலவிருட்சம் தில்லைமரம் தான். இன்று சிதம்பரத்தில் தெில்லை மரங்கள் ஏதுமில்லை. ஆனால் சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரத்தில் ப்பங்கழிகளில், தில்லை மரங்கள் இன்றும் அதிகமாக உள்ளன. தில்லை மரங்கள் பற்றி ஏராளமான செய்திகள் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளன.

அவற்றில் சில தில்லைமர காய்கள் முனிவர்களின் சடை முடி போல காய்த்து குலுங்கும்.

குறிஞ்சி நிலத்து பெண்கள் வைத்து விளையாடிய மலர்களில் தில்லையும் ஒன்று.

ப்பங்கழிகளில் தாமரையும், தில்லையும் வளரும். பல ஊர்களில் தில்லை மரங்கள் இயற்கை வேலியாக அமைவதுண்டு.

அறிவியல் ரீதியாக தில்லை மரத்தை அலையாத்தி மரம் என்று சொல்லுவதில்லை..உண்மையில் தில்லை மரம் அலையாத்தி மரம் அல்ல. ஆனால் அலையாத்தின் நட்பு மரம். மிகவும் நெருக்கமான உறவு உள்ள மரம்.

இதற்கு காரணம், இதன் இலைகளில் உப்பு சுரப்பிகள் எதுவும் கிடையாது. மூச்சு வேர்கள் எதுவும் கிடையாது. அதனால்தான் இதனை அலையாத்தி மரங்களின் நட்பு மரம் என்று சொல்லுகிறார்கள்.

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் எக்ஸ்கோகெரியா அகலோச்சா என்பது க்ஸ்கோகேரியா என்பது லத்தினிய வார்த்தை. அதற்கு அர்த்தம் கண்களை குருடாக்கும் என்பது.

தில்லை மரம் பற்றி பல செய்திகளை பார்த்தோம், அதன் பால் கண்களில் பட்டால் குருடாகி விடும் என்று பார்த்தோம்,.ஒரு காலத்தில் சிதம்பரத்தின் பெயர் தில்லைவனம் என்று தெரிந்து கொண்டோம். அங்குள்ள சிவன் கோவிலின் தலவிருட்சம் தில்லை மரம் என்பதையும் தெரிந்து கொண்டோம். அத்தோடு இன்று சர்வதேச அளவில் அலையாத்தி மரக்கடுகளுக்கு  பிரபலமான ஊராக திகழ்வது பிச்சாவரம். அதுமட்டுமல்ல நான் முதன்முதலாக 1972 ம் ஆண்டு, பிச்சாவரம் பகுதியில்தான் விவசாய அதிகாரியாக வேலை பார்த்தேன்.

வேறு ஏதாவது சுவையான தகவல் உங்களுக்கு இது பற்றி தெரிந்து இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...