Sunday, July 30, 2023

TAMIL SANGA PERIOD BEAUTY GNAAZHAL 284.சங்க இலக்கிய கால தமிழ் மரம் ஞாழல்

சங்க இலக்கிய கால
தமிழ் மரம் ஞாழல்  


தாவரவியல் பெயர்; சென்னா  சொபேரா (SENNA SOPHERA)

பொதுப்பெயர்: காப்பர் லீவ்டு சென்னா (PEPPER LEAVED SENNA)

தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்திலிருந்து தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய மரம், தமிழிலக்கியத்தில் பரவலாக பேசப்பட்டிருக்கும் மரம், இந்தியா முழுக்கவும் மற்றும் உலகில் வெப்ப மண்டல பகுதிகளிலும் பரவி இருக்கும் சிறு மரம், தரிசு நிலங்களிலும் சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும் மரம், மத்திய அமெரிக்காவுக்கு சொந்தமான மரம் என்றாலும் இமயமலை பகுதிக்கு உரிய மரம் போல பரவி இருக்கும் அழகுமரம்,  உணவாகவும் மருந்தாகவும் உபயோகமாகும் மரம் ஞாழல். 

மொழிப் பெயர்கள்:

இந்தி: கசோண்டா (KASONDA)

கன்னடா:எலஹுரி (ELAHURI)  

மணிப்புரி: தொவனம் (THOVANAM)  

மராத்தி: கஷவாடா (KASHAVADA)  

தமிழ்: பொன்னவரை (PONNAAVARAI)  

தெலுங்கு: பைடி (PYDEE)  

மிசோ: ரென் ஆன் சி காட் (REN-AN-CHI-KHAT) :

தாவரக் குடும்பம்: ஃபேபேசி (FABACEAE)

பயன்கள்

மடகாஸ்கர் நாட்டில் ஞாழல் இளம் இலைகளை காய்கறியாக சமையலில் பயன்படுத்துகிறார்கள். இதன் விதைகள் வறுத்த இலைகள் ஆகியவற்றை காப்பி தூளுக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள்.

ஞாழல் பூக்கள் மிகவும் அழகானவை, அதனால் இந்த மரங்களை அழகு மரங்களாக பல நாடுகளிலும் வளர்க்கிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஞாழல் இலைக் கசாயத்தை சாதா காய்ச்சல் மற்றும் மலேரியாவுக்கு மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் உள்ளது.

ஞாழல் இலைகளில் தயாரிக்கும் இலை வடிநீரை பயன்படுத்தி கண் நோய்களை குணப்படுத்துகிறார்கள். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த இதன் வேர் கசாயத்தை சாப்பிடுகிறார்கள்.

இந்தோனேசியாவில் வலிப்பு நோயை குணப்படுத்தவும், இந்தியாவில் வயிற்று பூச்சிகள், மூட்டுவலி, காய்ச்சல் மற்றும் தாய்லாந்தில் உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும் ஞாழலை பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக இந்தியா மேற்கு ஆப்பிரிக்கா இந்தோனேசியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஞாழல் மருந்தாக பயன்படுகிறது.

காய்ச்சல் மலேரியா கண்ணோய் மாதவிடாய் வயிற்று வலி வயிற்றுப் பூச்சிகள் மூட்டு வலி காயங்கள் ஆகிய நோய்களை குணப்படுத்த ஞாழல் மரத்தின் இலைகள் பூக்கள் மற்றும் வேர்களை பயன்படுத்துகிறார்கள் பல நாட்டினர்.

ஞாழல் மரத்தின்  உலர்ந்த இலைகளில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது, முக்கியமாக சேமிப்பில் உள்ள தானியங்களை சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உபயோகமாகிறது.

ஞாழல் பூக்கள் ஆண்டு முழுவதும். மழைக்கு பின்னால் அதிக அளவில் பூக்கும்.

ஞாழல் பரவியிருக்கும் இடங்கள்

உலக நாடுகளில் ஆஸ்திரேலியா வெப்பமண்டல அமெரிக்கா தென்கிழக்கு ஆசியா மலேசியா மற்றும் சைனா ஆகிய நாடுகள்.

இந்தியாவில் அசாம் மேகாலயா பிரம்மபுத்திர பள்ளத்தாக்கு மற்றும் பாரக் பள்ளத்தாக்கு.

கேரளாவில் கோட்டயம் ஆலப்புழா காசர்கோட் இடுக்கி புத்தனம்திட்டா கண்ணூர் கொல்லம் வயநாடு ஆகிய இடங்களில் ஞாழல் பரவி உள்ளது.

சங்க இலக்கிய காலத்தில் ஞாழல் பூக்கள் பிரபலமாக இருந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் குமரி பெண்கள் இதன் பூக்களை விரும்பி தலையில் சூடுவார்கள். அதனால் இதனை குமரிஞாழல் என்றும் கன்னிஞாழல் என்றும் சொல்லுவார்கள்..

ஞாழல் மரத்தின் பூக்கள் அரைத்த மஞ்சள் நிறத்திலும் பொன் நிறத்திலும் இருக்கும்.

ஞாழலும் புலிநகக் கொன்றையும் ஒன்று என பல பதிவுகளில் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் சில பதிவுகளில் கல்யாண முருங்கையை புலி நகக் கொன்ற என குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டும் சரியல்ல எனத் தெரிகிறது.

ஆனால் கல்யாண முருங்கையின் பூக்கள் புலி நகம் மாதிரி இருக்கும் இன்னொரு மரத்தின் பூவும், புலி நகம் மாதிரி இருக்கும் அது புரசு மரம்

இவற்றில் எதுவும்  ;டைகர்கிளா' மரங்கள் இல்லை. ஞாழல் மரத்தை புலி நகக் கொன்றை என்று சொல்லுவதும் சரி அல்ல. 

டைகர்கிளா என்ற பெயரில்  நான்கைந்து  நகங்களை உடையது போன்ற ஒரு ஆயுதம் ஒன்று   நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது குங் பூ சண்டைகளில் சீன நாட்டில் இதனை பயன்படுத்துகிறார்கள். என்டர் த டிராகன்என்ற படத்தில் இந்த டைகர்கிளா ஆயுதத்தை  வைத்து புரூஸ்லீயுடன் சண்டை போடுவார் அந்த படத்தின் பிரதான வில்லன்.

இன்னொரு செய்தி த டைகர் கிளா ட்ரீ” என்ற தலைப்பில் பி ஏ கிருஷ்ணன் என்ற எழுத்தாளர் ஒரு ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவல் ஒன்றினை எழுதி உள்ளார் இந்த நூல் 1998 ஆம் ஆண்டு பெண் குயின் வெளியீடாக ஆங்கிலத்தில் வந்தது. அவரை இப்போது அதனை தமிழில் வெளியிட்டுள்ளார். அதனை காலச்சுவடு  பதிப்பகம் வெளியிட்டுள்ளது 

அன்பின் இனிய நண்பர்களே டைகர் கிளா ட்ரீ’ என்பதன் தமிழ் பெயர் புலிநகக் கொன்றை. அது வேறு ஞாழல் என்பது வேறு, அதுபற்றி வேறு  கட்டுரையில் பார்க்கலாம். இதுபற்றி புதியதாக தகவல் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...